“என் கணவர் குமாரவேலுக்கு ஆடியோ புத்தகங்கள் கேட்கும் வழக்கமுண்டு. எனக்குப் புத்தகமாகப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்காதபோது நானும் அவருடன் சேர்ந்து கேட்பதுண்டு. ஆனாலும், என் விருப்பம் என்பது பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தைக் கையில் வைத்து வாசிப்பதுதான். அந்தச் சுகம் இ-புக்கிலோ, ஆடியோ புக்கிலோ கிடைப்பதில்லை.

நான் வாசித்ததில் என்னை மிகவும் ஈர்த்த புத்தகம் என்றால், ‘பாடி ஷாப்’ நிறுவன அதிபர் அனிதா ராடிக் எழுதிய ‘பாடி அண்ட் சோல்’. `நேச்சுரல்ஸ்' தொடங்குவதற்கான முதல் விதையை இந்தப் புத்தகம் தான் விதைத்தது. அழகு சாதனத் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்திய பெண் அனிதா. அழகு சாதனங்களில் செயற்கையான கலவையும் ரசாயனச் சேர்க்கையும் அதிகமிருந்த காலத்தில், அவற்றை இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிப்பதை அறிமுகப்படுத்தியவர். இங்கிலாந்தில் தன் மிகச்சிறிய கடையில் அவரே தன் கைப்பட ஷாம்புவும் க்ரீமும் கலந்துகொடுத்த கதை பிரமிக்க வைத்தது. ‘பாடி ஷாப்’ நிறுவனம், இன்று உலகின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக வளர்ந்திருப்பதில், அவரது அசாத்திய உழைப்பு இருப்பதையும் உணர்த்தியது.

நிறைய பயணம் செய்யும் பழக்கம் இருந்தது அனிதாவுக்கு. அப்படிப்பட்ட பயணங்களின்போது தான் சந்தித்த பல நாட்டுப் பெண்களின் அழகு ரகசியங்களையும் தெரிந்துகொண்டு, அவற்றைத் தன் தயாரிப்பில் அறிமுகப்படுத்தியவர். அந்தப் பொருள்களை அந்தந்த மக்களிடமிருந்தே வாங்கி அவர்களின் பிழைப்புக்கும் வழி செய்தவர். `வாடிக்கையாளர்களின் நலனே முக்கியம்' என்ற மந்திரத்தை என் மனதில் பதித்தவரும் அனிதா ராடிக்தான்.

பிசினஸில் காலூன்றிய பிறகான நம்பிக்கைக்கும் ஆர்வங்களுக்கும் காரணம் ஜிம் ரான் என்கிற அமெரிக்க எழுத்தாளர் மற்றும் ஊக்கப்பேச்சாளரின் புத்தகங்கள். அவரது புத்தகங்களில் சொல்லப்படும் விஷயங்கள் பிரசாரங்களாக இல்லாமல் குட்டிக்குட்டி தத்துவங்களாக இருக்கும். ‘டு டேர்ன் மோர்... ஏர்ன் மோர்’, ‘யு கான்ட் சேஞ்ச் பீப்பிள், பட் யு கேன் சேஞ்ச் யுவர்செல்ஃப்’ போன்றவை சில உதாரணங்கள்.

தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்வது பற்றிய அவரது எழுத்துகள் எனக்குப் பேருதவியாக இருக்கின்றன. `பீ ஸ்ட்ராங்... பட் நாட் ரூட்... பீ கைண்ட்... பட் நாட் வீக்... பீ ஹம்பிள்... பட் நாட் டிமிட்...' எனச் சின்னச் சின்ன வரிகளில் வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தவை மேஜிக் ஜிம் ரானின் புத்தகங்கள்.

சமீபத்தில் நான் வாசித்ததில் மிக முக்கியமான புத்தகம் ஷெரில் சாண்ட்பெர்க் எழுதிய ‘ஆப்ஷன் பி’.

`நம்மில் பலரும் ஆப்ஷன் பி-யில்தான் வாழ்ந்துகொண்டிருக்கி றோம்' என்கிற ஷெரிலின் வரிகள், என்னைத் தூங்கவிடாமல் செய்தன. நாம் எல்லோரும் வாழ நினைக்கிற வாழ்க்கை ஒன்றாகவும், உண்மையில் வாழ நிர்பந்திக்கப்படும் வாழ்க்கை வேறொன்றாகவும் இருப்பதை அத்தனை யதார்த்தத்துடன் சொல்லியிருப்பார்.

தன் கணவரின் இறப்புக்குப்பிறகு, தனக்கும் தன் குழந்தைகளுக்கும் முந்தைய சந்தோஷம் கிடைக்க வாய்ப்பே இல்லை என உணர்ந்ததாகவும், அதை ஏற்றுக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்ததாகவும் ஷெரில் குறிப்பிடுகிறார். அதன் பிறகு உளவியல் ஆலோசக நண்பரின் வழிகாட்டுதலின்படி, இழப்புகளிலிருந்து மீண்டு இன்னொரு வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிச்சலைப் பெற்ற கதையையும் பகிர்ந்திருக்கிறார். வாழ்வின் மிகத் துயரமான தருணங்களிலிருந்தும் இழப்புகளிலிருந்தும் மீள முடியும் என்று நம்பிக்கை அளிக்கும் புத்தகம் இது.

`நம் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களுக்கும் நம்மையே காரணம் சொல்லிக்கொள்கிறோம். குறிப்பாக, பெண்களுக்கு இந்தப் பழக்கம் உள்ளது' என்கிறார் ஷெரில். அதிலும் எந்த விஷயமாவது தவறாக நடக்கிறபோது இந்த எண்ணம் நமக்கு எழுகிறது. `நடக்க வேண்டும் என்கிற விஷயங்கள் நடந்தே தீரும்... அதுகுறித்த குற்ற உணர்வை நாம் சுமக்கவேண்டியதில்லை' என்கிறார்.

கணவரை இழந்த ஆரம்ப நாள்களில், மீண்டும் தன் கணவர் தனக்கு வேண்டும் எனக் கதறி அழுதிருக்கிறார். ‘ஆப்ஷன் ஏ என்கிற அந்த விஷயம் நடக்கப்போவதில்லை... அடுத்துள்ள `ஆப்ஷன் பி'யே யதார்த்தம். அதை எப்படி முழுமையாக வாழ்ந்து தீர்ப்பது என்பதில் கவனம் செலுத்து’ என ஷெரிலின் நண்பர் அறிவுரை செய்திருக்கிறார். அப்படியொரு வாழ்க்கைக்கு அவருக்கு நிறைய உதவிகளையும் செய்திருக்கிறார்.

நாமும்கூட அப்படித்தான்... ஆப்ஷன் பி-யில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதை முழுமையாக வாழப் பழகச் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்''.