ரேடியோ, டி.வி என ஊடகத் துறையில் கடந்த 13 ஆண்டுகளாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் `ஆர்ஜே' கண்மணி, அதே ஊடகத்துறையில் பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் சக பெண் சாதனையாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுகிறார். இந்த இதழில் ஷரண்யா சுந்தர்ராஜ்.

இனி ஓவர் டு கண்மணி...

ஷரண்யா, நியூஸ் 18 செய்தியாளர். என்னோட நல்ல தோழி. இவங்க ஒரு பன்முக ஆளுமை. சினிமாவில் தொடங்கி இப்போ பரபரப்பான செய்தித்துறையில வேலை பார்க்குறாங்க. வாங்க பேசலாம்!

``தமிழ்ல பேசறது கஷ்டம் கிற நம்பிக்கையைப் பொய்யாக் கிட்டீங்க.`நியூஸ் 18'-ல அழகான தமிழில் நிகழ்ச்சியை நடத்தறீங்களே... வாழ்த்துகள்!’’

``நன்றி கண்மணி. நிறைய பேர் என் தமிழைப் பாராட்டியிருக்காங்க. `தமிழ்ப் பொண்ணு தமிழ் பேசறதுல இவ்ளோ ஆச்சர்யமா'னு நினைக்கும்போது மகிழ்ச்சியாவும், அதேநேரத்துல ஏன் இப்படி ஆச்சர்யப்படறாங்கன்னு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கு. தமிழ்மீது பற்று இருந்தால்போதும். எனக்கு ஓர் ஆசை கண்மணி.''

``சொல்லுங்க...’’

``எல்லாரும் என் தமிழைப் பாராட்டு றாங்க. யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி அழகான தமிழைக் கற்றுக்கொடுத்து வளர்க்கப்போகிறேன். தமிழுக்கு நான் செய்யும் கைம்மாறு இது.’’

``ஒரு காலத்துல நியூஸ் சேனல் என்றால் இவ்ளோ வேலை இருந்திருக்காது. எப்போ `பிக் பிரேக்கிங் நியூஸ்' கலாசாரம் வந்துச்சோ அப்போலேர்ந்து நியூஸ் சேனல் வேலை அதிகமாகிடுச்சு. உங்களோட வேலை என்ன?’’

``முன்னாடி செய்தி வாசிப்பாளர்களா இருந்த காலம்போய் இப்போ செய்தியாளர் களா மாறியிருக்கோம். வெறுமனே எழுதி வெச்சதை `பிராம்ப்ட்' பார்த்துப் படிச்சுட்டுப் போக முடியாது. மாநிலத்தைப் பற்றி, நாட்டைப் பற்றி நிறைய தெரிஞ்சு வெச்சிருக்கணும். முக்கியமான செய்திகள் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து தெரிஞ்சு வெச்சிருக்கணும். அது சம்பந்தமான செய்திகள் வெளிவரும்போது அப்போதான் சரியான கேள்விகளைக் கேட்டு விளக்கங்கள் பெற முடியும். இதுக்கு நிறைய வாசித்தல் பழக்கம் வேண்டும். தெரிஞ்சுக்கிட்ட செய்திகளை அழகா சொல்லத் தெரியணும். உதடுகள் செய்திகளைப் படிக்கிறதா மட்டும் இல்லாம, கண்களும் அதை உணர்த்தணும்.''

``ஒரு நியூஸ் சேனலில் ரிப்போர்ட்டராக என்னென்ன தகுதி வேண்டும்?’’

``சற்று சிரமமான வேலைதான் இது. அலுவலகத்தைவிட்டுக் கிளம்புவதிலிருந்தே தொடர்பில் இருக்க வேண்டும். போகும் இடம், போராட்டக்களம்... இவை பற்றிய புரிதல் வேண்டும்.''

``பிரேக்கிங் நியூஸ் - இதுக்கான ஆயுள் என்ன? எப்படி ஒரு செய்தியை `பிரேக்கிங் நியூஸ்'னு நிர்ணயிக்கிறீங்க?’’

``ஒரு செய்தி எப்போதோ தொடங்கியிருக்கலாம். பல வருடங்களுக்கு முன்னாடிகூட தொடங்கியிருக்கலாம். இன்றைக்கும் அதுபற்றிச் செய்தி வருமானால், அது பிரேக்கிங் நியூஸ்தான். சொத்துக்குவிப்பு வழக்கு, கட்சிகள் உடையறது, நீட் தேர்வு சர்ச்சைகள்... அது சம்பந்தமான புது நடப்புகள் எல்லாமே பிரேக்கிங் நியூஸ்தான்.''

``3-4 மணி நேரம் தொடர்ந்து கேமரா முன்னாடி உட்கார்ந்து பேசிக்கிட்டே இருக்கீங்க. எப்படிச் சோர்வடையாமல் புத்துணர்வோடு இருக்கீங்க?’’

``நான் விளையாட்டாச் சொல்வேன்... `நாலு மணி நேரமா செட்ல உட்கார்ந்திருக்கேனே... இவ்வளவு நேரம் பஸ்ல உட்கார்ந் திருந்தா பாண்டிச்சேரியே போயிருக் கலாம்'னு. ஆனா, விருப்பத்தோடு செய்யும்போது நமக்குச் சோர்வே இருக்காது.

எளிமையாகத் தோற்றமளிப்பது தான் என் விருப்பம். செய்தி வாசிக்கும்போது தலைமுடியைச் சரிசெய்வது, உடையைச் சரிசெய்வது... இப்படி எதையும் செய்யக் கூடாது. கவனம் சிதறாமல் செய்தி வாசிப்பதுதான் முதன்மை நோக்கமே. லைவ் நியூஸ் என்பதால், முக்கியமா பெண்கள் வசதியான, எளிமையான உடையைத் தேர்வு செய்தல் நல்லது. நாம் எப்படித் தெரிகிறோம் என்று ஒன்றுக்குப் பலமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்வேன். ஒரு செய்தி ஒளி பரப்புக்குப்பின் பலரின் உழைப்பு உள்ளது. அத்தனை பேரின் உழைப் பும் என் உதடுகளின் மூலமா வெளி வருதுங்கற பொறுப்பு உணர்ச்சியே போதுமானது.’’

``உங்க வாழ்க்கையில் நீங்க நம்பும் கொள்கைகள் என்ன?’’

``எனக்கு அப்படி எதுவுமே இல்லை கண்மணி... நம்புங்க! மனசுக்குப்பிடிச்ச விஷயத்தை நோக்கிப்போறேன். பத்தாவதுல பள்ளியில் முதல் மாணவியாக வந்தேன்... பின்பு இன்ஜினீயரிங், மெடிக்கல் என்று போகாமல், வழக்கத்துக்கு மாறாக `மீடியா' எடுத்தேன். `இப்படி மார்க் எடுத்தா, இப்படிப் போகணும்' என்றெல்லாம் சம்பிரதாயமாக யோசிக்காமல் மன விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மீடியால பாதி பேர் இன்ஜினீயராகத்தான் இருக்காங்க. எதுக்கு நாலு வருஷம் வேஸ்ட் செய்யணும்?’’

``மீடியாவையும் இதையும் பிரிக்கவே முடியாதுன்னா, அது கிசுகிசுதான். நீங்க அதை எப்படி மேனேஜ் செய்றீங்க?’’

``ஸ்கூலிலிருந்து அரசாங்க அலுவலகம் வரை எங்கேதான் இல்லை கிசுகிசு? திறமையின் மேல நம்பிக்கைகொண்ட ஒரு பெண்ணைத் தகர்க்கணும்னா, இங்க சிலர் எடுக்கற ஆயுதம் `கேரக்டர் அசாஸினேஷன்'. எல்லாத் தரப்பு பெண்களும்... ஏன், ஒரு முதல்வர்கூட இந்த மாதிரி கிசுகிசுக்களில் இருந்து தப்ப முடியலையே... தவறா பேசறவங்களுக்கும் கிசு கிசுக்களுக்கும் இடம் கொடுக்காம முன்னேறிச் செல்றதுதான் ஒரே வழி!''

``சில நேரங்களில் திக்குனு இருக்குற செய்திகளை எங்களுக்குக் கேட்க நேரும்போது அதிலிருந்து வெளில வர கொஞ்ச நேரம் பிடிக்குது. ஆனா, நீங்க எப்படி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தறீங்க?''

