Published:Updated:

“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”

“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”

சரளா விஜயகுமாரின் அல்டிமேட் சேலஞ்ச்காஸ்ட்யூம் ஸ்டார்ஆர்.வைதேகி

மிழ் சினிமாவை ஆள்கிற பெண்களில்  பலரும்  வடக்கத்திய வரவுகளாகவோ, கேரளத்துக் கண்மணி களாகவோ இருப்பதைப் பார்க்கலாம். முதன்முறையாகச் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு ஃபிளைட் பிடித்திருக்கிறார் ஒரு பெண். சாரா என்கிற சரளா விஜயகுமார். தமிழ் சினிமாவின் இளம் காஸ்ட்யூம் டிசைனர்களில் ஒருவர். சிங்கப்பூரில் கெமிக்கல் அண்ட் ஃபார்மசூட்டிகல் இன்ஜினீயரிங் முடித்தவருக்கு காஸ்ட்யூம் டிசைனர் கனவு.     

“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”
“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``அம்மா, அப்பா சொன்னதுக்காக இன்ஜினீயரிங் படிச்சேன். அதை முடிச்சுட்டு ஃபேஷன் டிசைனிங் பண்ணினேன். இன்னிக்கு சினிமாவுல பிரபலமா இருக்கிற காஸ்ட்யூம் டிசைனர்ஸ் பலரும் பெரிய பின்னணியோடு வந்தவங்க. எனக்கு அப்படி எதுவும் இல்லை. சிங்கப்பூர்ல ‘சாராஸ்’னு என்னோட சொந்த லேபிள் ஸ்டோர் வெச்சிருந்தேன். அங்கே உள்ள பிரபலங்கள் பல பேருக்கு டிரெஸ் டிசைன் பண்ணின அனுபவம் எனக்கு உண்டு. சினிமாவுல காஸ்ட்யூம் டிசைனரா கால் பதிக்கணும்கிற கனவு மட்டும் இருந்தது. அப்பதான் சிங்கப்பூர் வசந்தம் டி.வி-யில ‘தி ஃபேஷன் சேலஞ்ச்’னு ஒரு ரியாலிட்டி ஷோவுக்கான அறிவிப்பு வந்தது. அதுல ஜெயிக்கிறவங்களுக்கு ‘பாணா காத்தாடி’ படத்துல காஸ்ட்யூம் டிசைனரா வொர்க் பண்ற வாய்ப்பு கிடைக்கும்னு சொன்னாங்க. ஜெயிச்சேன். என்னோட ஃபேஷன் டிசைனர் கனவு நனவானது அப்படித்தான். அந்தப் படத்துல அதர்வாவுக்கும் சமந்தாவுக்கும் நான்தான் டிசைனர். அப்புறம் ‘எங்கே யும் எப்போதும்’ படத்துல ஜெய், அனன்யா, அஞ்சலி, சர்வானந்த்னு நாலு பேருக்கும் நான்தான் டிசைனர். அதுலயும் என் வொர்க் பிடிச்சதால ‘எங்கேயும் எப்போதும்’ டைரக்டர் சரவணனோட அடுத்த படம் ‘வலியவன்’ல வாய்ப்பு வந்தது. அதுலயும் ஜெய்க்கும் ஆண்ட்ரியாவுக்கும் டிசைன் பண்ணினேன்.  ஆண்ட்ரியாவுக்கு நான் பண்ணின காஸ்ட்யூம்ஸ் ரொம்பப் பிடிச்சுப் போனதால அடுத்து ‘இது நம்ம ஆளு’ படத்துக்கும் என்னையே வொர்க் பண்ணச் சொன்னாங்க...’’ - சந்தோஷம் பகிர்கிற சரளாவுக்கு டிரெஸ் டிசைனிங்  வாய்ப்புகள் வரிசைக்கட்டிக்கொண்டு வருகின்றன.   

