Published:Updated:

சாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க!

சாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
சாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க!

கலர்ஃபுல்ஆர்.வைதேகி

`படபட’ பேச்சும் பரபரப்பு ஸ்டைலுமாக முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அம்ரிதா ராமை பலரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. இன்று, அவரது அடையாளம் வேறு. தமிழ் சினிமாவின் முன்னணி காஸ்ட்யூம் டிசைனர்களில் அம்ரிதாவும் ஒருவர். வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்  ‘வடசென்னை’, விக்ரம் நடிப்பில் ‘ஸ்கெட்ச்’ என இரண்டு பெரிய படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்துகொண்டிருப்பவர், இன்னொருபக்கம் ஃபேஷன் ஷோ, போட்டோ ஷூட் என றெக்கைக்கட்டிப் பறக்காத குறையாக பிஸி.   

சாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க!

‘`எப்பவுமே ரொம்பப் பேசுவேன். அந்தப் பேச்சுக்காக பண்ண விஷயம்தான் சேனல் காம்பியரிங். அப்பவே ஃபேஷன்லயும் ஆர்வம் இருந்துச்சு. பொட்டீக் ஆரம்பிக்க நினைச்சேன். அதுக்காக முறைப்படி படிச்சேன். ஃப்ரெண்டும் நானும் சேர்ந்து கொஞ்ச நாள் ஃபேஷன் சம்பந்தப்பட்ட பிசினஸ் பண்ணிட்டிருந்தோம். தவிர்க்கமுடியாத காரணத்தால என் ஃப்ரெண்டால பிசினஸைத் தொடர முடியலை. அந்த நேரம்தான் டைரக்டர் மிஷ்கின், தன்னோட படத்துக்குப் புது காஸ்ட்யூம் டிசைனர் தேடிட்டிருந்ததைக் கேள்விப்பட்டேன். அவரை மீட் பண்ணி என்னோட வேலைகளைக் காட்டினேன். அவருக்குப் பிடிச்சுப் போனதால ‘முகமூடி’ படம் மூலமா எனக்கு சினிமா அறிமுகம் கிடைச்சது. அதுக்குப்பிறகு நிறைய கமர்ஷியல்ஸுக்கும் காபி டேபிள் புத்தகங்களுக்கும் டிசைன் பண்ணிட்டிருந்தேன். கிரிக்கெட் பிளேயர் அஷ்வின், நடிகர் துல்கர் சல்மான்னு நிறைய பிரபலங்களுக்கு எல்லா கமர்ஷியலுக்கும் நான்தான் டிசைனர்’’ - நான்ஸ்டாப் பேச்சு மட்டும் மாறவே இல்லை அம்ரிதாவிடம்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க!

``ஒரு டிசைனரா எக்கச்சக்க பிஸியா இருந்தேன். ஆனாலும், இடையில கொஞ்ச காலம் சினிமா டச் விட்டுப்போயிருந்தது. அப்பதான் மியூசிக் டைரக்டர் தேவிஸ்ரீ பிரசாத்கூட யு.எஸ் டூர் ஒண்ணு பண்ணினேன். அதைத் தொடர்ந்து மறுபடியும் சினிமாவுல பரபரப்பாகிட்டேன். விக்ரம் பிரபுவோட ‘வீர சிவாஜி’, ‘நெருப்புடா’ பண்ணினேன். இப்ப வெற்றிமாறன் சாரோட ‘வடசென்னை’ பண்ணிட்டிருக்கேன்.   

சாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க!

வெற்றிமாறன் சார்கூட வொர்க் பண்றது ரொம்பச் சிலிர்ப்பான, பெருமையான அனுபவம். மொத்தப் படத்துக்கும் நான்தான் டிசைன் பண்ணியிருக்கேன்.

இந்த இன்ப அதிர்ச்சியிலேருந்து வெளியில வர்றதுக்குள்ள `சீயான்' விக்ரம்கூட வொர்க் பண்ற அடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ் காத்திட்டிருந்தது. ‘ஸ்கெட்ச்’ படத்துல விக்ரம், தமன்னாவுக்கு நான்தான் டிசைனர்.   

சாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க!

