திருவாரூர் மாவட்டம் தியானபுரம் கிராமம் பெத்தாரண்ண சுவாமி திருக்கோயில். காலை நேரம். பள்ளி மாணவர்கள் அனைவரும் தயாராக இருக்க, சில நிமிடங்களில் தொடங்கிய ஊர்வலம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத் துடன் நகர்கிறது. அதன் நாயகி, விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் - சீஸன் 5’ நிகழ்ச்சியின் வெற்றியாளர் பிரித்திகா. பாரதிராஜா வசனம்போல, அந்தக் கிராமத்துத் தெருக்களில் ஓடி விளையாடிய பிரித்திகா, இன்று உலகறிந்த குயில். பிரித்திகா படிக்கும் அவ்வூரின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊர்வலம் நிறைவடை கிறது. ‘இதோ வந்துடறேன் அண்ணே...’ என்று சொல்லிச்சென்ற பிரித்திகாவை, ‘ராசாத்தி’, ‘சக்கரக்கட்டி’ என்று முகவாய் தொட்டுக் கொஞ்சுகிறார்கள் அந்தக் கிராமத்தினர்.

‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சியில் இந்த சீஸன் முழுக்க சென்சேஷன் பிரித்திகாதான். நிகழ்ச்சித் தொகுப்பு கலாட்டாக்கள், பளபளக்கும் அலங்கார விளக்குகள், பிரமாண்ட மேடை என்று மிரட்டும் அந்த செட்டில் எளிய கிராமத்துச் சிறுமியாக ஏறி, இவர் பாடிய தேன் கானங்களுக்குச் சொக்கிப்போனார்கள் பார்வையாளர்கள். `செந்தூரா...’ பாடலை இவர் பாடிய வீடியோவை இன்னமும் ரிப்பீட் மோடில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். அரசுப் பள்ளிச் சிறுமி டு சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் இசைப்பயணத்தை நம்மிடம் பகிர்கிறார் பிரித்திகா.

“எங்கப்பா ரமேஷ் டிங்கரிங் வேலை பார்க்கிறாங்க. அம்மா பொன்மலர், அப்பப்போ வீட்டிலேயே துணி தைச்சுக் கொடுப்பாங்க. அண்ணன் மணிகண்டன் பத்தாவது படிக்கிறாங்க. நான் எங்க ஊர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில எட்டாவது படிக்கிறேன். எனக்குப் பாடுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா, ‘ஜன கண மன’, ‘நீராருங் கடலுடுத்த’ பாடல்களைத் தவிர முழுசா எந்தப் பாட்டும் தெரியாது. எங்க டீச்சர்ஸ்தான் பிரேயர்ல நான் பாடுறதைப் பார்த்துட்டு, ‘உன் குரல் சூப்பரா இருக்கும்மா... சங்கீதம் கத்துக்கோ’னு சொன்னாங்க. ஆனா, வீட்ல அவ்ளோ வசதியில்லை. நான் மூணாவது படிச்சுட்டு இருந்தப்போ ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ ஆடிஷன் நடந்துச்சு. ‘போய் கலந்துக்கிட்டு வாம்மா’னு டீச்சர்ஸ் வழிநடத்தி என்னை அனுப்பி வெச்சாங்க. ஆனா, அதுல நான் தேர்வாகலை.

`உங்க பொண்ணுக்கு அவ்ளோ அழகான குரல். ஒரு நல்ல பாடகியா அவளைக் கொண்டுவர முடியும்’னு எங்க டீச்சர்ஸ் சொல்லிட்டே இருக்க, அதுக்கு அப்புறம் எங்கப்பாவும் என்னை உற்சாகப்படுத்த ஆரம்பிச் சுட்டார். தொடர்ந்து இன்னும் சில சேனல்களின் இசை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டேன். ஆனா, ரெண்டு, மூன்று சுற்றுகளைத் தாண்டிப் போக முடியல’’ என்று சொல்லும் பிரித்திகா, சென்ற வருடம் மீண்டும் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்’ ஆடிஷனில் கலந்துகொண்டிருக்கிறார்.

``அப்பா திருச்சியில் நடந்த ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப்போனாங்க. நான் பாடின ‘மன்னார்குடி கலகலக்க’ பாடல் நடுவர்களுக்குப் பிடிச்சுப்போச்சு. விஜய் டி.வி-யில் என் முகம் தெரிய ஆரம்பிச்சப்போ எங்க குடும்பம், ஸ்கூல், ஊருனு எல்லோருமே சந்தோஷமாகிட்டாங்க. இந்த முறையும் ஒண்ணு, ரெண்டு ரவுண்டோட வெளியேவந்துடக் கூடாது, மேல போகணும்னு இசை வகுப்பில் என்னைச் சேர்த்துவிட்டாங்க அப்பா.

