Published:Updated:

ஆப்ஸில் அள்ளலாம் அழகழகாக!

ஆப்ஸில் அள்ளலாம் அழகழகாக!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆப்ஸில் அள்ளலாம் அழகழகாக!

ஆண்ட்ராய்டு அகிலம்கார்க்கிபவா

நேரடியாக ஷாப்பிங் செய்ய கடைகளுக்குச் செல்பவர்களில் பலரும் இப்போது ஆன்லைன் ஷாப்பிங்குக்கு மாறி வருகிறார்கள். கண்ணைக் கவரும் பொருள்களை நம் விருப்பப்படி வாங்குவதற் காகவே ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்ஸ் நிறைய வந்துவிட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பற்றி தெரிந்துகொள்வோமா?        

ஆப்ஸில் அள்ளலாம் அழகழகாக!

Voonik  (வூனிக்)

ஷாப்பிங் விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கும். மஞ்சள் சிலருக்குப் பிடிக்காது; சிலருக்கு காலர் வைத்த டி-ஷர்ட் பிடிக்காது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆப்ஸில் அள்ளலாம் அழகழகாக!



நீளமான ஆடைகளோ, குட்டையான ஆடைகளோ சிலருடைய விருப்பத் தேர்வாக இல்லாமலே இருக்கும். எல்லோருக்குமே அனைத்து மாடல்களையும் காட்டுவது வீண்தானே? வூனிக் அப்ளிகேஷன் இந்த விஷயத்தில்தான் ஸ்கோர் செய்கிறது. உங்களுக்குக் காட்டப்படும் உடைகள் பிடித்தால், வலப்பக்கம் ஸ்வைப். பிடிக்கவில்லையெனில் இடப்பக்கம். இப்படி நமது விருப்பங்களை அலசி, நமக்கு என்ன பிடிக்கும் என்பதை வூனிக்கின் சிஸ்டம் கண்டுபிடித்துவிடும்.

உதாரணமாக, உங்கள் கண்ணில்படும் கறுப்பு உடைகளை அடுத்தடுத்து வேண்டாம் என்று சொன்னால், அதன்பின் கறுப்பை உங்கள் கண்ணிலேயே காட்டாது. மிகக் கவனமாக, நமது விருப்பங்களை ஆராய்ந்து இந்த முடிவை எடுப்பதால், வூனிக்குக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இதற்காக இமேஜ் ரெகக்னிஷன் டெக்னாலஜி என ஒரு புதிய சிஸ்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் நம் நேரம் மிச்சமாகிறது. பட்ஜெட் ஷாப்பிங், அதுவும் விரைவாக என்பவர்களுக்கு வரப்பிரசாதம் வூனிக்.

நம் ரசனைக்கேற்றபடி விரைவாக ஷாப்பிங்கை முடிக்க விரும்புபவர்களுக்கு வூனிக்தான், யூனிக் சாய்ஸ்.

ஆப்ஸில் அள்ளலாம் அழகழகாக!

ஸ்டைல்டாட்மீ (Styledotme)

ஷாப்பிங் போகும்போது நம் தோழிகளையோ, உறவினரையோ எதற்கு அழைத்துச் செல்கிறோம்?  புடவையும் சுடிதாரும் நமக்கு எப்படி இருக்கிறது என கருத்து கேட்கத்தானே? ஆன்லைன் ஷாப்பிங்கில் அதெல்லாம் கிடைக்குமா என்கிற கவலையைத் தீர்த்து வைக்கிறது ஸ்டைல்டாட்மீ. இந்த ஆப்பின் மூலமாக உங்களுக்குப் பிடித்த உடைகளைத் தேர்ந்தெடுத்து உங்கள் நண்பர்களிடம் வாக்குகள் கேட்கலாம். அவர்களின் முடிவுகளை வைத்தே வாங்கலாமா, வேண்டாமா என முடிவெடுக்கலாம். உலகெங்கும் இருக்கும் ஃபேஷன் எக்ஸ்பெர்ட்ஸ் இதில் பதில் சொல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். இனி, பூட்டப்பட்ட ட்ரையல் ரூமில் நாம் மட்டுமே பார்த்து முடிவெடுக்க வேண்டியதில்லை. நமக்காக கருத்துச் சொல்ல ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள்.

படங்களை இந்த ஆப்பில் இருந்தே எளிதாக இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யலாம். ஒருவேளை நம் படங்களுக்கு யாராவது தொடர்ந்து நெகட்டிவ் கமெண்ட்களாகக் கொடுத்து தொல்லை செய்தால், அவர்களை பிளாக் செய்யவும் முடியும்.