Published:Updated:

மனுஷி - டென்ஷனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு!

மனுஷி - டென்ஷனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - டென்ஷனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - டென்ஷனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - டென்ஷனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - டென்ஷனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு!

வாழ்க்கையை இன்பமாக நடத்த வேண்டும் என்பதுதான் இயற்கையின் நோக்கம். இன்பம் என்பது தொடக்கத்தில் கல்வி வாயிலாகவும் பிறகு, திருமணம் வாயிலாகவும் ஏற்பட்டு பிறகு, குழந்தைப்பேற்றில் நிறைவுபெறும். கணவனுக்கு மனைவியிடமும் மனைவிக்குக் கணவனிடமும் சோர்வு தோன்றுவதுண்டு. ஆனால், குழந்தையிடம் எப்போதும் சோர்வு தோன்றுவதே இல்லை.

- `பெண்ணின் பெருமை' நூலில் திரு.வி.க   

மனுஷி - டென்ஷனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடு!

ஒரு பெண்ணுக்குத் திருமணமான ஓரிரு மாதங்களிலேயே அவள் எதிர்கொள்ளும் கேள்வி, ‘ஏதும் விசேஷம் இல்லையா?’ என்பதுதான்.

ஆறு மாதங்கள் ஆன நிலையில், அதுவரை மறைமுகமாகப் பவித்ராவை எதிர்கொண்ட இக்கேள்வியை இப்போது நேரடியாகவே கேட்க நேரிட்டது.

தன் நிலையை அம்மா தேவசேனாவிடம் கூறினாள். தேவசேனாவுக்கும் மகளின் கவலை புரிந்தது. தன் தோழியும் மகப்பேறு மருத்துவருமான டாக்டர் கோதையை வீட்டுக்கு வரும்படி தொலைபேசியில் அழைத்தாள்.

தேவசேனா அழைத்ததுமே வீட்டுக்கு வந்த கோதை, ‘`அப்பப்பா, வேலைக்கு நடுவில் இப்படி ஏதாவது வாய்ப்பு வந்தால்தான் உன் வீட்டுக்கே வர முடியுது. சரி, எதுக்கு என்னை வரச்சொன்னே?’’ என்று கேட்டாள்.

``அதெல்லாம் ஒன்றுமில்லை. திருமணமான புதிதில் வழக்கமாகக் கேட்கப்படும் அந்தக் கேள்விதான் பவித்ராவிடம் தொடர்ந்து கேட்கப்படுது. பவித்ரா ரொம்பவே பயப்படுகிறாள். அதான் உன்னை வரச் சொன்னேன்.’’

``அவ்வளவுதானே, நீ ஒண்ணும் கவலைப் படாதே. நான் பார்த்துக்கறேன்’’ என்ற கோதை, ‘`எங்கே பவித்ரா?’’ என்று கேட்டாள்.

``இன்னும் சில நிமிஷங்கள்ல அவ இங்க இருப்பா’’ என்று சொல்லவும், காலிங் பெல் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

மகளை வரவேற்க கீழே போனாள் தேவசேனா. மகளின் பிரச்னைக்குத் தீர்வுகாண தற்செயலாக நிகழ்வது போல ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்த தேவசேனாவை நினைத்த கோதை, ‘தன் தோழிதான் எத்தனை அழகாகப் பிரச்னைகளைக் கையாள்கிறாள்!’ என்று வியந்துகொண்டிருந்தபோதே,

மேலே ஏறி பால்கனிக்கு வந்த பவித்ரா, ``சர்ப்ரைஸ் ஆன்ட்டி! நானே உங்களைப் பார்க்க வரணும்னு நெனைச்சேன். எப்படி இருக்கீங்க?” என்றாள்.

``உங்கம்மா சமத்து... ஹாஸ்பிடலுக்கு வந்தா பெரிய க்யூ இருக்கும். அத்தனை கூட்டத்தைப் பார்த்தா நீ மிரண்டுடுவேன்னுதான் என்னையே இங்கே வரவழைச்சுட்டா. நீ என்னை எதுக்கு பார்க்கணும்னு நெனைச்சேன்னு எனக்குப் புரியுது. மத்தவங்க கேட்கறதையெல்லாம் காதுல போட்டுக்காதே. குறிப்பா மனசுக்குள்ள கொண்டு போகவே போகாதே’’ என்ற கோதை தொடர்ந்து...

‘`ரெகுலரா பிரியட்ஸ் வருதா?’’ என்று கேட்டாள்.

``ம்’’ என்பதுபோல மெள்ளத் தலையாட்டினாள் பவித்ரா.

‘`அப்ப சரி. பயப்படவே வேண்டாம். இதெல்லாம் ஹார்மோன்களின் மேஜிக். மனசு சந்தோஷமா இருந்தாலே எல்லா ஹார்மோன்களும் நல்லா ஃபங்ஷன் பண்ணும். அதனால எப்பவுமே
பி ஹேப்பி!’’ என்றாள்.

``நான் எப்பவுமே ஹேப்பியாத்தான் இருக்கேன்’’ என்றாள் பவித்ரா.

``ரொம்ப சந்தோஷம். கல்யாணத்துக்கப்புறம் பெண் முதன்முதலில் கணவனைச் சந்திக்கச் செல்லும்போது பால் கொடுத்து அனுப்பறதே இதுக்குத்தான். வெண்ணெய் எடுக்காத பால் மற்றும் பாலாடையில் உடம்புக்குத் தேவையான `குட் கொலஸ்ட்ரால்' நிறையவே இருக்கு. இது `ஹார்மோன் டெவலப்பிங் அண்ட் பங்க்‌ஷனிங்'குக்கு ரொம்பவே உதவி செய்யும். முன்னெல்லாம் எல்லோர் வீட்டிலும் மாடுகளை வளர்த்ததால், நல்ல கொலஸ்ட்ரால் இயற்கையாவே கெடைச்சது’’ என்ற டாக்டரை இடைமறித்த பவித்ரா,

``நான் வெண்ணெய் எடுத்த பாலைத்தான் குடிக்கறேன். பிம்பிள்ஸ் வரும்னு நெய், வெண்ணெய் லாம் சேர்த்துக்கறதில்லை’’ என்றாள்.

``தப்பு பவித்ரா. குழந்தை வேணும்னா சிலவற்றைச்  சேர்த்துக்கவும் சிலவற்றை ஒதுக்கவும்தான் செய்யணும். பிம்பிள்ஸ் வர இது மட்டுமே காரணம் இல்லே’’ என்றாள்.

``ஒதுக்கவேண்டியது என்னென்ன ஆன்ட்டி?’’

‘`ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், அதிக நாள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைக் கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கோ. முக்கியமா நீராகாரம்’’ என்ற கோதை, ‘`இரவு வடித்த சாதத்தில் நீர் ஊற்றி, மறுநாள் காலையில் மோர் கலந்தோ, அப்படியே சிறிது உப்பு போட்டோ குடிப்பது நல்லது. இதில் பி-12 வைட்டமின் நிறைய இருப்பதால், இம்யூன்ஃபங்ஷன், இம்ப்ளான்டேஷன் (கருப் பையில் கரு தங்குவதற்கான சக்தி) போன்றவை இயல்பாக நடக்க உதவும்.’’

``அப்பப்பா, நீராகாரத்துலயா இவ்வளவு விஷயம் இருக்கு?’’

``அதனாலதான் நம் முன்னோர் இதுபோன்ற பழக்க வழக்கங்களை இயல்பாவே ஏற்படுத்தி இருக்காங்க. பொழுது விடிந்ததும் வாசலில் கோலம் போடும் பழக்கத்தினால், காலையில் சூரியனின் கிரணங்களிலிருந்து கிடைக்கும்  வைட்டமின் டி, கரு உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். அரசும் வேம்பும் இணைந்த மரங்களை விடியலில் சுற்றச்சொன்னதும் இதற்குத்தான்’’ என்ற கோதையை இடைமறித்த பவித்ரா...

``ஓ, அப்படின்னா ஏசி ரூமே கதின்னு இருக்காம சூரியனையும் கண்டுக்கணும்கறீங்க?’’ என்றாள் பவித்ரா.

