Published:Updated:

வீடு Vs வேலை - நேரத்தைத் திட்டமிட்டால்... வெற்றி நிச்சயம்!

வீடு Vs வேலை - நேரத்தைத் திட்டமிட்டால்... வெற்றி நிச்சயம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வீடு Vs வேலை - நேரத்தைத் திட்டமிட்டால்... வெற்றி நிச்சயம்!

யாழ் ஸ்ரீதேவி

ரபரவென இயங்கும் பெங்களூரு நகரில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரி கிறார் சீதாலக்ஷ்மி. அலுவலகப் பணிகளைக் காலக்கெடுவுக்குள் முடிப்பது, ஒன்றரை வயது குட்டிப் பொண்ணு அதிதிக்கான கொஞ்சல் நேரம், கணவர் பிரஜித் துக்கான கனிவு நேரம் என்று வீட்டையும் அலு வலக வேலைகளையும் சீதாலக்ஷ்மி நிர்வகிப்பது அத்தனை அழகு!     

வீடு Vs வேலை - நேரத்தைத் திட்டமிட்டால்... வெற்றி நிச்சயம்!

ட்ராவல், ட்ராஃபிக், வீட்டின் பொறுப்புகள், அலுவலக அவசரங்கள் எல்லாம் சீதாலக்ஷ்மியை டென்ஷனாக்க முடியாமல் தோற்று விழிபிதுங்கு கின்றன. சீதாலக்ஷ்மி சொல்லும் டெக்னிக்குகள் என்னவென்று பார்க்க லாமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• நானும் என் கணவரும் ஐ.டி நிறுவனப் பணியில் இருக்கோம். கன்சீவ் ஆனதுக்கு அப்புறம் குழந்தை பிறப்பு நேரத்தில் வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க இருவரும் முன்கூட்டியே திட்டமிட்டோம். குழந்தை பிறந்து ஒரு வருடம் வரைக்கும் நான் பிரேக் எடுத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் வேலைல சேர்ந்துட்டேன்.

• நாங்க வீட்டில் இல்லாத நேரங்கள்ல குழந்தையைப் பாதுகாக்கிற பொறுப்பு என்னோட அம்மாவுக்கும் மாமியாருக்குமானது. இதனால அலுவலகத்தில் டென்ஷன் இல்லாமல் வேலை ஓடும்.

• குழந்தை பிறந்ததுக்குப் பிறகு அலுவலகத்திலும் எனக்கான ஃப்ரீடம் இருக்கு. என்னோட பொறுப்புகளை விரைவா முடிச்சுக் கொடுத்துடுவேன். லீவ் எடுக்க வேண்டியிருந்தா, வீட்டில் இருந்தபடியே குறித்த நேரத்தில் வேலையை முடிச்சுடுவேன். ஒரு  அம்மாவா என் பொறுப்பில் எவ்வளவு அன்பு காட்டுறேனோ, அதே அளவுக்கு என் வேலைக்கான அக்கறையையும் காட்டுறேன்.

• பெங்களூரில் ட்ராஃபிக் ரொம்ப அதிகமா இருக்கும். அலுவலகம் போய்ச் சேரவே இரண்டு மணி நேரம் பிடிக்கும். பயணத்தில் செலவாகும் நேரத்தை மிச்சம் பண்ணவும், குழந்தையோட நேரத்தைச் செலவு செய்யறதுக்காகவும்  நானும் என் கணவரும் வேலை நேரங்களை மாத்திக்கிட்டோம். நான் 7 மணிக்கே அலுவலகம் கிளம்பிடுவேன். மாலை சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவேன். அந்த நேரத்தில் ட்ராஃபிக் குறைவா இருக்கும். கணவர் 10 மணிக்கு அலுவலகம் போய்ட்டு இரவு வீட்டுக்கு வருவார். இப்படித்தான் காலையில் அவரும் மாலையில் நானும் குழந்தையோட நேரம் செலவிடறோம்.

• பாடல்கள் கேட்பதும், வாசிப்பதும் என் ரசனையின் இரண்டு பக்கங்கள். பயண நேரங்கள்ல இதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கிறேன். இந்தப் பழக்கம் என்னை புத்துணர்வோட வெச்சுருக்கும்.

• எனக்கும் அவருக்கும் ட்ராவல் ரொம்பப் பிடிக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது வெளி மாநிலப் பயணங்களுக்கு ப்ளான் பண்ணுவோம். குடும்ப உறவுகளும் குழந்தைகளுமா சேர்ந்த அந்தப் பயணம் ஜாலியா இருக்கும். குழந்தைக்கும் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

 

• குழந்தைக்கும் எங்களுக்குமான நாளையத் தேவையை எவ்வளவு நேரமானாலும் முந்தைய நாள் இரவே ப்ளான் பண்ணிட்டுத்தான் தூங்குவேன். வேலைக்குப் போவதால், குழந்தையுடன் இருக்கிற கொஞ்ச நேரத்தையும் குழந்தைக்காக மட்டுமே செலவு செய்வதில் கண்டிப்பாயிருப்பேன்.

• ஒரு சில பெண்கள் வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு, வேலையிடத்தில் சந்திக்கும் நெருக்கடிகள் இதில் எதையாவது காரணம் சொல்லி வேலையை விட்டுடு்றாங்க. அது தேவையில்லை. நெருக்கடிகளைக் கொஞ்சம் கிரியேட்டிவா சமாளிச்சுட்டா எந்த பிரச்னையா இருந்தாலும் சுலபமா கடந்து வந்துடலாம்.

• பெண் என்பவள் எதற்காகவும், எந்த இடத்திலும் நெருக்கடிகளைக் காரணம் காட்டித் தேங்கிவிட வேண்டியதில்லை. அதைத் தாண்டும் வலிமையை மனதில் வளர்த்துக்கொண்டால் போதும். அதே நேரத்தில் தொடர்ந்து தன்னை அப்டேட் செய்துகொள்ளும் பெண்களால்தான் எப்பவும் வெற்றி பெற முடியும்.