இந்தியா முழுக்க சிவில் சர்வீஸ் பணிகளில் இருக்கும் தம்பதிகள் பலர். ஆனால், அவர்களில் கணவன் மனைவிக்கு இடையில் ஒருவரின் பொறுப்பை மற்றொருவர் கைமாற்றிக்கொள்வது அபூர்வ நிகழ்வு. கேரளாவில் பணியாற்றும் சதீஷ் பினோ ஐ.பி.எஸ் - அஜீதா பேகம் ஐ.பி.எஸ் தம்பதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பத்தனம்திட்டா மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட சதீஷ் பினோ, தான் வகித்துவந்த கொல்லம் மாநகர கமிஷனர் பொறுப்பை இம்மாதத் தொடக்கத்தில் தன் மனைவியிடம் ஒப்படைத்த செய்தியும் புகைப்படமும் இந்தியா முழுக்க வைரல் ஆனது. இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த ஜோடி என்ற எக்ஸ்ட்ரா மகிழ்ச்சியுடன் அவர்களைச் சந்தித்தோம்.

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூர். எங்க குடும்பத்துல பெண்களுக்குச் சீக்கிரமே கல்யாணம் செய்து வெச்சுடுவாங்க. அதனால படிச்சுக்கிட்டு இருந்த பி.காம் படிப்பையாவது நல்லபடியா முடிக்கணும்ங்கிறதுதான் என்னோட இலக்கா இருந்துச்சு. ஐ.ஏ.எஸ் தம்பதியான கார்த்திகேயன் - சுப்ரியா சாகு ஒருமுறை எங்க காலேஜ் நிகழ்ச்சியில் கலந்துகிட்டுப் பேசினாங்க. அது ரொம்ப இன்ஸ்பையரிங்கா இருந்தது. காலேஜ் முடிச்சதும், மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டேன். அதைச் சொன்னதும் வீட்டில் எல்லோரும் டென்ஷனாக... சாப்பிடாம, பேசாம நான் அமைதிவழிப் போராட்டங்களைச் செய்து, அனுமதி வாங்கினேன். அப்பாவின் நண்பர் பேராசிரியர் கனகராஜ் சிவில் சர்வீஸ் தேர்வுகள் பற்றிச் சொன்னார். அப்போ காலேஜ்ல பேசின ஐ.ஏ.எஸ் தம்பதி ஞாபகம் வர, ‘நாமளும் கலெக்டராகி நம்ம குடும்பத்துக்குக் கௌரவம் சேர்க்கணும்’னு மனசுக்குள்ள ஆசை விழுந்துச்சு.

ஆறு மாசம் டெல்லி, அப்புறம் சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமினு படிச்சு, 2008-ம் வருஷம் ரெண்டாவது முயற்சியில் 169-வது ரேங்க் வாங்கினேன். ஐ.பி.எஸ் போஸ்ட்டிங் ஒதுக்கப்பட்டதால வீட்டுல மறுபடியும் அதிர்ச்சியாகி, ‘வேண்டாம்’னு சொன்னாங்க. எங்க தமிழக இஸ்லாமிய சமூகத்துலயே முதல் பெண் ஐ.பி.எஸ் ஆபீஸர் நான்தான்னு அப்பாவுக்குப் பாராட்டுகள் குவிய... அம்மாவைத் தவிர எல்லோரும் ஹேப்பியாகிட்டாங்க” என அஜிதா நிறுத்த... “என்னோட ஐ.பி.எஸ் கதை சின்னதுதாங்க” என கலகலப்பாக ஆரம்பித்தார் சதீஷ் பினோ...

“பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம். கிறிஸ்தவக் குடும்பம். அப்பா கேரளாவுல மத்திய அரசு ஆபீஸரா இருந்ததால ஸ்கூல் படிக்கிறப்பவே கேரளாவுல போய் செட்டிலாகிட்டோம். இப்போ கோவை மாநகர கமிஷனரா இருக்கிற அமல்ராஜ், என்னோட கசின். அவரை உதாரணமா சொல்லி என்னையும் எங்க வீட்டில் சிவில் சர்வீஸுக்குப் படிக்கச் சொன்னாங்க. ரெண்டாவது முயற்சியில் 105-வது ரேங்க் வாங்க, ஐ.பி.எஸ் போஸ்ட்டிங் கிடைச்சுது’’ என்றவர், காதல் அத்தியாயத்துக்கு வந்தார்...

``ஹைதராபாத்துல நடந்த போலீஸ் ட்ரெயினிங்லதான் நாங்க ஒருத்தருக்கொருத்தர் அறிமுகமானோம். வேலை, சமூக விஷயங்கள்னு பலவற்றைப் பற்றியும் நல்ல நண்பர்களா பேசத் தொடங்கி, எங்களோட ஒரே அலைவரிசையால காதலர்களாகிட்டோம். ஆனா... என்று மனைவியைப் பார்த்து சிரிக்க...’’அதெல்லாம் மிகப்பெரிய ட்விஸ்ட் என்று புன்னகையுடன் தாங்கள் தம்பதியாக கரம்பிடித்த நிகழ்வைக் கூறுகிறார் அஜிதா பேகம்.

“ட்ரெயினிங் முடிஞ்சு அவருக்கு மத்தியப்பிரதேச மாநிலப் பணியும், எனக்கு காஷ்மீர் மாநிலப் பணியும் கிடைச்சது. அடுத்து நான் காஷ்மீர், ரியாசி மாவட்ட ஏ.எஸ்.பி; காஷ்மீர், ராம்பன் மாவட்ட ஏ.டி.எஸ்.பி-னு வேலைபார்த்தேன். அவர் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜையினி மாவட்டத்தில் ஏடிஎஸ்.பி-யா வொர்க் பண்ணிட்டு இருந்தார். இதற்கிடையே காஷ்மீர்ல என்னோடு இருந்த அம்மா, ‘பாஷை தெரியாத ஊர். கடுமையான குளிர் அடிக்குது. அடிக்கடி கலவரம் ஏற்படும் பயம் வேற. இதெல்லாம் உனக்கு சரிப்பட்டுவராது. நீ மறுபடியும் ஐ.ஏ.எஸ்ஸுக்குப் படி’ன்னு சொல்லிட்டு பாதியிலயே கோயம்புத்தூருக்குப் போயிட்டாங்க. மறுபடியும் படிச்சு சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதினதுல, மீண்டும் ஐ.பி.எஸ் போஸ்டிங்தான் கிடைச்சுது. அம்மாவைச் சமாதானப்படுத்தி, முந்தைய ஐ.பி.எஸ் போஸ்டிங்லயே வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். இப்படி வேலை காரணமா ஒன்றரை வருஷம் நேர்ல பார்த்துக்காம நாங்க போன்ல பேசினபடி இருக்க, எங்க ரெண்டு பேரோட வீட்டுலயும் வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க வீட்டுல காதலைச் சொன்னோம். பெரிய எதிர்ப்பு இருந்துச்சு. அப்புறம் ரெண்டு வீட்டுச் சம்மதத்தோடு 2011-ம் வருஷம் நாங்க காதல் தம்பதிகளா வாழ்க்கையில் இணைந்தோம்” என அஜிதா சொன்னபோது, காக்கி மிடுக்கையும் மீறிக் கசிந்தது இருவர் முகத்திலும் வெட்கப் புன்னகை.

“கல்யாணத்துக்கு அப்புறம் மறுபடியும் பிரிவுச்சூழல். 2012-ம் வருஷம் கேரளாவுக்கு வந்து சேர்ந்தோம். நான் திருச்சூர் ஐ.ஆர்.பி கமாண்டன்ட் ஆகவும், அஜிதா மலப்புரம் மாவட்டத்துல இருக்கிற பெட்டாலியன் கமாண்டன்ட் ஆகவும் பொறுப்பேற்றோம். இந்த அஞ்சு வருஷத்துல நான் ஒன்பது போஸ்டிங், அவர் அஞ்சு போஸ்டிங் மாறிட்டோம். ரெண்டாவது குழந்தைக்காக மகப்பேறு லீவுல இருந்த அஜிதா இப்போ மறுபடியும் பணியில் சேர்ந்த தருணம்தான், இன்னிக்கு ஸ்பெஷல் நிகழ்வாகியிருக்கு’’ என்று சிரித்தவர்,

``கொல்லம் மாநகர கமிஷனரா நான் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்த பொறுப்புல இருந்து, பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணிக்கு மாற்றப்பட்டேன். என்னோட போஸ்டிங்ல அஜிதா நியமிக்கப்பட்டாங்க. இதை நாங்க ஒரு பெர்சனல் சந்தோஷமாதான் நினைச்சோம். ஆனா, அவங்களுக்கு நான் கைகொடுத்து பொறுப்பைக் கைமாற்றின புகைப்படமும் செய்தியும் வைரலாக, அப்போதான் இந்த ‘காக்கி தம்பதி பொறுப்பு மாற்றம்’ அரிதான நிகழ்வு என்பதும், கேரளாவில் முதன்முறையா நடப்பதும் தெரியவந்தது’’ என்றவர், அஜிதா என்ன சொல்லப்போகிறார் என அவர் கண்களைப் பார்க்கிறார்.

“அவர் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள, அவர் எனக்குக் கைகொடுத்து வாழ்த்துச் சொன்னப்போ அவ்ளோ ஸ்பெஷலா இருந்தது. தொடர்ந்து சிறப்பா பணிபுரிவோம்னு ரெண்டு பேருமே வாழ்த்துச் சொல்லிக்கிட்டோம். கல்யாணம் ஆனதிலிருந்து இப்போ வரை, என்னோட ரெண்டு பிரசவத்துக்கும் கிடைச்ச ஆறு மாத விடுப்பில்தான் நாங்க ஒரே இடத்தில் தங்கியிருக்கோம். மத்தபடி அடிக்கடி பிரிவுதான் எங்கள் வாழ்க்கையே.

ரெண்டு பேருமே ஒரே துறையில இருக்கிறதால, பெரும்பாலும் வேலை விஷயங்களைத்தான் பேசிப்போம். ஒருத்தருக்கு ஒருத்தர் ஆலோசனை வழங்கி, நிறைய சமூகம் சார்ந்த நிகழ்வுகளை விவாதிச்சுக்குவோம். நான் சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதுறதுக்கு முன்னாடி வரை உள்ளூரில்கூட எங்கேயும் தனியா போனது இல்லை. ஆனா இப்போ இரவு, பகல் பார்க்காம துணிச்சலா வேலை பார்க்கிறேன். அப்பாவும் கணவரும் எனக்கு ஊட்டின தைரியம் இது. அதனால ரெண்டு பேரும் சமரசமில்லா நேர்மையான பணியை உற்சாகமாக செய்துகிட்டு இருக்கிறோம். முதல் பையன் அர்ஹான் ரயன் யு.கே.ஜி படிக்கிறான். பொண்ணு அர்ஷித்தா ஏழு மாசப் பாப்பா. ஐ.பி.எஸ் பேரன்ட்ஸ்னாலும் நாங்க ஜாலி அம்மா, அப்பாதான்” என்கிறார் அஜிதா குழந்தைகளை அணைத்தபடி!

க்யூட்... சல்யூட்!