Published:Updated:

ரஜினி... கமல்... பிரபு... மூணு பேருக்குமே பிடிச்ச பேர் அது!

ரஜினி... கமல்... பிரபு... மூணு பேருக்குமே பிடிச்ச பேர் அது!
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி... கமல்... பிரபு... மூணு பேருக்குமே பிடிச்ச பேர் அது!

ஹோம் தியேட்டர்வே.கிருஷ்ணவேணி - பா.விஜயலட்சுமி

‘`தமிழ் சரியா பேச வரலைங்கிறதை பொயட்டிக்கா கலாய்க்கிறீங்களா? என்ன செய்யறது... இத்தனை வருஷங்களா எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்குத் தமிழ் இன்னும் சரளமா வரலை. ஒரு மாசமா தமிழ் டீச்சரை வெச்சு தமிழ் கத்துக்கிட்டது, ‘முப்பது நாள்களில் தமிழ் கற்றுக்கொள்வது எப்படி?’னு புத்தகத்தை வாங்கிப் படிச்சதுன்னு நானும் விடாம முயற்சி செய்துட்டுதான் இருக்கேன். எங்க வீட்டுல வேலை பார்க்கிறவங்ககிட்ட இருந்து தமிழ் கத்துக்கலாம்னு பார்த்தா, அவங்கெல்லாம் எங்கிட்ட மலையாளம் கத்துக்கிட்டதுதான் மிச்சம். ஆனாலும், சுசீலாம்மா, ஜானகியம்மா பாடல்களை எல்லாம் கேட்டுக்கேட்டு, நான் பாடும் பாடல்களில் எந்தப் பிழையும் இல்லாம பார்த்துக்கிறது நிம்மதியா இருக்கு’’ என்று சுஜாதா மலையாளம் கலந்து தமிழ் பேசும்போது, அவரின் மொழி இசையாகிறது.      

ரஜினி... கமல்... பிரபு... மூணு பேருக்குமே பிடிச்ச பேர் அது!

‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்’ என்ற குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சியில் நடுவராக இருந்த அனுபவங்களைப் பரவசத்துடன் பகிர்ந்துகொண்ட சுஜாதா, ``எனக்குக் குட்டீஸ்னா ரொம்பப் பிடிக்கும். அந்த நிகழ்ச்சியில் நடுவர் என்பதைவிட, ஒரு ரசிகையா என்ஜாய் பண்ணினேன். ஒவ்வொரு நாளும் செட்டுக்குப் போகும்போதும், என்னோட குழந்தைகளைப் பார்க்கப்போற மாதிரியே ஃபீல் இருக்கும். மார்க் மட்டும் கொடுக்காம, பெர்சனலா என்னோட அனுபவங்களையும் அவங்களுக்குப் பாடமா கொடுத்துட்டு வருவேன். அதே நேரத்துல நான் கத்துக்கொடுத்ததைவிட  அவங்கக்கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான் அதிகம்’’ என்பவருக்குப் பிடித்த நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் பிரபு.

``அவங்க மூணு பேரும் என்னை `சுஜீ.. சுஜீ’ன்னுதான் கூப்பிடுவாங்க. இப்போ நான் அதிகமா சினிமா பார்க்கிறது இல்ல. அது ஒருபக்கம் கவலையாயிருந்தாலும், என் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னோட தொடர்பில் இருக்கிறது சந்தோஷமா இருக்கு. ‘இசைக்கருவிகள் எதுவும் இல்லாம, நீங்களே பாடி போஸ்ட் பண்ணுங்க மேடம்’னு அவங்க எல்லாம் கேட்டுட்டே இருப்பாங்க. எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்படிப் பாடி, ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்’’ என்று சொல்லும் சுஜாதாவுக்குப் பிடித்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி, `குக்கரி ஷோ'.

‘`பெரும்பாலும் எனக்கு ஓய்வு கிடைக்கிறதில்ல. கிடைக்கும்நேரத்தில் குக்கரி ஷோக்களைதான் அதிகம் பார்ப்பேன். நானும், அம்மாவும் அதைப் பார்த்து நிறைய ரெசிப்பிகளைச் சேர்ந்து சமைத்துப் பார்ப்போம். ஒரு ஸ்பைஸியான விஷயம் சொல்லட்டுமா... நான் மட்டன் பிரியாணி பைத்தியம்!”

- கண்கள் சுருக்கி, கலகலவென்று சிரித்த சுஜாதாவின் முகத்தில் குழந்தைத்தனம் தெரிந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`டாப் கியர்’ மானஸ்!

