Published:Updated:

மனுஷி - அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்!

மனுஷி -  அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி -  அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்!

ன் வாழ்க்கைக்கு நாள்தோறும் துணைபுரியும் இயற்கை, பெண்ணாகவே காட்சி அளிக்கிறாள். யான் தொழும் அன்புத் தெய்வமும் பெண்ணாகவே இருக்கிறது. எனது உள்ளத்துள்ள பெண்மை அருளைச் சொரிகிறது. எல்லாம் பெண்மயமாக என்னைச் சூழ்ந்து என் உடலுக்கும் உயிருக்கும் நலஞ்செய்கின்றன. இத்தகைய பெண் தெய்வத்தை முதன்மையாகப் போற்றுகிறேன். பெண்ணே முதன்மையுடையாள். அத்தாயை வணங்குகிறேன்.

- ‘பெண்ணின் பெருமை’யில் திரு.வி.க     

மனுஷி -  அம்மி மிதித்தலும் அருந்ததி பார்த்தலும்!

அம்மாவிடம் பேசிவிட்டுத் திரும்பவும் மணிமேகலை பாட்டியிடம் வந்தபோது அழைப்பு மணி ஒலித்தது. பிள்ளையார் கோயிலின் அர்ச்சகர் சங்கரய்யர்தான் நின்றுகொண்டிருந்தார்.

மணிமேகலையுடன் உள்ளேவந்த சங்கரய்யரைப் பார்த்த பாட்டி, ‘`அடடே வாங்க ஐயரே, காசி பிரயாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? நல்லபடியா தரிசனம் ஆச்சா?’’ என்று கேட்டபடியே வரவேற்றார்.

‘`நம்ம பிள்ளையார் அனுக்கிரகத்துல அம்சமா தரிசனமாச்சு. கங்கா தீர்த்தம் கொடுத்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்’’ என்றபடியே கங்கா தீர்த்தம் கொடுத்தார்.
 
மோர் எடுத்து வருவதற்காக உள்ளே சென்றாள் மணிமேகலை.

‘`மணிமேகலைக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்காமே, ஏற்பாடெல்லாம் எப்படி நடந்துண்டிருக்கு?’’ என்று சங்கரய்யர் கேட்டார்.

‘`எல்லாம் நல்லபடியா நடந்துண்டிருக்கு. மேகலைக்குக் கல்யாணத்தப்போ செய்யற சடங்குகளைப் பத்தி தெரிஞ்சிக்கணுமாம். நீங்களே சொல்லிட்டுப் போங்க.’’

பாட்டி சொல்லி முடிக்கவும், மணிமேகலை மோருடன் வரவும் சரியாக இருந்தது.

மோரை வாங்கிப் பருகிய சங்கரய்யர், ‘`என்னம்மா மேகலை, கல்யாணத்தப்போ செய்யுற சடங்குகளைப் பத்தி தெரிஞ்சிக்க ஆசைப்படறயாமே. ரொம்ப சந்தோஷம். கல்யாணத்துல பல சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கு. நிச்சயதார்த்தம்; மணமகன், மணமகளிடம் சம்மதம் கேட்கும் வரவரணம்; கன்னிகாதானம்; விவாஹ ஹோமம்; பாணி கிரஹணம் (கைத்தலம் பற்றுதல்); ஹிருதய பரிசம் (இதயத்தைத் தொடுதல்); சப்தபதி; அம்மி மிதித்தல்; அருந்ததி பார்த்தல்; சூரியனைப் பார்த்தல்; ஊஞ்சல் வைபவம்; மூன்று இரவுகள் விரதமிருத்தல்; சதுர்த்தி கர்மம் (நான்காம் நாள் மணமக்கள் சேர்க்கை) என்று பல சடங்குகள், சம்பிரதாயங்கள் இருக்கு’’ என்றார்.

‘`அப்பப்பா, இத்தனை சடங்குகளா!’’ என்று வியப்புடன் கேட்ட மணிமேகலையிடம்,

‘`ஆமாம். கல்யாணத்துல சப்தபதிங்கற சடங்கு முக்கியமானது. தம்பதியருக்குள் மன ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிக் கிழக்கு, மேற்காக இருவரையும் ஏழடி நடக்க வைப்பார்கள். முதலில் பெண் அடியெடுத்து வைக்க, அவள் கணவன் கைலாகுக் கொடுத்து உதவுவதோடு அவளுக்கு உறுதிமொழியும் கொடுக்கிறான். முதல்முதல் பெண்ணோடு நேருக்கு நேர் பேச வேண்டிய நேரமும் இதுதான் என்றே சொல்லலாம். தம்பதிக்குள் கூச்சம், சங்கோஜம் போன்றவற்றைப் போக்கவும் உதவும் எனலாம். முதல் அடி எடுத்து வைக்கும்போது, கணவன் சொல்லும் மந்திரத்தின் பொருள், ‘பெண்ணே, என்னுடன் இணைந்து என் வீட்டுக்குவரும் நீ, புத்திரப் பாக்கியங்களைப் பெற்றுக் குலவிருத்தி செய்து, அனைவருக்கும் சந்தோஷம் அளிக்க வேண்டும். அதற்குத் தேவையான அனைத்தையும் அருள்வதற்கு நாம் மகா விஷ்ணுவைப் பிரார்த்திப்போம்’ என்பதுதான்’’ என்றார் சங்கரய்யர்.

