`மளிகை பில்லைப் பார்த்தால் மயக்கம் வருது; கரன்ட் பில்லை தொட்டால் ஷாக் அடிக்குது’ என்று கலங்கும் இல்லத்தரசிகள், `நமக்கும் கொஞ்சம் ஃப்ரீ டைம் இருக்குதே... அப்ப ஏதாவது முயற்சி செய்து பணம் ஈட்டினா, குடும்பத்தை ஈஸியா கரையேத்திடலாமே’ என நினைப்பார்கள். கூடவே, ‘முதலீட்டுக்கு என்ன பண்றது?’ என்ற குழப்பமும் எழும். முதலீட்டைப் பற்றிக் கவலைப்படாமல், உழைப்பையும் நேர்மையையும் மட்டுமே முக்கியமான காரணிகளாகக்கொண்டு பணம் சம்பாதிக்க உதவும் வழிகளை வழங்குகிறார் சுஹா தொண்டு நிறுவனத் தலைவியும், சுயதொழில் முனைவோருக்கான பயிற்சியாளருமான உமாராஜ். இந்த ஆலோசனைகளை நமக்குத் தெரிந்தவர்களிடமும் பகிரலாமே!

1 கைவினைப் பொருள்கள் (பத்துக்கு மேற்பட்டவை) செய்யத் தெரியுமா? உடனே வீட்டின்முன் அறிவிப்பு பலகை வைத்து, வகுப்புகள் எடுத்துப் பணம் சம்பாதிக்கலாமே!

2 படித்தவர்கள் என்றால் டியூஷன் சென்டர் ஆரம்பித்தால், நல்ல வருமானம்தானே!

3 வீட்டில் தயார் செய்யும் சமையலைச் சற்று அதிகமாகச் செய்து வயதானவர்கள் மற்றும் பேச்சிலர்களுக்கு ஆர்டர் அடிப்படையில் சப்ளை செய்யலாம்.

4 மாலை நேரத்தில் சப்பாத்தி ஆர்டர் வாங்கி, சப்ளை செய்யலாம்.

5 நிறைய வீடுகளில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், `குழந்தைகளின் புத்தகங்களுக்கு அட்டை போட்டுத் தரப்படும்’ என போர்டு வைத்தால், நிறைய ஆர்டர்கள் வரும்.

6 பெரிய வீடுகளில் தோட்டம் அல்லது மொட்டை மாடித் தோட்டம் வைத்துள்ளவர்களை அணுகி, அந்தத் தோட்டங்களுக்கான பராமரிப்பு ஆலோசனை வழங்கி, கட்டணம் பெறலாம்.

7 வீட்டில் பேப்பர் வாங்குபவரா நீங்கள்? உடனே தயார் செய்யுங்கள் லாண்டரி பேக். இதை அயர்ன் நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.

8 வீட்டில் இடம் இருந்தால் கோதுமைப் புல் வளர்க்கலாம். நடைப்பயிற்சி நடைபெறுகிற சாலையோரங்கள், பூங்காக்களில் கோதுமை புல் ஜூஸ் விற்பனை செய்யலாம். கோதுமைப் புல்லை உலர வைத்து, பவுடராக்கியும் விற்பனை செய்யலாம்.

9 வீட்டில் அதிகமாகக் கதை புத்தகம், பேப்பர் என வாங்குபவரா... இதைக்கூட அக்கம்பக்கம் கொடுத்துப் பணம் பண்ணலாம். பின்னர் இதையே லெண்டிங் லைப்ரரியாகச் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

10 வீட்டில் இருந்தபடியே கேட்டரிங் தொழில் செய்பவர்களுக்கும் ஹோட்டல்களுக்கும் காய்கறிகள் நறுக்கித் தரலாம்.

11 வாடகைக்கு வீடு எடுத்துக்கொடுப்பது, சொந்த வீடு வாங்க உதவுவது போன்றவற்றை கமிஷன் முறையில் செய்யலாம். (இதை முன்கூட்டியே நன்கு ஆராய்ந்து, பின்னர் செய்யவும்.)

12 அதிக வீடுகள்கொண்ட குடியிருப்பில் வசிப்பவரா நீங்கள்? `காய்கறி கட்டிங் சென்டர்’ என போர்டு போட்டு, காய்கறிகள் நறுக்கிக் கொடுக்கலாம். இதற்கு அமோக வரவேற்பு கிடைக்கும்.

