Published:Updated:

வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகம் அப்படித்தான்!

வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகம் அப்படித்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகம் அப்படித்தான்!

சாஹா

‘`புனைகதைகள் படிப்பதில் எனக்குப் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. சுயமுன்னேற்றம் பற்றி பேசும் புத்தகங்களையும் சுயசரிதைப் புத்தகங் களையும்தான் அதிகம் படிப்பேன். சிறுவயதிலிருந்தே நிஜவாழ்க்கை சம்பவங்களைப் படிப்பதுதான் பிடிக்கும். பிரமாதமான வரவேற்பு பெறும் புனை கதைகள்கூட என்னை ஈர்த்ததில்லை.          

வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகம் அப்படித்தான்!

நான் கொஞ்சம் பழைமையானவள். டேப்லட்டிலோ, கிண்டிலிலோ புத்தகங்கள் படிப்பது பிடிக்காது. புத்தகமாகக் கையில் வைத்துப் படித்தால்தான் திருப்தி.

2010-ல் ஜப்பானிய எழுத்தாளர் ஹரூக்கி முராகமி பற்றிக் கேள்விப்பட்டேன். அவருடைய ‘ஐக்யூ84’ என்கிற புத்தகம் ரொம்பவும் உயிரோட்டமுள்ளதாக இருப்பதாகச் சிலர் சொன்னார்கள். முராகமி என்கிற பெயர்தான் முதலில் என்னைக் கவர்ந்தது. ஏர்போர்ட் புத்தகக் கடையில் இந்தப் புத்தகம் கண்ணில் பட்டபோது அந்தப் பெயருக்காகவே வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். புத்தகம் முழுவதிலும் பரவியிருக்கும் எழுத்தாளரின் கற்பனை அத்தனை அழகு.

ஜப்பான் என்பது அதிகம் பேர் பார்த்திராத ஒரு நாடு. பாடப் புத்தகத்தில் ஹிரோஷிமா, நாகசாகி பற்றிப் படித்ததும், இன்று அந்த நாடு மீண்டெழுந்து நிற்பதும் மட்டுமே என் ஜப்பான் நினைவுகளில் எஞ்சியிருப்பவை. அவற்றையெல்லாம் தாண்டி ஜப்பானைப் புதிய கோணத்தில் காட்டியது இந்தப் புத்தகம்.

2009-ல் வெளியாகி இருக்கிறது இந்தப் புத்தகம். கதை டோக்கியோவில் நடப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை இரண்டு முக்கியமான கதாபாத்திரங்களைப் பற்றியது.  இரண்டு கேரக்டர்களுமே மனதில் ஒட்டிக்கொள்பவர்கள்.

கதையில் வரும் பெண்ணின் பெயர் ஆவ் மாமே. ஆணின் பெயர் டெங்கோ. இருவரும் வெவ்வேறு உலகங்களில் வாழ்பவர்கள். டெங்கோ ஓர் எழுத்தாளர். ஆவ் மாமே அபார்ட்மென்ட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் விசித்திரப் பிறவி. ஒரேநேரத்தில் இணையான இரண்டு உலகங்களைப் பற்றிய புத்தகம் இது. அன்றாட வாழ்க்கையில் நடக் கும் சம்பவங்களைப் பற்றிய கதை கிடையாது. ஆவ் மாமே கற்பனைக்கெட்டாத ஓர் உலகில் இருப்பவள். டெங்கோ ஒரு புத்தகம் எழுதி, அதை வேறொருவர் பெயரில் பிரசுரிப்பார். அது சிறந்த புத்தகத்துக்கான பரிசை வெல்லும். தன் சொந்த வெற்றியைக்கூட அனுபவிக்க முடியாமல் இருப்பார். இந்த இருவர், அவர்களின் உலகம், அவர்கள் சந்திக்கிற மனிதர்கள் பற்றிய புத்தகம் இது.          

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகம் அப்படித்தான்!

சிலர் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு `ஒன்றுமே புரியவில்லை' என்று நினைக்கலாம். ஆனால், எல்லா லாஜிக்குகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் படிக்கவேண்டிய புத்தகம் இது. குழந்தைகளுக்கு ஹாரி பாட்டர் புத்தகம் எப்படியோ, அப்படித்தான் இந்தப் புத்தகம் நமக்கு. எனக்கு ஹாரி பாட்டர் புரிவதில்லை. அந்த அதீதக் கற்பனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. குழந்தைகளோ அதை ரசிக்கிறார்கள். அதுபோல வித்தியாசமான ஒரு கோணத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய புத்தகம் இது.

இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு எனக்குள் நிறைய மாற்றங்களை உணர்ந்தேன். அதுவரை எனக்குத் தெரிந்த விஷயங்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, புதிதாக நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய ஆர்வத்தை இந்தப் புத்தகம் கொடுத்தது.

ஒரு வட்டத்துக்குள்ளேயே உழலாமல், ஒரு விஷயத்தைப் பற்றியே சிந்திக்காமல் புதிய விஷயங்களைப் பற்றி யோசிக்கும் தெளிவை இந்தப் புத்தகம்தான் எனக்குக் கொடுத்தது. யாருமே யோசிக்காதவற்றை யோசிக்கச் செய்தது.

சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறேன். என் மகளின் பள்ளிக்குச் சென்றால், அவளின் அம்மாவாக அங்கே இருக்கிறேன். சைக்கிளிங் போகும்போது சைக்கிளிஸ்ட்டாக இருக்கிறேன். இப்படி பல அவதாரங்களைச் சுமப்பது ஒரு கட்டத்தில் எனக்குக் குழப்பத்தைக் கொடுத்ததுண்டு. உதாரணத்துக்கு ஷூட்டிங் முடித்துவிட்டு, என் மகளை அழைக்கப் பள்ளிக்குச் சென்றால் என்னால் சினிமாவுக்குள்ளிருந்து சட்டென வெளியே வர முடியா மல் இருந்தது. வேலையை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, வேறொரு அவதாரத்துடன்தான் அடுத்த வேலையைப் பார்க்கப் போகிறோம். அந்தந்த இடங்களில் அந்தந்த அவதாரங்களாக இருக்க வேண்டி வருகிறது. வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். இந்த உலகம் அப்படித்தான்... இப்படியொரு  மிகப்பெரிய தெளிவைத் தந்ததும் இந்தப் புத்தகம்தான்!''