Published:Updated:

இனி,பழசு எல்லாம் புதுசு!

இனி,பழசு எல்லாம் புதுசு!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி,பழசு எல்லாம் புதுசு!

டிரெஸ் மேஜிக்யாழ் ஸ்ரீதேவி

``பழைய ஜீன்ஸ் ஒன்று பயன்படுத்தாமல் வார்ட்ரோபில் இருக்கிறதா? அதை பேக்பேக் (Backpack) ஆக்கிவிடலாம். அந்த லாங் ஸ்லீவ் ஷர்ட் வேண்டாமா? அதை டங்கரீஸ் (Dungarees) ஆக மாற்றிவிடலாம். பழைய துப்பட்டாக்களை போன்ச்சோ (Poncho) டாப் ஆக மாற்றிக் காட்டட்டுமா? புடவையில் பலாஸோ பேன்ட் செய்வோமா?”

- மூச்சுவிடாமல் பேசுகிறார், மும்பையைச் சேர்ந்த ஸ்பிரீத் கவுர்.   

இனி,பழசு எல்லாம் புதுசு!

நம் அலமாரிகளில் சைஸ் சரியில்லை, நிறம் பிடிக்கவில்லை, பழையதாகிவிட்டது என்பது போன்ற காரணங்களால் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் உடைகள் நிறையவே இருக்கும். அவற்றைக் கொஞ்சம் வெட்டி, ஒட்டி, தைத்து மற்றொரு விதமான ட்ரெண்டி   உடையாக மாற்றி அணிந்துகொள்ள வழிகாட்டுகிறது ‘ஸ்லிக் அண்ட் நட்டி’ (youtube: Slick and Natty). இந்த யூடியூப் வீடியோக்கள் மூலம் இளம்பெண்கள் மத்தியில் ஸ்பிரீத் வெகு பிரபலம். ஆடை உருவாக்கத்தில் பசையைச் சிறப்பாகப் பயன்படுத்தும் முறைகள், கைத்தையலிலேயே எளிமையாக இவர் கற்றுத்தரும் டிரெஸ் மேக்கிங் ஆகியவை புதுமையாக இருப்பதுதான் இவர் வெற்றியின் ரகசியம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இனி,பழசு எல்லாம் புதுசு!

``எம்.பி.ஏ படிப்பை முடிச்சதும் ஒரு ஃபார்மசூட்டிக்கல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஒரே மாதிரியான பணிச்சூழல், கார்ப்பரேட் லைஃப் ஸ்டைல் எல்லாம் எனக்குச் சோர்வைத்தான் தந்தன. மூணு வருஷமா பார்த்துட்டு வந்த வேலையை ராஜினாமா செய்தப்போ, ரொம்பச் சுதந்திரமா உணர்ந்தேன். அப்புறம் ரொம்ப ஹாப்பி’’ - இளமைக்கே உரிய துள்ளல் ஸ்பிரீத்தின் வார்த்தைகளில். 

இனி,பழசு எல்லாம் புதுசு!

``அடுத்து என்ன செய்வது என்கிற பெரிய கேள்வி எழுந்தது. இதுவரை நான் படித்த படிப்பு, பார்த்த வேலை தொடர்பா எதையும் யோசிக்காம, எனக்குப் பிடிச்சதை செய்யலாம்னு முடிவு பண்ணி, கிராஃப்டைத் தேர்ந்தெடுத்தேன். புதுசா ஒரு விஷயம் செய்தா, நிச்சயம் அது பெரிசா ரீச் ஆகும்னு முடிவெடுத்தேன். அப்படித்தான், பழைய துணிகளைப் புதிய உடைகளாக்கும் ‘ஸ்லிக் அண்ட் நட்டி’ யூடியூப் வீடியோ ஐடியாவைப் பிடிச்சேன்.   

இனி,பழசு எல்லாம் புதுசு!

இன்னிக்கு எல்லோரும் உடைகளை வாங்கிக் குவிக்கிறோம். ஆனா, அதையே திரும்பத்திரும்ப உடுத்தும்போது போரிங்கா இருக்கு. அதையெல்லாம் இப்படி ட்ரெண்டியான டிரெஸ்ஸா மாத்துறப்ப கிடைக்கிற சந்தோஷம் சூப்பரா இருக்கும். அதனால்தான் ‘ஸ்லிக் அண்ட் நட்டி’ ஆரம்பிச்ச ஒரே வருஷத்துல அதோட சப்ஸ்க்ரைப்பர் எண்ணிக்கை ரெண்டு லட்சத்து 82 ஆயிரத்தைத் தாண்டிருச்சு.  சூப்பர்ல்ல!’’ என்று சிரிக்கும் ஸ்பிரீத், தனது வெற்றி மந்திரத்தையும் பகிர்கிறார்.  

இனி,பழசு எல்லாம் புதுசு!

``இணையத்தில் நிலைத்து நிற்க மூணு விஷயங்கள்ல நான் கவனம் செலுத்துறேன். ஒன்று, வீடியோ கன்டன்ட்... இது எளிமையா இருக்கணும்; போட்டி குறைவான கான்செப்ட்ல இருக்கணும். ரெண்டாவது, பார்வையாளர்கள் பாயின்ட் ஆஃப் வியூவில் இருந்து வீடியோவை யோசிக்கணும். அப்போதான் சந்தேகத்துக்கு இடமில்லாத ஒரு செய்முறையை உருவாக்க முடியும். மூன்றாவது, பார்வையாளரின் கமென்ட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. அப்போதான் நம்ம நிறைகுறைகளை நாம தெரிஞ்சுக்க முடியும்; குறைகளை திருத்திக்க முடியும்.    

இனி,பழசு எல்லாம் புதுசு!

- மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யும் மகிழ்வு, ஸ்பிரீத்தின் வார்த்தைகளில் வழிந்தோடுகிறது.