Published:Updated:

வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - லாபத்துக்கு லாபம்... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!

வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் -  லாபத்துக்கு லாபம்... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - லாபத்துக்கு லாபம்... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!

நேச்சுரல் டை அண்ட் டெக்ஸ்டைல் பிரின்ட்டிங்சாஹா - படம்: மீ.நிவேதன்

ணவு முதல் உறைவிடம் வரை இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படியான இயற்கை வாழ்வு குறித்த தீவிரத் தேடலில் இருக்கும் ராணி பொன்மதி, அதன் ஒருகட்டமாக, இயற்கையான சாயங்களைப் பயன்படுத்திச் செய்கிற டெக்ஸ்டைல் பிரின்ட்டிங் முறைகளைச் சாமானிய மக்களுக்குக் கொண்டுசேர்க்கிற வகையில், அவற்றுக்கான வர்த்தக வாய்ப்புகளுக்கான பயிற்சிகளைத் தருகிறார். தன் இயற்கை சார்ந்த தேடல் பற்றியும் பேசுகிறார்...     

வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் -  லாபத்துக்கு லாபம்... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!

``ஐ.டி துறையில் வேலை பார்த்துக் கிட்டிருந்தேன். ஏ.சி சூழல், நேரங்கெட்ட நேரத்தில்  சாப்பாடு, ஸ்ட்ரெஸ்னு எல்லாம் சேர்ந்து எனக்குப் பருமன் பிரச்னையைக் கொடுத்தது. வெயிட்டைக் குறைக்க என்னவெல்லாமோ செய்துபார்த்தும் பலனில்லை. கடைசியா, `சிறுதானிய உணவுப்பழக்கத்துக்கு மாறிப் பார்ப்போம்’னு அதையும் முயற்சி பண்ணினேன். சிறுதானியங்களைச் சாப்பிட ஆரம்பிச்சதுமே எடையில் மாற்றம் தெரிஞ்சது. அந்த உற்சாகத்துல சிறுதானியங்களைப் பத்தின ஆராய்ச்சிகள்ல இறங்கினேன்.

சிறுதானிய உணவுகள் பத்தின விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளுக்குப் போகும்போது ஒரே மாதிரியான சிந்தனை உள்ள நண்பர்களின் அறிமுகம் கிடைச்சது. அப்ப வெறும் உணவுல மட்டும் மாற்றம் இருந்தா போதாது... ஒட்டுமொத்த வாழ்க்கையிலயும் அது பின்பற்றப்படணும்னு புரிஞ்சது. உணவுக்கு அடுத்ததா உடை விஷயத்துலயும் இயற்கை சார்பு வேணும்னு தெரிஞ்சது. நம்முடைய அத்தியாவசிய, அடிப்படைத் தேவையான உடைகள்ல சாயம் என்ற பெயர்ல அதிகபட்ச ரசாயனக் கலப்புகள் சேர்க்கப்படுகின்றன. சாயத் தயாரிப்புத் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் கடுமையா பாதிக்கப்படுது.  இதுக்கு மாற்று இருக்குமானு தேடினேன்.

கெமிக்கல் டை தயாரிக்கிறதுக்கு மட்டுமே பயிற்சி வகுப்புகள் இருந்தன. சாயம் தயாரிக்கிற அடிப்படைப் பயிற்சியைத் தெரிஞ்சுக்க, அந்த வகுப்புகளுக்குப் போனேன். அங்கே நான் கத்துக்கிட்ட தொழில்நுட்பங்களை வெச்சு இயற்கையான முறையில சாயம் தயாரிக்க முயற்சி பண்ணினேன். மஞ்சள், நீலம், சிவப்புனு பிரைமரி கலர்களை பீட்ரூட், கேரட், அவுரி மாதிரியான இயற்கையான பொருள்கள்லேருந்து எடுக்கலாம். பனை வெல்லத்தை வெச்சு கறுப்பு கலர் எடுக்கலாம். இந்த அடிப்படை கலர்களை வெச்சு, செகண்டரி கலர்ஸ்னு சொல்லக்கூடிய மற்ற கலர்களைக் கொண்டுவரலாம்.

ஆனா, கெமிக்கல் சாயத் தயாரிப்பு டெக்னிக்குகளை வெச்சு, இயற்கையான சாயம் தயாரிக்கிற முயற்சிகள் எடுத்த உடனேயே கைகொடுக்கலை. துணிகள்ல சாயத்தை ஏற்றும்போது தாமரை இலைத் தண்ணீர் மாதிரி ஒட்டாம போனது. எதிர்பார்த்த கலர் காம்பினேஷன் வரலை. ஆனாலும், நான் சோர்ந்து போயிடலை. செயற்கையான பொருள்கள் எதையும் சேர்க்கக்கூடாதுங்கிற உறுதியோடு, மறுபடி மறுபடி வேற வேற டெக்னிக்குகளைப் பயன்படுத்திச் செய்து பார்த்தேன். பல தோல்விகளுக்குப் பிறகு தான் எதிர்பார்த்த ரிசல்ட் வந்தது’’ என்கிற ராணி, இயற்கைச் சாயங்களை வைத்து பிளாக் பிரின்ட்டிங், ரோல் பிரின்ட்டிங், ஸ்டென்சில் ஆர்ட், பிரஷ் ஆர்ட், கலம்காரி, டை அண்ட் டை என ஏகப்பட்ட பிரின்ட்டிங் முறைகளைச் செய்கிறார்.

``புடவை, துப்பட்டா, டேபிள் கிளாத், திரைச்சீலை, பவுச், கைப்பை, படுக்கை விரிப்பு, தலையணை உறை... இப்படி எதுல வேணாலும் இந்த பிரின்ட்டிங் முறைகளைச் செய்யலாம். துணிகளால்கூட அலெர்ஜி வரும்னு தெரியாதவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்க இந்த இயற்கைச் சாயம் ஏற்றின துணிகளைப் பயன்படுத்தத் தொடங்கும்போது அலெர்ஜி காணாமப் போறதை உணர்வாங்க.

காட்டன் மற்றும் சில்க் காட்டன் துணிகளில் இதைச் செய்யலாம். வீட்டுக்குள்ளே இருந்தபடியே இதை ஒரு பிசினஸாகவும் தொடங்கலாம். வெறுமனே துப்பட்டாக்களுக்கு மட்டுமே இப்படி நேச்சுரல் டை ஏத்தி, பிரின்ட் செய்து விற்கத் தொடங்கினாலே லாபம் பார்க்கலாம். துப்பட்டாக்கள்ல செய்யத் தொடங்கறது சுலபமாகவும் இருக்கும். அதுக்குப் பிறகு புடவைகள், பெரிய துணிகள்னு அடுத்தகட்டத்துக்குப் போகலாம். ஐயாயிரம் ரூபாய் முதலீடு போதுமானது. துப்பட்டாவுக்கான துணி, மூலப்பொருள்கள் சேர்த்து 200 ரூபாய் செலவாகும். சாயமேற்றி, பிரின்ட் பண்ணின பிறகு அதையே 350 முதல் 400 ரூபாய் வரைக்கும் விற்கலாம். ஆன்லைன் மார்க்கெட்டிங் பக்கமும் கவனத்தைத் திருப்பற வங்களுக்கு  லாபம் நிச்சயம்!’’

ஆரோக்கியமான விஷயம்தான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz