Published:Updated:

உடலினை உறுதி செய்!

உடலினை உறுதி செய்!
பிரீமியம் ஸ்டோரி
News
உடலினை உறுதி செய்!

ஆண்ட்ராய்டு அகிலம்கருப்பு

உடலினை உறுதி செய்!

7 Minute Workout 

உடலினை உறுதி செய்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெண்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள நினைத்தாலும், ஜிம் செல்வதற்கு நேரம் கிடைப்பதில்லை எனப் பலரும் குறைபட்டுக் கொள்வதைப் பார்த்திருப்போம். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே ஒவ்வொரு நாளும் வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்ய இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. உடல் எடையைக் குறைக்கவும் உடலினை உறுதியாக வைத்துக்கொள்ளவும் இந்த அப்ளிகேஷனில் பலவிதப் பயிற்சிகள் பற்றிய விவரங்களும் வீடியோக்களும் உள்ளன. தினமும் உடற்பயிற்சி செய்ய நினைவூட்டுவதுடன், நாம் தினமும் தவறாது உடற்பயிற்சி செய்கிறோமா என்பதையும் இது ட்ராக் செய்கிறது. உடற்பயிற்சி செய்ய வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுவதால், பெண்கள் பலருக்கும் இந்த அப்ளிகேஷன் பெரும் உதவிகரமாக உள்ளது.

Sweet ‘N’ Spicy  

உடலினை உறுதி செய்!

மைப்பதைவிட, என்ன சமைக்கலாம் என முடிவெடுக்கவே நமக்கு அதிக நேரம் தேவைப்படும். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் சமைப்பதே சவாலான காரியம்தான்.   ஸ்வீட் & ஸ்பைசி அப்ளிகேஷன் இந்தப் பிரச்னையில் பெண்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் சேர்த்து மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெசிப்பிகளை இந்த அப்ளிகேஷன் பட்டியலிடுகிறது. மேலும், அதில் உள்ள ரெசிப்பிகளைச் சமைக்கத் தேவையான பொருள்கள், டிப்ஸ், கலோரி அளவு என உபயோகமான பலவித அம்சங்கள் இதில் இருக்கின்றன. பயன்படுத்திய பெரும்பாலான பெண்கள் இந்த அப்ளிகேஷனுக்கு நல்ல ரேட்டிங் கொடுத்துள்ளனர்.