ன் டி.வி, விஜய் டி.வி என்று சீரியல் உலகில் டாப் கியரில் பயணித்துக்கொண்டிருக்கும் மானஸ், இந்த உயரத்தைத் தொடுவதற்கு நிறைய தடைக்கற்களைத் தாண்டி வந்திருக்கிறார். “என்னோட குடும்பமே படிப்ஸுக்கு பேர் பெற்ற குடும்பம். அம்மா பிசினஸ் கில்லி, அப்பா சயின்ட்டிஸ்ட். எனக்கோ சீரியல், சினிமான்னு நடிப்பு மேல ஆசை. வீட்டில் யாருக்கும் மீடியா சைடில் எந்த கான்டாக்ட்டும் கிடையாது. ஆனால், நான் விக்ரமாதித்தன் மாதிரி மனம்தளராமல் முயற்சி செஞ்சேன். எங்க  ஆடிஷன்  நடக்குதுனு தெரிஞ்சாலும் அங்க இந்த மானஸ் இருப்பான். ஆனா, எவ்வளவோ முயற்சி செஞ்சும் எந்த சீரியலும் அமையலை.     

ரஜினி... கமல்... பிரபு... மூணு பேருக்குமே பிடிச்ச பேர் அது!

அந்த சமயத்தில்தான் திடீர்னு ஒரு போன் கால். `சீரியல் ஆடிஷனுக்கு வாங்க’னு கூப்பிட்டாங்க. போய்க் கலந்துகிட்டேன். ஆனா, எந்த சீரியல்னு தெரியலை. ஆடிஷன் முடிஞ்சதும், ‘நீங்க செலக்டட்... சன் டி.வி-யில் முந்தானை முடிச்சு சீரியல்’னு சொன்னாங்க. அதைக்கேட்டதும் ஸ்வீட் ஷாக். `இதுக்காகத்தான் இவ்ளோ நான் வாய்ப்பு கிடைக்காம இருந்துருக்கு’னு சந்தோஷமாயிடுச்சு. இப்போ ஒருபக்கம் அன்பான மகன்; ஆசையான மருமகன்... இன்னொரு பக்கம் வில்லன், வேறொரு சீரியலில் ப்ளேபாய்ன்னு வாழ்க்கை அம்சமா போயிட்டிருக்கு” என்று குதூகலிக்கிறார் மானஸ்.

சகலகலா சுகாசினி!

ன் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் ‘தெய்வ மகள்’ சீரியலில் ரேகா குமாருக்குத் தங்கையாக நடித்து வருகிறார் சுகாசினி. இவர், ‘நிமிர்ந்து நில்’ படத்திலும் தன்னுடைய நடிப்பால் அசத்தியவர். `தெய்வ மகள்’ சீரியலில் செம வில்லி கேரக்டரில் அதிரடியாக நடிக்கும் இவருக்குள் பாட்டு, மிமிக்ரி, டான்ஸ் என பல்வேறு திறமைகள் புதைந்துக்கிடப்பது போனஸ் தகவல்.    

ரஜினி... கமல்... பிரபு... மூணு பேருக்குமே பிடிச்ச பேர் அது!

ஆறாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே பல மேடைகளில் பாடி அசத்தி வருகிறார். பல குரல்களில் பாடுவதிலும் கில்லி. மலேசியா, சிங்கப்பூர் என பல இடங்களில் பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இவருக்கு, எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் பாட வேண்டும் என்பதே பெரிய ஆசையாம். அதற்காக தன்னுடைய முயற்சியைவிடாமல் தொடர்ந்து வருகிறாராம் இந்தப் பல்கலை வித்தகி!

வாசகியர் விமர்சனம்

ஆஹா அற்புதம்!


விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பாகும் `தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்கப் பார்க்க ஆஹா, அற்புதம். சமூகப் பிரச்னைகளை அலசும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் சளைக்காது.

- பவித்ரா, திருச்சி - 2

உற்சாகம் பெருகுதே!

க்­கள் தொலைக்­காட்­சி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை காலை 6.30 மணிக்கு `அக்­கரை சீமை ஆல­யங்­கள்’ என்னும் நிகழ்ச்சி ஒளி­ப­ரப்­பா­கி­றது. அயல்­நா­டு­க­ளில் வீற்­றி­ருக்­கும் அற்­புதத்தலங்­களைப் பார்க்கும்போது பக்தியும் உற்சாகமும் பெருகுகிறது.

- மீனலோசனி பட்டாபிராமன்,  சென்னை - 92 
    

டி.வி சர்வீஸ் சென்டர் பற்றிய விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு உதவுவது போல அமைந்த அந்த விளம்பரம் நெகிழ வைத்ததோடு மரியாதையையும் கூட்டியது. மிகவும் மகிழ்ச்சி.

- என். மகாலட்சுமி, சிதம்பரம் - 1