13 வீட்டு வேலைக்கு ஆள் அனுப்புவது, முதியோரைப் பராமரிக்க ஆள் அனுப்புவது, மணமகன் - மணமகள் பற்றிய விவரங்கள் வழங்குவது எனத் தகவல் மையம் ஆரம்பிக்கலாம்.

14 சிறிய கடை வியாபாரிகளை அணுகி, அவர்கள் கடைகளை 15 நாளைக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை அழகுபடுத்தித் தரலாம். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

15 இட வசதி உள்ளதா? உடனே தொடங்குங்கள்... மாலை 5-7 மணியளவில் குழந்தைகளுக்குப் பழைய விளையாட்டுகளான பல்லாங்குழி, ஏழாங்கல், தாயம் போன்றவற்றைச் சொல்லித்தந்து விளையாட வைக்கும் மையத்தை! வீட்டின்முன் போர்டு எழுதிவைத்தாலே போதும்.

16 வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் குழந்தைகளை உங்கள் வீட்டில் இருந்தபடியே காலை முதல் மாலை வரை பராமரிக்கலாம் (நம்பிக்கை உரியவராக இருப்பதைப் பொறுத்தே இது அமையும்).

17 இப்போது குழந்தை பெறும் தாய்மார்களில் நிறையப் பேருக்குக் குழந்தைகளைக் குளிப்பாட்டுவது எப்படி என்பது தெரியாது என்பதால், உடனே ஆள் தேடுவார்கள். குழந்தைகளைப் பக்குவமாகக் குளிப்பாட்டுவதன்மூலம் மனநிறைவும் பண வரவும் பெறலாம்.

18 வீட்டில் இணையம் பயன்படுத்துகிறவரா நீங்கள்?
ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ் செய்து தந்து பணம் ஈட்டலாம்.

19 உங்களுக்கு ஆள் பலம் உள்ளதா? உடனே தொடங்குங்கள் ஹவுஸ் ஷிஃப்ட்டிங் சேவையை! பழைய வீட்டில் இருந்து புது வீட்டுக்குப் பொருள்கள் முழுவதையும் கொண்டுசென்று சேர்த்து, வீட்டை அலங்கரிக்கலாம். இதை போர்டு வைத்து, தொழிலாகவே செய்யலாம்.

20 வீட்டில் நெட் வசதியிருந்தால், ஆன்லைனில் டெலிபோன் பில், இ.பி பில் கட்டித்தந்து சேவைக் கட்டணம் பெற்றுக்கொள்ளலாம். ரயில் பஸ், விமான டிக்கெட் பதிவு செய்து தந்தும் பணம் சம்பாதிக்கலாம்.

21 உங்களுக்கு இரண்டு, மூன்று தோழிகள் உள்ளனர் என்றால், அவர்களுடன் இணைந்து திருமண விழாக்கள், சஷ்டியப்த பூர்த்தி, சதாப்தபூர்த்தி என பல்வேறு விசேஷங்களுக்கு வரவேற்பாளராகச் செல்லலாம்.

22 நீங்கள் இருக்கும் இடத்தின் அருகே பிளாஸ்டிக் கம்பெனி உள்ளதா? அவர்களை அணுகுங்கள். அங்கே பிசிறு எடுக்கும் வேலை நிச்சயம் இருக்கும். அதை வீட்டுக்கே வாங்கிவந்து செய்து தரலாம்.

23 தையல், எம்ப்ராய்டிங் தெரிந்திருந்தால் மற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். துணிகளை அவர்களையே எடுத்துவரச் சொல்லி கற்றுக்கொடுக்கலாம்.

24 கற்பனைத் திறன் உள்ளவரா... படம் வரையத் தெரியுமா? ஓவியம் சொல்லித்தந்தால் நிறையக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வருவார்கள்.

25 வீட்டில் கிரைண்டர் இருக்கிறதா? சிறுதானியங்கள், இட்லி - தோசை மாவு, அடை மாவு அரைத்துத்தர... நல்ல லாபம்தான்.

26 வரகு, கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் விதவிதமாக பாரம்பர்ய உணவுகள் சமைக்கத் தெரியுமா? சமையல் வகுப்பு நடத்தினால் நிறையப் பேர் கலந்துகொள்வார்கள். இதற்கு இப்போது நல்ல வரவேற்பு உள்ளது.

27 தையல் மெஷின் வீட்டில் உள்ளதா? ரெடிமேட் கடைகளை அணுகினால் அவர்களே நைட்டி, பாவாடை என வெட்டி தருவார்கள். அதை வீட்டில் உள்ளபடியே செய்து தந்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

28 பழைமையான கோயில்கள், புண்ணியத் தலங்கள் எங்கு உள்ளன என அறிந்து டூர் ஏற்பாடு செய்தால், வரவேற்பு கிடைக்கும்.

29 முறையாகப் பரதநாட்டியம், குச்சுப்புடி தெரிந்திருந்தால், மற்றவர்களுக்குக் கற்றுத்தரலாம்.

30 சைக்கிள் / மொபெட் வைத்திருப்போர் எனில் ஆபீஸில் பணிபுரிபவர்களுக்கு அவர்கள் வீட்டுச் சாப்பாட்டை மதியம் எடுத்துச்சென்று கொடுக்கலாம்.

31 சமையல்கலையை நன்கு அறிந்தவரா? பத்திரிகைகளுக்கு விதவிதமான சமையல் குறிப்புகளை அனுப்பிப் பணம் பெறலாம். சமையல் புத்தகங்களும் எழுதலாம்.

32 தையல் மெஷின் வீட்டில் இருந்தால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் சாரி ஃபால்ஸ், மேல் தையல், ஓரம் தைப்பது எனச் செய்து பணம் பண்ணலாம்.

33 தகவல் நிலையம் அமைத்து, கல்யாணச் சத்திரங்கள், ஹோட்டல் ரூம்கள்... அங்கு என்ன வாடகை, இந்த நேரத்தில் காலியாக உள்ளதா எனத் தகவல் கொடுக்கலாம். இது வெளியூர் மக்களுக்கு மட்டுமல்ல; உள்ளூர் மக்களுக்கும் தேவைப்படும். இதில் இரு தரப்பினரிடமும் கமிஷன் பெறலாம்.

34 தனியார் அல்லது அரசு அலுவலகங்களை அணுகி ஹவுஸ்கீப்பிங் வேலைக்கு ஆள் தேவையெனில், அதை ஏற்பாடு செய்து தரலாம்.

35 விடுமுறை அல்லது வேறு காரணங்களுக்காக வெளியூர் செல்கிறவர்களின் தொட்டிச் செடிகளைப் பராமரித்துத் தரலாம்.

36 முறையாக யோகா கற்றிருந்தால், யோகா பயிற்சி மையம் நடத்தலாம்.

37 தையல் கடை வைத்து இருப்போரை அணுகினால், பிளவுஸ் ஹெம்மிங் பண்ண, பட்டன், ஹுக் தைக்கத் தருவர். அதை வாங்கிவந்து வீட்டில் செய்துதர பணம் கிடைக்கும்.

38 இடவசதி உள்ளவர்கள் எனில், மக்கும் குப்பைகளை மக்களிடம் வாங்கி, அதை உரமாகத் தயார் செய்து விற்பனை செய்யலாம்.

39 உங்கள் வீட்டின் அருகே ரெடிமேட் துணிக்கடை சிறிய அளவில் உள்ளதா? அவர்களைத் தொடர்புகொண்டு, அவர்கள் கடையில் வாங்கும் சுடிதார் கை இணைப்பது, நைட்டி, பாவாடை மேல் தையல் போடுவது என நம் வீட்டுக்கு அனுப்பச் சொல்லி, அந்த வேலையைச் செய்து கொடுக்கலாம்.

40 பேச்சுதிறன் உள்ளவரா நீங்கள்? தாம்பூலப்பை மற்றும் தேங்காய், பழம் எங்கு மலிவு விலையில் கிடைக்கும் என்பதை அறிந்து, கல்யாணச் சத்திரத்தை அணுகி, யார் வீட்டுத் திருமணத்துக்குத் தேவையோ அவர்களுக்கு கைமாற்றிவிட்டு பணம் பண்ணலாம். கேட்டரிங் பண்ணுபவர்கள்கூட கமிஷன் முறையில் வாங்கிக்கொள்வர்.

41 சுற்றுலாத் தலங்கள் உள்ள இடத்தில் வசிப்பவரா நீங்கள்? அதன் வரலாற்றை நன்கு அறிந்து கைடாகப் பணி புரியலாம்.