``ஆஹா, என்ன ஒரு கேள்வி. சமீபத்துல வட மாநிலச் செய்தி வாசித்துக்கொண்டிருந்த செய்தியாளர், தன் கணவர் இறந்த சம்பவத்தையே எந்த உணர்வையும் வெளிப் படுத்தாமல் வாசிக்கும்படி நேர்ந்தது. செய்தி வாசித்து முடித்த பிறகே அவர் கதறி அழுதாராம். மனதை உறுத்தும் வருத்தும் செய்திகளும், அவை தொடர்பான செய்திக் கோப்புகளும் பின்னணி இசையும் எங்களைத் துன்பப்படுத்தும். ஆனால், சார்புநிலை எடுக்காமல், செய்திகளைக் கொண்டுசேர்க்கும் ஒருவராக மட்டும் அளவான உணர்ச்சிகளோடு தொழில்முறையோடு படிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும். அது மனதை சற்றே அழுத்தும் ஒரு விஷயம்தான்.''

``முக்கியமான சில செய்திச் சேகரிப்புகள்ல உங்களால மறக்க முடியாதது எது?’’

``சமீபத்துல ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பா மதுரைக்குப் போனேன். வாடிவாசல்ல போராடினவங்களைப் பார்த்தேன். அங்கே உட்கார்ந்திருந்தவர்களில் முக்கால்வாசிப் பேர் கிராமத்துப் பெண்கள். இது ஆண்களுக்கான ஒரு விளையாட்டு மட்டும் இல்லை; பெண்களுக்கும் காளைகள் முக்கியம்னு புரிஞ்சது. காளையை மகனாக நினைக்கிறாங்க. காளைக்கு `ரவி'ன்னும், மகனுக்கு `முத்துக்காளை'ன்னும் பெயர் வைத்திருப்பதைக் கேட்கும்போது எப்படி ஜல்லிக்கட்டு ஒரு வாழ்வியல் கலாசாரமாக மாறியிருக்கு என்பதை நேரடியாக உணர்ந்தேன்.

இன்னொரு முறை ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளிலுள்ள பெண்களோடு பெண்கள் தினம் கொண்டாடியபோது, அவர்களின் வாழ்க்கையை அருகில் இருந்து காண நேர்ந்தது... பிரமிப்பு. உயிரின் மதிப்பையும் உறவின் மதிப்பையும் அதிகம் உணர வைத்தன இச்சம்பவங்கள்...’’

``பரபரப்பான சூழலில் இருக்குற நீங்க எப்படி ரிலாக்ஸ் பண்ணிக்கறீங்க?’’

``நான் சிரிச்சுக்கிட்டே இருப்பேன். டீ குடிக்கும்போதுகூட அதை ரசிச்சு, குடிச்சு வாழ்க்கையை அனுபவிப்பேன். அப்புறம், எனக்கு எழுதறது பிடிக்கும். என்னோட உணர்வுகள் படிப்பவரைத் தொற்றிக்கொள்ள வைக்கிற வகையில எழுதுவேன். படிக்க ரொம்பப் பிடிக்கும். வரலாற்று ஆவணங்கள் ரொம்பவே பிடிக்கும். `பொன்னியின் செல்வன்' மிகவும் பிடிக்கும். என் கண்ணுக்கு வந்தியத்தேவன், அஜித் மாதிரியே தெரிவார்... ஹா ஹா ஹா!’’

செய்தி வாசிப்பாளர் ஆக வேண்டுமா?

கல்வித்தகுதி: இதழியல் படித்திருக்க வேண்டும். அல்லது பட்டப்படிப்புடன் செய்தித்துறையில் ஆர்வம் இருப்பது அவசியம்.

மொழி வளமை: மொழியை மிகச்சரியாக உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

நுண்ணறிவு: சமயோசிதமாகச் செயல்படுவதுடன் துறை சார்ந்த தகவல்களைக் கூடுதலாக அறிந்திருக்க வேண்டும்.

உடல்மொழி: செய்தியின் தன்மைக்கேற்ப ஏற்ற இறக்கங்களுடன் வாசிக்கத் தெரிந்திருப்பதுடன், முகபாவனை களையும் மாற்றத் தெரிந்திருக்க வேண்டும்.

பயிற்சி: இதற்கான பிரத்யேகப் பயிற்சிக்கூடங்கள் அல்லது தொலைக்காட்சி நிலையங்களில் (இன்டர்ன்ஷிப்) பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.