‘`வேலை என்பதை உங்கள் சுயநலம் சார்ந்த விஷயமாக மட்டுமே பார்க்காதீர்கள். அதைப் பொதுநலத்தோடு பார்த்தால், வீடும் நாடும் தழைக்கும்...’’ - புதிய கோணத்தில் பேசுகிற சௌந்தர்யா ராஜேஷ், `அவதார்’ குழுமத்தின் நிர்வாகத் தலைவர். வேலையிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கான வழிகளை மேற்கொள்கிறது, ‘அவதார்’ நிறுவனம். பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதிலும், ஏற்கெனவே உள்ள இடங்களைக் குறையாமல் பார்த்துக்கொள்வதிலும் இந்நிறுவனத்தின் மனப்பயிற்சி வகுப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

பெண்களின் வாழ்வில் வேலையும் பொருளாதாரச் சுதந்திரமும் எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்துகிற இவர்களின் பயிற்சிகள், இப்போது பள்ளி மாணவிகளையும் எட்டியிருக்கின்றன. அதன் பின்னணி, அடுத்தடுத்தத் திட்டங்கள் என்ன என்பது பற்றியெல்லாம் பேசுகிறார் சௌந்தர்யா.

‘`கடந்த வருடம் ஓர் ஆய்வைப் பற்றிய தகவல் கிடைத்தது. அதன்படி, பெண்கள் பலரும் வெவ்வேறுவிதமான காரணங்களைச் சொல்லி வேலையை விட்டுவிடுகிறார்கள். பெண்கள் ஏன் வேலைகளை விடுகிறார்கள் என்பதற்கான காரணங்களைப் பற்றி நாங்கள் ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தோம். ஏன் விடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே ஏன் வேலையில் இருக்கிறார் கள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டி வந்தது.

இந்தியா முழுவதிலும் 1,480 பெண் களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டோம். அவர்கள் அத்தனை பேருமே எட்டு வருடங்களுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள். 28 முதல் 42 வயதுக்குட் பட்டவர்கள். இவர்களில் 490 பெண்களிடம் பொதுவான ஒரு விஷயத்தைப் பார்த்தோம். அவர்கள் அனைவரும் மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாக இருந்தார்கள். பதின்ம வயதில் அவர்கள் அனைவருக்கும் ரோல் மாடல், கரியர் கோச் மற்றும் மென்ட்டார் என மூன்று பேர் இருந்ததாலேயே முன்னுக்கு வந்ததாகச் சொன்னார்கள். `ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பெண்களுக்கு இந்த மூன்றும் அதிர்ஷ்ட வசமாகக் கிடைத்தவை. அதையே நாம் ஏன் மற்ற பெண்களுக்கும் ஏற்படுத்தித் தரக் கூடாது’ என யோசித்தோம். அப்படி உருவானதுதான்... `புராஜெக்ட் புத்ரி’.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த நூறு பள்ளிகளில் பயிலும் 10 ஆயிரம் மாணவிகளை வழிநடத்திச் செல்கிற நிகழ்ச்சி இது. 8-வது படிக்கிறபோது இந்தத் திட்டத்துக்குள் இணைந்தால் ப்ளஸ் டூ முடிக்கிற வரை இருப்பார்கள். இவர்களுக்கு வருடந்தோறும் விதம்விதமான திறன்கள்பயிற்றுவிக்கப்படும். அப்படி மொத்தம் 40 திறன்கள். வருடத்துக்கு 30 மணி நேரம் பயிற்சியளிக்கப்படும். 300 வழிகாட்டிகள் இருப்பார்கள். 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே வழிகாட்டிகளாக இருக்க முடியும். கவுன் சலிங் அனுபவம் கொண்ட வர்களாக இருப்பது சிறப்பு. தொடர்ந்து பணியில் இருப்பவர்கள் அல்லது வேலையிலிருந்து பிரேக் எடுத்தவர்கள் என யாராகவும் இருக்கலாம். இப்போது வழி காட்டிகளுக்கான தேடல் நடந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு நாங்கள் இலவசப் பயிற்சி கொடுப் போம். வேலை குறித்த நோக்கத்தன்மையில் அவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். அதாவது எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு பெண் தைரியத்தோடும் தொலைநோக்குப் பார்வையுடனும் `இந்தப் பிரச்னையை என்னால் சமாளிக்க முடியும்’ என்கிற மனவலிமையுடனும் நடந்துகொள்ள வைப்பதற்கான பயிற்சி அது. பல திறன்களை மூலம் அது கற்றுத் தரப்படும். இதுதான் புராஜெக்ட் புத்ரி...’’ - புதிய திட்டம் பற்றிப் பேசுபவர், பெண்களுக்கும் வேலைக்குமான பந்தம் பாதியிலேயே விட்டுப்போவதன் பின்னணியையும் ஆய்வு செய்திருக்கிறார்.

‘`கல்யாணம், குழந்தைப்பேறு, கணவருக்கு வேலை மாற்றம் காரணமாக வேறு ஊருக்குப் போகும்போது அவருடனேயே செல்ல வேண்டிய கட்டாயம் போன்றவைதான் பெண்கள் வேலையிலிருந்து பிரேக் எடுப்பதற்கான பிரதான காரணங்களாக இருக்கின்றன. இந்தியாவில் 30 வயதுக்குள்ளான பெண்களில் 48 சதவிகிதம் பேர், இந்தக் காரணங்களுக்காகத்தான் பாதியிலேயே வேலையிலிருந்து விலகுகிறார்கள். வேலை என்பது தனக்கு மிகவும் முக்கியம் என்கிற நோக்கத்தன்மை அவசியம்.

நிறுவனங்கள், பணியிடத்துக்குப் பெண்களை அதிகம் வரவேற்கிற அளவுக்குத் தங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வசதிகள் அமைத்துத் தரலாம். அவர்களுக்கு வசதியான பணி நேரம் அமைத்துக் கொடுக்கலாம். ஒரு பெண் தன் விருப்பத்தின்பேரில் வேலையிலிருந்து விலகியிருப்பது தவறில்லை. அது அவளின் தனிப்பட்ட முடிவு. ஆனால், வேலை என்பதைத் தன் குடும்பமும் உறவுகளும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமாகப் பார்க்காமல், தன் நாட்டை முன்னேற்றுவதற்கான விஷயமாகப் பார்க்க வேண்டியதும் அவசியம். அப்படியொரு எண்ணத்தைப் பெண்களின் மனங்களில் விதைப்பதற்காகவும் ‘புத்ரி’யைப் பார்க்கிறோம்...’’ என்று கூறும் சௌந்தர்யா, சின்ன இடைவெளிவிட்டு, வேலையைவிடும் பெண்கள் சந்திக்கிற சவால்களையும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிகளையும் விளக்குகிறார்...

‘`தற்காலிகமாக வேலையை விட்டுவிட்டு, பிறகு மீண்டும் வேலை தேடும் பெண்கள் சந்திக்கிற சவால்கள் மிகவும் அதிகம். அப்படி வருகிற பெண்களுக்கு இடைவெளிக்கு முன்பு வாங்கிய சம்பளமும் மீண்டும் புதிதாகச் சேர்ந்து வாங்கப்போகிற சம்பளமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். இது போன்ற பிரச்னைகள்தான் இந்தியாவில் ‘ஜெண்டர் பே கேப்’ என்பதை உருவாக்குகிறது. திரும்பவும் வேலைக்கு வரும்போது பெண்களின் தன்னம்பிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் அவர்கள் தங்களின் திறமைகளை அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். நிறைய புதுப்புது விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். `வேலைக்கே போனதில்லை... திடீரென வேலைக்குப் போக ஆசைப்படுகிறோம்’ என வருகிற பெண்களுக்கு மனதளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் பயிற்சிகளைக் கொடுக்கிறோம். ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அவர்களுக்கு ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி இருக்க வேண்டும். அவர்கள் எந்தத் துறையில் வேலை பார்க்க ஆசைப்படுகிறார்கள் எனப் பார்க்க வேண்டும். எங்களைப்போன்ற வழிகாட்டும் அமைப்பு நடத்துபவர்களை அணுகினால், அவர்களுக்குத் தெளிவான ஆலோசனைகளைச் சொல்கிறோம். எங்களுடைய `அவதார்’ நெட்வொர்க்கில் இரண்டரை லட்சம் பெண்கள் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். அத்தனை பேரின் பின்னணியையும் வைத்துப் பார்த்து அலசி ஆராய்ந்ததன் அடிப்படையில்தான் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்குகிறோம்.

`எந்தச் சூழலிலும் வேலையை விட்டுக் கொடுக்காதீர்கள்’ என்பதே என் அட்வைஸ். தவிர்க்கமுடியாத நிலையில் வேலையிலிருந்து தற்காலிக பிரேக் எடுத்தே ஆக வேண்டும் என்றால், அதற்கான சரியான திட்டமிடல் இருக்க வேண்டும். பொருளாதாரரீதியாக அந்த இடைவெளியில் சமாளிக்கிற திறமை வேண்டும். மறுபடி எப்போது வேலைக்குச் சேரப் போகிறோம் என்கிற தெளிவு வேண்டும். `பிளான் ஏ’, `பிளான் பி’ என இரண்டு வேண்டும். `பிளான் ஏ’வின்படி எதுவும் நடக்கவில்லை என்றால் `பிளான் பி’க்குத் தயாராக இருக்க வேண்டும். இப்படி எல்லா விஷயங்களிலும் தெளிவாக இருந்தால் மட்டுமே வேலையிலிருந்து தற்காலிக பிரேக் எடுக்கலாம். ஏனென்றால் வேலை என்பது உங்கள் சுயநலம் மட்டுமே சார்ந்த விஷயமல்ல... அதில் அடங்கியிருப்பது தேசத்தின் பொதுநலமும்கூட!’’

- சௌந்தர்யா தன் வார்த்தைகளில் குழைத்துப் பூசியிருந்த அக்கறையும் அன்பும் அசர வைக்கின்றன!