Published:Updated:

“பிரெட் ஜுவல்ஸ் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்!”

“பிரெட் ஜுவல்ஸ் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பிரெட் ஜுவல்ஸ் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்!”

புதுமை... இனிமை..கு.ஆனந்தராஜ் - படம்: ரா.வருண் பிரசாத்

“எதிலுமே புதுமை இருந்தால்தான், அந்த விஷயத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். அப்படித்தான் நானும் இந்த பிரெட் ஜுவல்ஸ் பிசினஸைத் தேர்ந்தெடுத்தேன்’’ என உற்சாகமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த அன்சலைன் ஸ்ருதி. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிரெட்டை மூலப்பொருளாகக்கொண்டு விதவிதமான நகைகள் செய்து விற்பனையில் அசத்தி வருபவர்.  

“பிரெட் ஜுவல்ஸ் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்!”

“நான் குட்டிப் பொண்ணா இருந்தப்போ, அம்மா சப்பாத்தி மாவைப் பிசையும்போது அதுல கொஞ்சம் மாவை எடுத்து சின்னச்சின்ன பொம்மைகள் செஞ்சு விளையாடுவேன். நான் வளர்ந்ததுக்கு அப்புறமும் அதை விடல. ப்ளஸ் டூ லீவுல ஆர்ட் கிளாஸ் போனேன். அங்கே சிறப்புப் பயிற்சியாளர் ஒருத்தர், அன்றாடம் நாம சாப்பிடும் பிரெட்ல பூக்கள் செய்யக் கத்துக்கொடுத்தார். ரொம்ப வித்தியாசமா இருந்ததால, தொடர்ந்து நகைகள், கீ செயின், அலங்காரப் பொருள்கள்னு நானே பிரெட்ல நிறையப் புதுப்புது உருவங்களைச் செய்து பழகினேன்’’ என்று சொல்லும் ஸ்ருதி, பி.பி.ஏ, எம்.பி.ஏ மற்றும் மாஸ்டர் ஆஃப் பப்ளிக் ரிலேஷன்ஸ் பட்டதாரி. சில வருடங்களாக சோஷியல் மீடியா நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

``ஒரு வருஷத்துக்கு முன்னாடி எனக்குக் கல்யாணம் ஆச்சு. ஃப்ரீ டைம்ல நான் பிரெட் உருவங்களைச் செய்றதைப் பார்த்த என் கணவர் செந்தில்ராம், மாமியார் சாந்தா ரெண்டு பேரும் வியந்து பாராட்டினாங்க. ‘இந்தத் திறமையை வீணாக்காம ஏதாச்சும் பண்ணும்மா’ன்னு உற்சாகப்படுத்த, பல டிசைன்களில் பிரெட் ஜுவல்ஸ் செய்து சேல்ஸ் பண்ணிப் பார்த்தேன். வரவேற்பும் வருமானமும் ஜோரா இருந்ததால், ‘க்ரம்பிள்ஸ்’ என்ற பெயர்ல சின்ஸியரா பிசினஸை ஆரம்பிச்சுட்டேன். செயின், முத்துமாலை, நெக்லஸ்னு நான் என் க்ரியேட்டிவிட்டியைக் கொட்டினேன். நார்மலான பிரெட்டின் ஓரங்களை நீக்கி, நன்கு உதிர்த்து, அதோட ஃபெவிகால், பிரிசர்வேட்டிவ் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையணும். அதை விரும்பும் வடிவங்களில் நகைகளா செய்து, காயவைத்து பெயின்ட்டிங் பண்ணணும். இறுதியா வார்னிஷ் பூசிட்டா... நகைகள் கெடாமல் இருப்பதோடு, எறும்புத் தொந்தரவும் இருக்காது. பிரிசர்வேட்டிவ் சேர்க்கிறதுனால பல வருஷத்துக்குத் தாங்கும். தண்ணீர்பட்டாலும் எதுவும் ஆகாது. டெரக்கோட்டா, சில்க் த்ரெட், க்ளே, க்வில்லிங் ஜுவல் வகைகளையெல்லாம்விட பிரெட் ஜுவல்ஸ் இன்னும் தனித்துவமா இருக்கும். 50 ரூபாய்ல தொடங்கி 1,500 ரூபாய் வரைக்கும் பிரெட்ல நகைகள் கிடைக்கிறதால நிறைய பேர் எங்கிட்ட ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஆன்லைன் பிசினஸ் மூலமா வெளி நகரங்கள் முதல் வெளி மாநிலங்கள் வரை ஆர்டர்கள் விரிவடைஞ்சது. பிரெட் ஜுவல்ஸ், உங்க எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் பாருங்க!”

- கண்சிமிட்டுகிறார் அன்சலைன் ஸ்ருதி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz