Published:Updated:

இணையத்தைக் கலக்கும் இளைய ராணிகள்!

இணையத்தைக் கலக்கும் இளைய ராணிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
இணையத்தைக் கலக்கும் இளைய ராணிகள்!

ஆன்லைன் அசத்தல்தார்மிக் லீ - படம்: தி.குமரகுருபரன்

ஷார்ட் ஃபிலிம், ஆக்டிங், ஆல்பம், டப்ஸ்மாஷ் என யூடியூப் வீடியோக்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் ஜென்Z பெண்கள்! எப்போதும் அப்டேட் வெர்ஷனில் கலக்கிக்கொண்டிருக்கும் இந்த சந்தோஷப் பெண்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமா?  

இணையத்தைக் கலக்கும் இளைய ராணிகள்!

ஆனந்தி

ட்ரெண்டிங் காமெடியில் கலகலப்பூட்டும் யூடியூப் சேனல்தான் `மெட்ராஸ் சென்ட்ரல்'. இதில் அரசியல் பரிதாபங்களில் ஆரம்பித்து `ரீல் அந்துப்போச்சு' எனும் ஷோ வரை ஆனந்தி தொட்டதெல்லாம் அதிரிபுதிரி ஹிட்.

``சொந்த ஊர் கோயம்புத்தூர். பி.எஸ்.ஜி காலேஜ்ல விஸ்காம் படிச்சேன். ஒருபக்கம் படிப்பு, இன்னொருபக்கம் சூரியன் எஃப்.எம்-ல ஆர்.ஜே-னு பார்ட் டைம் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே ஒரு வருஷம் பார்ட் டைமாவும், அப்புறம் ரெண்டு வருஷம் ஃபுல் டைமாவும் வேலை பார்த்தேன். அப்புறம் சென்னை வந்து பிக் எஃப்.எம்-ல வேலை பார்த்தேன். அதோடு,  புதுயுகம் டி.வி-யில தொகுப்பாளராவும்  ஒரே நேரத்துல வேற வேற டைமிங்ல வேலை பார்த்தேன். இதெல்லாம் நடக்கிற கேப்லதான் `மெட்ராஸ் சென்ட்ரல்'லேயும் வாய்ப்புக் கிடைச்சது.  இதை வெச்சு சினிமா வாய்ப்பு கிடைக்கும்னு தேடிக்கிட்டு இருக்கேன். கண்டிப்பா ஒரு நாள் நடக்கும்னு நம்புறேன்!’’    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காவ்யா   

`மெட்ராஸ் சென்ட்ரல்' சேனலில் குழுவோடு இணைந்து விமர்சனம் செய்வதில் காவ்யா கில்லாடி.

‘`சொந்த ஊரு சென்னைதான். ஃபேஷன் டிசைனிங் படிச்சிருக்கேன். சினிமாவுல ஃபேஷன் தொடர்பான வேலை பார்க்கணும்னு ஆசை. ஆனா, ‘எதுக்கு மீடியா... அதெல்லாம் நமக்கு வேண்டாம்; உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்’னு வீட்ல சொன்னாங்க. எனக்கு லவ் மேரேஜ்லதான் விருப்பம். அதைவிட சினிமால வொர்க் பண்றதுலதான் ரொம்ப ஆசை. ஆக்டிங் வேண்டாம். டப்பிங், ஆங்கரிங் மாதிரி ஏதாவது வாய்ப்புக்காகத்தான் வெயிட் பண்ணேன். அந்த நேரத்துலதான் `மெட்ராஸ் சென்ட்ரல்'ல வாய்ப்பு கிடைச்சது.  நல்லா போயிட்டுருக்கு. இதை வெச்சு பெரிய வாய்ப்புகள் வரும்னு நம்புறேன்.’’     

இணையத்தைக் கலக்கும் இளைய ராணிகள்!

மாயா

ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய `வானவில் வாழ்க்கை' எனும் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் மாயா. தொடர்ந்து திரைப்படங்கள் பலவற்றில் சிறிய ரோல்களில் நடித்திருந்தாலும் பார்வையற்ற பெண்ணாக இவர் நடித்திருந்த
`தி அஃபையர்' எனும் குறும்படம் இவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது.


``நான் மதுரையில ஸ்கூல் படிச்சேன். பெங்களூர்ல இன்ஜினீயரிங் முடிச்சேன். எனக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் மேல ரொம்பவே ஆர்வம். சின்ன வயசில இருந்தே நல்லா பாடுவேன். ஒருநாள் நான் வீட்ல பாடிக்கிட்டு இருந்தேன். அதைப் பார்த்துட்டுதான் ஜேம்ஸ் வசந்தன் சார் அவர் படத்துல வாய்ப்பு கொடுத்தார். எனக்கு இன்ஜினீயரிங் மேல அவ்வளவு ஈடுபாடு இல்லாததால, சினிமாதான் நல்ல வழின்னு அதைத் தேர்ந்தெடுத்தேன். `தி அஃபையர்' குறும்படத்தைத் தொடர்ந்து நிறைய  நல்ல வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. ஹாப்பிதான்!’’     

இணையத்தைக் கலக்கும் இளைய ராணிகள்!

சோபியா அஷ்ரஃப்

யூடியூபில் `ப்ளஷ்' எனும் பக்கத்தில் தானே பாடியும் நடித்தும் சில வீடியோக்களை வெளியிட்டார் சோபியா அஷ்ரஃப். `இவரது `கொடைக்கானல் வோன்ட்', ‘என் ஓட்டு உனக்கு இல்லை', `Any Good News'  உள்பட பல வீடியோக்கள் இணையத்தை கலக்கியவை.

``நான் சென்னையில பிறந்து வளர்ந்த பொண்ணு. சொந்த ஊர் கேரளா. சின்ன வயசுல இருந்தே ஆர்ட்ஸ் மேல ஆர்வம் ஜாஸ்தி. எஸ்.ஐ.டி காலேஜ்ல ‘இன்டீரியர் டிசைனிங்’ படிச்சேன். அதுக்கு அப்புறம் ‘ஸ்டெல்லா மேரிஸ்’ காலேஜ்ல ‘கிராஃபிக் டிசைனிங்’ படிச்சேன். பத்து வயசு இருக்கும்போது எழுத்துமேல அதிக ஆர்வம் வந்துச்சு. அந்த டைம்ல அம்மா கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தாங்க. அதுல வீடியோ எடிட்டிங், ஆடியோ எடிட்டிங்னு ஏதாவது சாஃப்ட்வேர் கத்துக்கிட்டே இருப்பேன். கொஞ்சம் கொஞ்சமா யூடியூப்ல வீடியோ பண்ண ஆரம்பிச்சேன். தமிழ் மியூஸிக்கை நேஷனல் லெவெல்ல கொண்டு போகணும்கிறதுதான் என்னோட ஆசை. ஒரு பொண்ணுக்கு அவங்க அம்மா அப்பா நகை வாங்கிக் கொடுக்கிறதைவிட, அவங்க ஆர்வத்தைத் தெரிஞ்சுக்கிட்டு அது சம்பந்தமா ஒரு பொருள் வாங்கிக் கொடுங்க போதும்.’’     

இணையத்தைக் கலக்கும் இளைய ராணிகள்!

சிந்துஜா

டப்ஸ்மாஷ் மூலமாகத் தன் நடிப்பாற்றலை வெளிகாட்டி இணையத்தில் வைரலானவர்கள் பலர். டி.ஆர், வடிவேலு மற்றும் பலரின் குரல்களுக்குத் தன் ஃபேஸ் ரியாக்‌ஷன்ஸைத் தெறிக்கவிட்டுத் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உண்டாக்கியவர்தான் சிந்துஜா.


``நான் சென்னைப் பொண்ணு. எனக்கு அமெரிக்க மாப்பிள்ளை. சென்னைக்கும் அமெரிக்காவுக்குமாவே என்னோட டிராவல் இருக்கும். இந்த நேரத்துலதான் டப்ஸ்மாஷ் அப்ளிகேஷன் பற்றித் தெரியவந்துச்சு. மிர்ணாளினி, சாருனு டப்ஸ்மாஷ் பண்ற நிறைய பெண்களோட வீடியோக்களைப்் பார்த்துட்டு நானும் அதேமாதிரி செஞ்சு சோஷியல் மீடியாவுல அப்லோடு பண்ணினேன். நல்ல ரெஸ்பான்ஸ் வந்துச்சு. நிறையப் பேர் என்னோட செல்ஃபி எடுத்தாங்க. அது எனக்கு ஜாலியா இருந்துச்சு. என்னோட டப்ஸ்மாஷ் எனக்கே வாட்ஸ்அப்ல வரும். இதெல்லாம் பார்க்கிறப்போ, சினிமாவில் நடிக்கணும்னு ஆசையா இருக்கும். நிறைய வாய்ப்புகளும் வந்துச்சு. வீட்லதான் விட மாட்டேங்குறாங்க. எது நடந்தாலும் நான் டப்ஸ்மாஷை பண்றதை மட்டும் விடவே மாட்டேன்.’’