‘`சரி... மணமகன், மணமகளின் கால் பாதத்தை எடுத்து அம்மிமீது வைக்கும் சடங்கு..?’’

‘`மணமகன், மணமகளுக்கு மன உறுதி ஏற்படுத்தும் முக்கிய நிகழ்ச்சி அது. மணமகன், மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மிமீது ஏற்றிவைக்கிறான். `இதுவரை துள்ளித் திரிந்து, கவலைகள் என்றால் என்னவென்று தெரியாமலே வளர்ந்த நீ, இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம் கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லற வாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக்கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்' என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான். எந்த உலோகத்தையும்விட கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்தப் `பாவனை'க்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.  இப்படி அனைத்தையும் கல்போன்ற உறுதியான மனத்தினால் கடக்கும் பெண்ணை, கையில்வைத்து கணவன் தாங்க வேண்டும் என்பதற்காகவே காலில் மெட்டியும் அணிவிக்கப்படுகிறது. இது இருவருக்குமான பொதுவான சடங்கு. மனைவிக்கானது மட்டுமே அல்ல’’ என்ற சங்கரய்யரிடம்,

‘`அருந்ததி பார்ப்பது எதற்காம்?’’ என்று கேட்டாள் மணிமேகலை.

‘`அருந்ததி என்பவள் நட்சத்திரம். துருவனைப்போல என்றும் அழியாது சிரஞ்ஜீவியாகத் திகழ்பவள். பதிவிரதா தர்மத்தை வழுவாது கடைப்பிடித்தவள். பத்தினிகளில் எல்லாம் உயர்ந்தவள். வசிஷ்டரின் மனைவி. சப்தரிஷிகளின் பத்தினிகளில் இவள் உயர்ந்தவளாகக் கருதப்பட்டிருக்கிறாள். ‘வசிஷ்டரின் மனைவி அருந்ததி எப்படி பதி விரதையோ அப்படியே நானும் ராமனைவிட்டுப் பிரியாமல் இருப்பேன்’ என்று சீதை கூறினாள். அருந்ததியைத் தரிசனம் செய்து ‘இவளைப் போல் நீயும் இருப்பாயாக’ என்று மணமகளுக்குச் சொல்வது போன்றது அந்தச் சடங்கு.

சில வீட்டுத் திருமணங்களில் தாலி கட்டுதற்கு முன்பு, தலையில் நுகத்தடி நிறுத்துவது பழக்கம். மாடுகள் இரண்டும் சேர்ந்து வண்டியைச் சுமந்து கரை சேர்வதுபோல, கணவனும் மனைவியுமாக இல்லறத்தைக் குடை சாயாது சமமாக நடத்தக் கடமைப்பட்டவர்கள் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம். இதுவும் பிற்காலத்தில் நடைமுறைக்கு ஏற்றவாறு சொல்லப்பட்ட கருத்து. நுகத்தடி வைப்பதற்கு வேறு அர்த்தமும் உண்டாம். அத்திரி மகரிஷியின் மகள் அபலா, சருமநோயால் அவதிப்படுகிறாள். அதனால் அவளுக்குத் திருமணம் நடக்கவில்லை. அவள்  இந்திரனை நோக்கிப் பிரார்த்திக்கிறாள். அவனும் அவள் பிரார்த்தனைக்கு இரங்கி, அவளுக்கு நுகத்தடியை வைத்து, மந்திரம் ஓதி நீர் விடுகிறான். உடனே அவள் நோய் நீங்கி, பூரணக் குணமடைந்து இந்திரனையும் மணக்கிறாள். மணமகளாகப்பட்டவளும் நோய் நொடிகளுக்குப் பலியாகாது சிரஞ்சீவியாக இருக்கக்கடவது என்று மந்திரம் சொல்லி நுகத்தடி யின் மேல் நீர் விடுவது வழக்கமாகியது’’ என்றார்.

‘`ஊஞ்சலில் பெண்ணை யும் மாப்பிள்ளையையும் உட்கார வைத்து ஆட்டு வதிலும் ஏதும் அர்த்தம் இருக்கா?’’

‘`ஊஞ்சலில் உட்கார வைத்து ஆடவைக்கும்போது, அந்த நேரத்தில் சாட்சாத் மஹாவிஷ்ணு - லக்ஷ்மி தேவியே உட்காருவதுபோல பாவிப்பர். அதனாலேயே திருஷ்டிக் கழிப்பார்கள். நல்ல நிகழ்வுகள் நடக்கும் வேளைகளில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்து ஆசிக்கூறுவதாக ஐதீகம். அதனாலேயே ஊஞ்சலில் வைத்து உறவினர்கள் சூழ ஆட்டி மகிழ்வர். முப்பத்து முக்கோடி தேவர்கள் மேலிருந்து ஆசீர் வதிக்கும் போது, அரூபமாகச் சில தீய சக்திகளும் இருக்கும். அந்தத் தீய சக்திகளைத் திருப்தி படுத்தவே சிவப்புச் சாதத்தை உருட்டி மணமக்களின் தலையைச் சுற்றி எறிவார்கள்’’ என்று சங்கரய்யர் சில சடங்குகளுக்குக்  கொடுத்த விளக்கங்களிலேயே, நம் திருமணங்களில் நடைபெறும் அனைத்துச் சடங்குகளும் பொருள் பொதிந்த சடங்குகள்தான் என்கிற தெளிவான புரிதல் மணிமேகலைக்கு ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism