Published:Updated:

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...
பிரீமியம் ஸ்டோரி
News
முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

உலக யோகா தினம் - ஜூன் 21ஸ்ரீலோபாமுத்ரா

சனம்... இது `அமர்தல்’ அல்லது `ஓர் இடத்தில் கிடத்திவைப்பது’ என்று சொல்லப்படுகிறது. பக்கவிளைவில்லாத ஆசனங்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை சீராக இயங்கவும், தியானம் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும், சரியான உணவு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் உதவும். உடல், மனம், உணர்ச்சி இவற்றைத் தன்வசப்படுத்தியவர்கள் தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்வதோடு, முழு நலத்துடனும் வாழ முடியும்.

தினம் முப்பதே நிமிடங்களை ஒதுக்கி எளிதாகச் செய்யக்கூடிய ஆசனங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் முழு நலப் (Holistic Health) பயிற்சியாளர் ஷோப்னா ஜுனேஜா...

மூச்சுப் பயிற்சி  

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

வயிறு மற்றும் நுரையீரல் முழுமையாக நிரம்பும் வகையில், மூக்குத் துவாரங்களின் வழியாகக் காற்றை மெதுவாக உள்ளிழுத்து, பின்னர் மெதுவாக வெளியேற்ற வேண்டும். மூன்று நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால், மனம் இயல்புநிலைக்குத் திரும்பும். பிறகு, மூன்று முறை சூரிய நமஸ்காரம் செய்து, முறுக்கேறியுள்ள நரம்புகளை தளர்வடையச் செய்ய வேண்டும்.

ஒவ்வோர் ஆசனத்தின் பெயரையும் பொருளையும் நன்மைகளையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இன்டர்நெட், வீடியோ, புத்தகங்கள் போன்றவற்றின் உதவியுடன் ஓர் ஆசனத்தை முறையாகப் பயின்ற பிறகு அடுத்த ஆசனத்தைப் பயிலலாம். பிறகு ஒன்றன் பின் ஒன்றாக ஆசனங்களை அதிகரிக்க வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிரசாசனம் (சிரசு-தலை)  

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

மூளை, கண்கள், இதயம் போன்றவற்றுக்குத் தடையற்ற ரத்த ஓட்டம் கிடைக்கும். அத்துடன் வயிற்றுக்கு மேல் உள்ள பாகங்கள் உறுதி அடையும்.

மத்ஸ்யாசனம் (மத்ஸ்ய-மீன்)  

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

முகம் பொலிவு பெறும். முதுகு, கழுத்து, சுவாசப்பை சீராகச் செயல்பட உதவும். குரல்வளம் மேன்மை அடையும்.

சேதுபந்தாசனம் (சேது-பாலம்)  

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

வயிறு, குடல் சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும். பின்னழகைப் பேண விரும்புபவர்கள் இதைப் பயிலலாம்.

கோமுகாசனம் (கோ-பசு)  

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

கழுத்து, பின் முதுகு, தோள்களில் உள்ள விறைப்பைத் தளர்த்தும்.

புஜங்காசனம் (புஜங்க-பாம்பு)  

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

ஜனன உறுப்புகள் வலுப்பெறும். பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம் இது.

வீரபத்ராசனம் (வீர-போர்வீரன், பத்ர-உறுதி)  

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

போர் வீரனைப் போன்ற உடல் வலிமையைப் பெறலாம். உள்ளுறுப்புகள் உறுதியடையும்.

உத்கடாசனம் (உத்கட-வலிமை)  

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

கால்கள் வலுப்பெற உதவும்.

அர்த்த மத்ஸ்யேந்த்ராசனம் (அர்த்த-பாதி, மத்ஸ்ய-மீன்)  

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

முதுகெலும்பு வலுப்பெறும். அலுவலகத்தில் பல மணி நேரம் அமர்ந்து பணிபுரிபவர்கள் தினமும் இந்த ஆசனத்தைச் செய்வதால் இடுப்பு, முதுகெலும்பு, தோள் போன்ற இடங்களில் ஏற்படும் இறுக்கத்தைப் போக்கி, நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படத் தூண்டும்.

விருட்ஷாசனம் (விருட்ஷம்-மரம்) 

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

மனம் உறுதிபெற உதவும்.

சவாசனம் (சவம்-பிணம்)   

முழு நலம் பெற... சவால்களை எதிர்கொள்ள...

இதைத் தவறாமல் செய்வதால் உடல் அசதியில் இருந்து முழு நிவாரணம் கிடைக்கும். மனம் புத்துணர்ச்சி அடையும்.

இறுதியாக, ஏழு நிமிடங்கள் வரை தியானம் செய்யலாம். மனம் அலைக்கழிவதைத் தவிர்க்க, இஷ்ட தெய்வத்தின் பெயர் அல்லது மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தபடி பயிலலாம்.

உணவு

•  வீட்டில் தயாரித்த உணவே சிறந்தது. அதுவும் சமைத்த இரண்டு மணி நேரத்துக்குள் உண்பது நல்லது.

• காலை உணவைத் தவறாமல் உண்ண வேண்டும்.

 

• குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதை வாழ்க்கை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

• உப்பு, புளி, மிளகாய் போன்றவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

• ஜங்க்ஃபுட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

• பழம், சிறுதானியம், வறுத்த கடலை போன்ற வற்றைத் தினசரி சேர்த்துக்கொள்வது நல்லது.

• இரண்டு வேளைக்கு மேல் காபி, டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். கோடையில் நுங்கு, இளநீர், பழரசம் அருந்தலாம்.

• தயிருக்குப் பதிலாக மோர், உருக்கிய நெய் பயன்படுத்துவதால் வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.

 

• டயட்டீஷியனின் ஆலோசனையின்பேரில் கார்போஹைட்ரேட், மினரல், வைட்டமின், கால்சியம், புரோட்டீன் போன்றவை அடங்கிய உணவை உண்ணலாம்.

ஷோப்னா ஜுனேஜா...

ஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசத்தில் முதுகலைப் பட்டமும், கர்நாடகத் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் யோகக்கலையில் முதுகலைப் பட்டமும், மதுரையில் உள்ள இன்டர்நேஷனல் சிவானந்தா யோக வேதாந்த மீனாட்சி ஆஸ்ரமத்தில் யோகக்கலை பயிற்சியாளர் பயிற்சியும் பெற்றவர்.

பெண்களின் முழுநலம் குறித்த பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, யோகக்கலையின் நுணுக்கங்களை எளிய முறையில் விளக்குவதில் இவர் பின்பற்றும் அணுகுமுறைக்கும் `யூத் ஐகான் அவார்டு' (Youth Icon Award) பெற்றவர்.  

வாசகிகள் தங்கள் சந்தேகங்களை shobhnayoga@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால், பதில் அளிக்கக் காத்திருக்கிறார்.