ஒருபக்கம் ‘வடசென்னை’, இன்னொரு பக்கம் ‘ஸ்கெட்ச்’னு இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்துல என்னால வொர்க் பண்ண முடியுதுன்னா, அதுக்குக் காரணம் என்னோட முறையான பயிற்சி. ஹாலிவுட்ல ஒவ்வொரு படத்துக்கும் பயங்கரமா ஹார்டுவொர்க் பண்ணுவாங்க; நிறைய ரிசர்ச் பண்ணுவாங்க. அந்த ஸ்டைலையே நான் எனதாக்கிக்கிட்டேன். வெற்றிமாறன்சார்கூடவே டிராவல் பண்ணி நிறைய ரிசர்ச் பண்ணினேன். ‘வடசென்னை’ ரிலீஸுக்குப் பிறகு நிச்சயம் என் வேலை பெரிசா பேசப்படும்கிற நம்பிக்கை இருக்கு.   

சாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க!

பாஸ்தா சமைக்கிறதுக்கும்  வத்தக் குழம்பு வைக்கிறதுக்கும் சம்பந்தமே கிடையாது.  ஆனா, எப்படிச் சமைக்கணும்கிற மெத்தட் தெரிஞ்சு, கொஞ்சம் தொழில்நுட்ப அறிவும் இருந்தா ரெண்டையுமே சூப்பரா பண்ணிட முடியு மில்லையா... அப்படித்தான்!’’ - அழகான உதாரணத்துடன் அசத்துகிறார்.

ஏற்கெனவே ஸ்டைல் ஐகான்களாக அறியப்பட்ட விக்ரமையும் தமன்னாவையும் எந்த வகையில் புதுசாகக் காட்டப் போகிறார் அம்ரிதா?   

சாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க!

``நிச்சயமா புது விக்ரமை எதிர்பார்க்கலாம். வின்ட்டேஜ் டைப்ல புதுசா ஒரு பேட்டர்னை ட்ரை பண்ணியிருக்கேன். இந்தப் படத்துல விக்ரமுக்காக ரெடிமேடா எதையும் வாங்கிப் பயன்படுத்தலை. அவருடைய உடை முதல் அக்சஸரீஸ் வரை ஒவ்வொன்றையும் கஸ்டமைஸ் பண்ணினேன்.

தமன்னா இன்னொரு ஸ்டைல் ஐகான். இந்தப் படத்துல அவங்களைப் புடவையில மட்டும்தான் பார்க்கப் போறீங்க.  அந்தப் புடவைகளையும் கஸ்டமைஸ் பண்ணியிருக்கோம். `புடவைதானே... அதுல என்ன பண்ணியிருக்கப் போறீங்க’னு கேட்கலாம்.  இந்தப் படம் வரட்டும்... பெண்கள் மத்தியில சாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க...’’ - என இப்போதே கொளுத்திப் போடுகிறார்.   

சாரி ஃபீவர் பத்திக்கும் பாருங்க!

``காஸ்ட்யூம் டிசைன ரோட வேலைங்கிறது ஈஸியில்லை. ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி முதல் ஆளா நாங்கதான் செட்டுல இருக்கணும். பேக்கப் ஆன பிறகு கடைசியா கிளம்பி வர்றவங்களும் நாங் களாத்தான் இருப்போம். அந்த ஸ்ட்ரெஸ்ஸைத் தனிமனுஷியா கையாள முடியாது. கண்டநேரத்துல போன் வரும். திடீர்னு அவசரமா கிளம்பிப்போய் ஒரு காஸ்ட்யூமை ரெடி பண்ண வேண்டியிருக்கலாம். எனக்கு அதெல்லாம் `ஓகே’வா இருக்கலாம். ஆனா, வீட்டுல உள்ளவங்க ஒத்துழைக்கலைன்னா எதையும் சாதிக்க முடியாது. எனக்கு என் கணவரும் குடும்பமும் பெரிய சப்போர்ட்!’’ என்னும் அம்ரிதா, நடிகரும் நடனக் கலைஞருமான ராம்ஜியின் மனைவி என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்புறம்..?


``ஷாரூக்கானுக்கு டிரெஸ் டிசைன் பண்ணணும். கமர்ஷியல் சினிமா, பேரலல் சினிமான்னு ரெண்டையும் பண்ணணும். இந்த வருஷக் கடைசிக்குள்ள என்னுடைய ஃபேஷன் ஷோவை நடத்தணும்.’’

-  அம்ரிதாவின் கனவுகளிலும் நினைவு களிலும் கலர்ஃபுல் காஸ்ட்யூம்கள்.