அதிகம் பயணிக்கப்படாத சாலைகளில் சுவாரஸ்யம் அதிகம். அப்படியான புதுவித அனுபவத்தைத் தரக்கூடிய தொழில்களையே கையில் எடுத்துள்ளார்கள் இந்த இளம் பெண்கள். ``ரொம்பப் பழசான ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்கிறதைவிட, ‘இது சரியா வருமா?’, ‘பெண்களுக்கு ஏற்றதா?’னு கேள்விகள் குவியுற இந்த மாதிரி புதுமையான தொழில்களை டிக் செய்றதிலும், அதில் தொடர்ந்து இயங்கி வெற்றிபெற்றுக் காட்டுறதிலும் கிடைக்கிற சந்தோஷமே தனிதான்’’ என்று சிரிக்கும் அவர்களின் தன்னம்பிக்கை அழகோ அழகு!

‘அப்சைக்கிளிங்’கில் அசத்தும் ஸ்ருதி!

சுற்றுச்சூழலைக் காப்பதில் இப்போது ‘அப்சைக்கிளிங்’ என்ற கான்செப்ட் பிரபலமாகி வருகிறது. சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் ‘கோலி சோடா’ கடை, இந்த கான்செப்ட்டுக்கு வடிவம் தருகிறது. ``சோடாவைக் குடிச்சுட்டு பாட்டிலைத் திருப்பித் தருவோம். அதைச் சுத்தம் பண்ணிட்டு, அதே பாட்டில்ல சோடாவை நிரப்பி விற்பனைக்குக் கொண்டுவருவாங்க. கிட்டத்தட்ட அதுதான் அப்சைக்கிளிங் கான்செப்ட்டும்’’ என்கிறார் ‘கோலி சோடா’ உரிமையாளர் ஸ்ருதி.

``ஒரு பொருளை ரீசைக்கிளிங் பண்ணும்போது நிறைய ஆற்றல் செலவாகும். அதுவே அப்சைக்கிளிங் பண்ணும்போது பொருளோட தன்மை மாறாமல் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பாட்டிலை ரீசைக்கிளிங் பண்ணி கார்பெட்ஸ், பொம்மைகள்னு செய்றதுக்குப் பதிலா, அதை அப்சைக்கிளிங் மூலமா ஓர் அழகான ஃப்ளவர் வாஸ் ஆக மாற்றிடலாம். ஹேண்ட்பேக், பர்ஸ், செப்பல்னு அந்த மாதிரி அப்சைக்கிளிங் மூலமா உருவாக்கின பொருள்கள்தான் எங்க கடையின் விற்பனைப்பொருள்கள். யானைச் சாணத்தில் உருவான பேப்பர், ஸ்க்ரிப்ளிங் பேடுனு தேடித் தேடி கொண்டுவர்றோம்.

சென்னையில நாங்கதான் முதன்முதலா அப்சைக்கிளிங் கான்செப்ட்டைக் கொண்டுவந்தோம். தொழில் தொடங்கி அஞ்சு வருஷம் ஆகுது. இது, தொழிலுக்காக யோசிச்ச கான்செப்ட் இல்ல. இயல்பிலேயே நான் எக்கோ ஃப்ரெண்ட்லி பொண்ணு. பட்டுப்புழுக்கள் கொல்லப்பட்டுதான் பட்டுத்துணி தயாராகுதுன்னு தெரிஞ்சுக்கிட்ட நாள்ல இருந்து நான் பட்டு உடுத்துறதில்லை. அதேபோல லெதர் பேக்குகள், லெதர் செருப்புகளும் பயன்படுத்துறதில்லை. விஸ்காம் முடிச்சுட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம்னு நிறைய இயக்குநர்கள்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பார்த்துட்டு, இப்போ இந்தத் தொழிலுக்கு வந்திருக்கேன். ஒரு க்ரியேட்டிவ் ஸ்கிரிப்ட்டும் ரெடியா இருக்கு. நேரம் வரும்போது பார்ப்போம்!”

மீடியா துறையில் சாதிக்கும் சந்தியா!

``மீடியாவில் சாதிக்கத் தயக்கமே வேணாம்’’ எனும் சந்தியா ரமணி, சென்னையில் ‘தி மீடியா வாலட்’ என்ற பெயரில் மீடியா சர்வீஸ் செய்துவருகிறார்.