“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”
“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”

‘`தம்பி ராமையாவின் மகன் அறிமுகமாகிற ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ படத்தோட மொத்த டீமுக்கும், அப்புறம் ‘கவலை வேண்டாம்’ படத்துல ஜீவா, ஆர்.ஜே.பாலாஜி, பாபி சிம்ஹா, சுனைனா, பாலசரவணனுக்கும்  டிசைன் பண்ணினேன். அவங்ககூடவே எல்லா லொகேஷனுக்கும் டிராவல் பண்ணினது மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ். இப்போ ‘வீரா’னு  ஒரு படத்துல ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனுக்குப் பண்றேன். ஜீவாவுக்கு என்னோட ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். அதனாலயே ‘கீ’ படத்துல அவருக்கு பெர்சனல் டிசைனரா இருக்கேன். இதெல்லாம் போக ஆண்ட்ரியாவுக்கும் பாடகி சின்மயிக்கும் டி.வி ஷோஸுக்கு நான்தான் டிசைன் பண்றேன். எந்த லட்சியத்துக்காக சிங்கப்பூர்லேருந்து கிளம்பி வந்தேனோ, அந்த லட்சியம் ஓரளவு நிறைவேறிடுச்சு. இந்த மகிழ்ச்சி தொடரணும்னா எண்ணம், செயல், சிந்தனைன்னு எல்லாத்துலயும் எப்போதும் வேலையைப் பத்தித்தான் நினைச்சிட்டிருக்கணும். அப்பதான் தாக்குப்பிடிக்க முடியும்...’’ - உண்மை விளம்புகிறவர், ஃபேஷன் டிசைனர்கள் எதிர்கொள்கிற சவால்களையும் முன் வைக்கிறார்...    

“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”
“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”

‘`சினிமாவுல காஸ்ட்யூம் டிசைனரா கிறது ரொம்ப ஈஸினு பலரும் நினைக் கிறாங்க. அப்படியெல்லாம் இல்லை. டிசைன் பண்ணத் தெரிஞ்சிருந்தா மட்டும் போதாது. நீங்க ஸ்டைல் பண்ணப்போற நபர் யார், அவங்களோட உடல்வாகு எப்படிப்பட்டது, அவங் களுக்கு எது பொருந்தும், எந்த உடைகள்ல அவங்க வசதியா ஃபீல் பண்ணுவாங்கனு எல்லாத்தையும் பார்க்கணும். அதுமட்டுமில்லாமல் படத்துக்கா, விளம்பரத்துக்கா, ஸ்டேஜ் ஷோவுக்கானு என்ன காரணத்துக்காக டிசைன் பண்றோம் கிறதும் முக்கியம். படமா இருந்தா டைரக்டரோட எதிர்பார்ப்பு, கேமரா மேனோட கலர் சென்ஸ், கூட நடிக்கிறவங்க என்ன கலர்ல டிரெஸ் பண்றாங்க, கதை எந்த சீஸன்ல நடக்குது, எந்த கேரக்டருக்காக டிசைன் பண்றோம்னு நுணுக்கமான விஷயங்களையும் மனசுல வெச்சுக் கிட்டு வொர்க் பண்ணணும். இத்தனை விஷயங்களையும் தாண்டி, பட்ஜெட்டுக்குள்ள வொர்க் பண்ணணும். இது எல்லாத்துலயும் பாஸ் பண்ணினாதான் அடுத்த படம் கிடைக்கும்...’’ - நிஜமான சிரமங்கள் சொல்கிறவருக்கு அல்டிமேட் ஆசையொன்றும் இருக்கிறது...    

“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”
“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”
“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”


‘`என்னைத் தூக்கத்துல தட்டியெழுப்பிக் கேட்டீங் கன்னாகூட இதைத்தான் சொல்வேன். விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும். நாடு விட்டு நாடு தாண்டி வந்ததுக்கு அப்பதான் ஓர் அர்த்தம் கிடைக் கும். எனக்கு நானே ஃபிக்ஸ் பண்ணிக் கிட்ட சேலஞ்சும் அதுதான்.’’ 

“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”
“விஜய்க்கு ஒரு படத்துலயாவது டிரெஸ் டிசைன் பண்ணணும்!”

சேலஞ்ச் அக்செப்டட்!