எங்க ஊருல இருந்து 30 கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற நாகப்பட்டினத்துல, செல்வம் சார்கிட்ட இசை வகுப்பில் சேர்ந்து, சனி, ஞாயிறுகள்ல போக ஆரம்பிச்சேன். அவர்தான் சினிமா பாட்டையெல்லாம் எந்த ஸ்கேல்ல பாடணும்னு எனக்குக் கத்துக் கொடுத்தார். என்னோட குரலுக்கு எந்தெந்தப் பாடல்கள் நல்லாருக்கும்னு சாய் சரண் அண்ணாதான் செலக்ட் பண்ணினார். பாடும்போது எந்தெந்த இடங்கள்ல எவ்வளவு வாய் திறக்கணும், மூடணும்னு டெக்னிக்கலா பல விஷயங்களைச் சொல்லித்தந்தார் அனந்து சார்’’ என்று தன் ஏணிகளை நினைவுகூர்ந்த பிரித்திகா தொடர்ந்தார்...

‘`அடிக்கடி சென்னைக்குப் போயிட்டு வர்ற அளவுக்கு எல்லாம் எங்க வீட்டுல வசதியில்ல. ‘பணத்தைப் பத்தியெல்லாம் கவலப்படாதே’னு சொல்லி என் கையில் ஐந்நூறு, ஆயிரம்னு திணிச்சு அனுப்பிவைப்பாங்க எங்க டீச்சர்ஸ். வெளியூர், விசேஷம், கோயில்னு எங்க போனாலும் பார்க்கிறவங்க எல்லோரும் ‘நீ பிரித்திகாதானே?!’னு கொஞ்சி, பாராட்டி, எங்கூட நின்னு செல்ஃபி எல்லாம் எடுத்துக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

இறுதிச்சுற்றில் ‘பட்டத்து ராணி’ பாட்டுப் பாடும்போது எனக்குப் பதற்றமாகியிருச்சு. ஆனா, ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ பாட்டை திருப்தியா பாடிட்டேன். ரிசல்ட் அறிவிச்சப்போ ‘டைட்டில் வின்னர்’னு என் பேரைச் சொன்ன நிமிஷம்... அய்யோ, அந்த சந்தோஷத்தை சொல்லத் தெரியலையே!” என்று சிரித்தாலும், அவர் கண்கள் சொல்கின்றன அந்தப் பரவசத்தை. ஆறு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கும் பிரித்திகா, தான் டி.வி-யில் தோன்றியது, விமானத்தில் சென்றது, பெரிய பாடகர்கள், நடிகர்களிடம் பேசியது, அவர்களிடம் வாழ்த்துப் பெற்றது என இந்தப் பயணத்தைச் சிலாகித்துப் பேசி பூரித்துப்போகிறார்.

``எங்க அம்மா, அப்பா, அண்ணன், டீச்சர்ஸ், ஸ்கூல், ஊர்க்காரவங்க எல்லாருக்கும் நான் நன்றி சொல்லணும். இவங்களுக்காகவே இன்னும் நிறைய சாதிக்கணும்னு தோணுது. அதுக்கு கர்னாடக இசையை அடிப்படையில இருந்து கத்துக்கணும்.
‘இங்க பாரு பிரித்திகா...’னு யூடியூப், ஃபேஸ்புக்ல நான் பாடின பாடல்கள் வர்றதை எல்லாம் எங்க டீச்சர்ஸ் காமிப்பாங்க. ஆனா, அதெல்லாம் என்ன, எப்படிப் பார்க்கிறதுனு எனக்குத் தெரியாது. இனி கத்துக்கணும்!” - அளவான புன்னகையுடன் அழகாகச் சொல்கிறார் பிரித்திகா.

ஒரு சிறிய கிராமத்தில் உறைந்துகிடந்த திறமை பெரிய அங்கீகாரம் பெற, வழியெல்லாம் துணையாக இருந்த நல்ல உள்ளங்கள் பலரும் இவ்வுலகின்மீது இன்னும் நம்பிக்கை கொள்ள வைக்கிறார்கள்!

‘`சத்துணவுதான் சாப்பிட்டாள்!’’

‘`பாட்டு மட்டுமில்ல... பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டிகள்லயும் பிரித்திகா ஸ்டார்தான். இறுதிப் போட்டியில வெற்றி பெற்றதுக்கப்புறம் ஸ்கூலுக்கு வந்த முதல் நாள், காலையிலிருந்து அரசு அதிகாரிங்க, வெளியூர்க்காரங்க, ஊர்க்காரங்கன்னு எல்லோரும் வந்து பிரித்திகாவை வாழ்த்தினாங்க. ஆனா, அன்னிக்குக்கூட அவ மதியம் சத்துணவுதான் சாப்பிட்டா. ஏழ்மையில விளைஞ்ச இந்தத் திறமைதான் பிரித்திகாவை நாங்க அள்ளி அணைச்சுக்கக் காரணம். இந்தக் கிராமத்தோட பெருமை பிரித்திகா’’ என்கிறார்கள் பிரித்திகாவின் ஆசிரியர்கள், நேசமும் நெகிழ்ச்சியுமாக.