``எனக்குச் சொந்த ஊர் வண்டலூர் அருகே இருக்கிற மண்ணிவாக்கம். யு.ஜி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஜி மல்டி மீடியானு படிச்சுட்டு, நானும், என் நண்பர் ராகவேந்திராவும் சேர்ந்து ‘தி மீடியா வாலட்’ நிறுவனத்தை ஆரம்பிச்சோம். ‘பொண்ணால இதையெல்லாம் செய்ய முடியுமா?’னு ஏகப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி வேலைகளைத் தொடங்கினோம். திருமண ஆல்பம், குழந்தைகள் ஆல்பம், க்ரியேட்டிவ் ஆல்பம், பி.ஆர் வேலைகள், டாக்குமென்டரி ஃபிலிம் தயாரிக்க எக்யூப்மென்ட்ஸ் கலெக்ட் பண்ணி தர்றதுனு மீடியா சர்வீஸ்ல உள்ள ஏ டு இஸட் வேலைகளிலும் புகுந்து செயல்பட்டோம். ஆண்களால செய்ய முடியுற எந்த வேலையையும் பெண்களாலயும் செய்ய முடியும் என்பதுதான் என் மந்திரம். ராத்திரி, பகல்னு பார்க்காம வேலை பார்த்தேன்.

பிசினஸை ஆரம்பிச்ச இந்த மூணு வருஷத்துல, நிறைய ரெகுலர் கஸ்டமர்ஸ் கிடைச்சிருக்காங்க. மக்கள்கிட்ட எங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அம்மா, அப்பா, ஃப்ரெண்ட்ஸ்னு எனக்கு பலமா நின்னவங்களுக்கு, சமீபத்துல தேசிய அளவில் இரண்டாம் பரிசு வாங்கின எங்களோட டிஜிட்டல் பெயின்ட்டிங் ஆல்பத்தின் வெற்றி மாதிரி, இன்னும் நிறையத் தருணங்களை நிகழ்த்திக் காட்டணும்!”

பின்களில் ஆபரணம்... பிரமாதப்படுத்தும் ரோஷிணி!

`சேஃப்டி பின்களில் ஆபரணம் செய்யலாம், அதைத் தொழிலாக எடுக்கலாம்' என்று யோசித்த ரோஷிணியின் க்ரியேட்டிவிட்டியும் தைரியமும்தான் அவரை இன்று வெற்றியாளராக்கியிருக்கிறது. சென்னையில் உள்ள ‘நீலாயாதாக்ஷி கிராஃப்ட் ஜுவல்லரி'யின் உரிமையாளர்.

``எனக்கு சின்ன வயசுல இருந்தே கிராஃப்ட் வேலைகள் செய்யப் பிடிக்கும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அம்மாவோட ஃப்ரெண்ட் ஒருத்தங்க, சேஃப்டி பின்லேயும் ஜுவல்ஸ் பண்ணலாம்னு சொன்னாங்க. ஆச்சர்யமாகி, சேஃப்டி பின்ல கம்மல் செஞ்சு பார்த்து, அதை காலேஜுக்கும் போட்டுட்டுப்போக, செம பாராட்டு. அடுத்ததா காப்பர், சில்வர் சேஃப்டி பின்களில் பாரம்பர்ய டிசைன்களில் கம்மல், நெக்லஸ், செயின்னு செஞ்சு என் ஃப்ரெண்ட்ஸ் குரூப்புக்குக் கொடுக்க, எல்லாம் வித்துப்போச்சு. இப்படி ஹாபியா ஆரம்பிச்சது இப்போ பிசினஸாகி வளர்ந்து நிக்குது.

ஜுவல்லரியில் ஆன்ட்டிக் டிசைன்ஸுக்கு எப்பவுமே பெண் கள்கிட்ட வரவேற்பு இருக்கும். அதில் கொஞ்சம் புதுமையையும் டச் பண்ணிக்கொடுத்தா, நிச்சயம் க்ளிக் ஆகிடும். அப்படித்தான் இருக்கும் நான் செய்ற நகைகள். ஆன்லைன் சேல்ஸ், டோர் டெலிவரின்னு ஜோரா போயிட்டு இருக்கு. ஒரு பீஸ் செய்ய எட்டு மணி நேரம் ஆகும். பொறுமை, நிதானம் முக்கியம். என்னோட இந்த ஹேண்ட் மேட் ஜுவல்ஸுக்கு யுஎஸ், ஆஸ்திரேலியான்னு பல நாடுகளிலும் கஸ்டமர்ஸ் இருக்காங்க!”

சாதிக்கப் பிறந்தவர்கள்... ஜமாய்ங்க!