``சரியாகச் சொன்னாய். அரசு-வேம்பு இணைந்திருக்கும் மரத்தைச் சுற்றும்போதுகூட ஈரத்துணியோட வலம்வர வேண்டும். இதுலயும் உளவியல் சார்ந்த அறிவியல் இருக்கத்தான் செய்யுது. வெயில் சுட்டெரிக்காமல் இருக்கறதோட, ஆடையில் இருக்கற ஈரம் போறவரைக்கும் வெயிலில் இருக்கவே மனசு விரும்பும். அதனால் `வைட்டமின் டி' சுலபமா கிடைச்சிடும்’’ என்ற கோதை தொடர்ந்து, ``நாம் வீட்டில் செய்யும் அன்றாட வேலைகளைக்கூட சேரிலோ, சோபாவிலோ உட்கார்ந்து செய்யறதை விடவும் தரையில் உட்கார்ந்து செய்யறது நல்லது. முடிஞ்சா சில ஆசனங்களையும் செய்யலாம்’’ என்றாள்.

``இன்னும் வேற எதுவும் செய்யணுமா ஆன்ட்டி?’’

``முக்கியமா ஒண்ணு இருக்கு. இப்ப நான் சொன்னதெல்லாம் என்னென்ன செய்ய வேணும்கறதைப் பத்திதான். இதுக்கெல்லாம் மெயின் கனெக்‌ஷன் ஒண்ணு இருக்கு...’’

``அது என்ன மெயின் கனெக்‌ஷன் ஆன்ட்டி?’’

``அதான் டென்ஷன். இந்த மெயின் கனெக்‌ஷனை ஆஃப் செஞ்சிட்டுதான் நான் சொன்னதை கடைப்பிடிக்கணும். மனசுல டென்ஷனுடன் இதையெல்லாம் மாஞ்சி மாஞ்சி செய்யறதால கருத்தரிக்கறது டிலே ஆகிட்டே போகுது. ரொம்ப ரிலாக்ஸ்டாக உடம்பில் நடக்கும் மாற்றங்களைக் கவனித்து ரசித்து செய்யும்போது தாய்மை ரொம்பவே எளிதாகிடும். அதனாலதான் அந்தக் காலத்துல தீர்த்தயாத்திரை போகச் சொன்னாங்க. என்கிட்ட ரெகுலரா ட்ரீட்மென்ட்ல இருக்கறவங்க வெகேஷன்ல டூர் போயிட்டு வந்து கன்டின்யூ பண்ணிக்கறோம்னு சொல்வாங்க. ஆனா, அவங்க வரும்போதே பாசிட்டிவ் ரிசல்ட் இருக்கும். எப்படின்னு ஆச்சர்யமா கேட்பாங்க. அவங்கக்கிட்ட நான் சொல்றது இதுதான்... ‘எப்பவுமே பி ஹேப்பி’. அதனால முதல்ல டென்ஷன்ங்கற மெயின் ஸ்விட்சை ஆஃப் பண்ணிடு!’’

‘`சரி ஆன்ட்டி, இனிமேல் டென்ஷன் இல்லாம பார்த்துக்கறேன்...’’

‘`முன்னெல்லாம் பெரியவங்க குழந்தைப் பேறு தாமதமானா ஸ்லோகம் சொல்லு, கோயிலுக்குப் போய் பிரதட்சணம் பண்ணுன்னு சொல்வாங்க. ‘மரத்தை வெச்சவன் தண்ணீர் விடாம போகமாட்டான்... உன் குழந்தையை என் கையால தூக்கிக் கொஞ்சிட்டுத்தான் போவேன்’னு பாசிட்டிவாவே பேசுவாங்க. இன்று அறிவியல் வளர்ந்திருக்கற அளவுக்கு, நமக்கு நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளைச் சொல்லும் பெரியவங்க குறைஞ்சிட்டாங்க’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மேலே வந்த தேவசேனா,

‘`நம்பிக்கை, அதானே வாழ்க்கை!’’ என்று சொல்ல மூவரும் சேர்ந்தே சிரித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism