சென்னை அடையாறில் உள்ள ‘புரோகெட் எக்சலென்ஸ்’ என்ற தன் சொந்த நிறுவனத்தின் மூலமாக ஐடி மற்றும் சாப்ட்வேர் பயிற்சி அளித்து வருகிறார் சத்யவதி. சத்யா என எல்லோரும் உரிமையுடன் அழைக்கும் இவர் தன்னம்பிக்கை மனுஷி.

‘‘திருமணத்துக்குப் பிறகு, என் 29 வயதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி வாயிலாக எம்.ஏ. வரலாறு படித்தேன். `திருமணத்துக்குப் பின் படித்தால், உனக்கெல்லாம் யார் வேலை தரப் போகிறார்கள்' என்ற விமர்சனங்களைத் தாண்டி, பட்டப்படிப்போடு, கணினிப் பயிற்சியையும் கற்றுக்கொண்டேன். கோவையில் அரசு உதவிபெறும் பள்ளியில், மாதம் 600 ரூபாய் சம்பளத்தில் ஆசிரியப் பணியில் சேர்ந்தேன். என் வாழ்வைத் தனியாக நடத்த முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்த வேலை அது. அதன்பின், சென்னையில் என்.ஐ.டி-யில் ஆலோசகராகப் பணியைத் தொடர்ந்தேன். அடுத்தடுத்து பல பொறுப்புகளில் பணியாற்றினேன். என்னைச் சுற்றி எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், வேலையில் சமரசம் செய்துகொண்டதே இல்லை. காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை கடுமையாக உழைத்ததால், என் உழைப்புக்கேற்ற மரியாதை கிடைத்தது.

ஒருகட்டத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கும் எண்ணம் தோன்றியது. அனிமேஷன் துறை யின் மீது எனக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக, அத்துறையைப் பற்றி முழுமையாகக் கற்றுக் கொண்டேன்.'' என்கிற சத்யா கூறும் இன்னொரு தகவல் ஆச்சர்யமளிக்கிறது.

``பத்தாம் வகுப்பு படித்தவர்கள் கூட அனிமேஷன் கற்கலாம் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. கிரியேட்டிவிட்டியும் ஆர்வமும் இருந்தாலே போதும். இந்தத் துறையில் எளிதாக வெற்றி பெறலாம். அதற்கு உதாரணம் நானேதான். துறைரீதியான தொடர் பயிற்சிக்குப் பிறகு 2012-ம் ஆண்டில் பிறகு `அரீனா அனிமேஷன்’ என்கிற நிறுவனத்தின் முகவரானேன்.

தொழில் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் நஷ்டம் வரக்கூடும். அப்படியான சிக்க லான நேரங்களில்தான் மன உறுதி தேவைப்படும். ஒரு பெண் தனியாக வாழ்வதை இந்தச் சமூகம் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளாமல், விமர்சனங்களையே முன்வைக்கும். அதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காமல் இருந்தாலே போதும். யாரிடமும் அழுது இரக்கத்தைப் பெற முயலக்கூடாது. தனியாக நிற்பதாக முடிவு செய்துவிட்டால், எப்போதும் யாராவது உதவ வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. நம்மால் முடியும் என்று களத்தில் இறங்கிவிட வேண்டும். அந்த நம்பிக்கைதான் சக்தியை அளித்துச் சாதனையாளர்களாக மாற்றும்'' என்கிற சத்யா, சாதிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதற்கும் ஓர் உதாரணமாகவே இருக்கிறார்.

``29 வயதில் நான் படிக்கச் சென்றபோது இந்தச் சமூகம் வீசிய ஏளனப் பார்வைதான், என்னை இந்த உயரத்துக்குக் கொண்டுவந்துள்ளது. ஆணைவிடப் பெண்ணுக்கு நிச்சயம் மன உறுதி அதிகம். பெண்கள் திருமணத்தோடு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கத் தேவையில்லை. குழந்தைகள் வளர்ந்த பின்னும் பிடித்த துறையில் சாதிக்க வாய்ப்புள்ளது'' என்கிற சத்யா, அதற்கு ஒரு வாய்ப்பையும் காட்டுகிறார்.

``வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க நினைக்கும் பெண்களுக்கு அனிமேஷன் சிறந்த துறை. வீட்டிலிருந்தே டிசைன் செய்து கொடுத்து மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்க வாய்ப்புள்ளது. தனது கனவுகளுக்காக வாழும் சூழலைப் பெண்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்’’ - நன்னம்பிக்கை விதைத்து விடை கொடுக்கிறார் சத்யா.