Published:Updated:

அள்ள அள்ளக் குறையாதே... ஆடை ஆபரண ஆசை!

அள்ள அள்ளக் குறையாதே... ஆடை ஆபரண ஆசை!
பிரீமியம் ஸ்டோரி
News
அள்ள அள்ளக் குறையாதே... ஆடை ஆபரண ஆசை!

செலிபிரிட்டி ஸ்டைல்யாழ் ஸ்ரீதேவி - ஆர். ஜெயலெட்சுமி

டல், யானை, மழை... இவற்றை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்பார்கள். பெண்களுக்கு ஆடை ஆபரணமும் அப்படித்தான். எவ்வளவு வாங்கினாலும் மனம் முமுமையாக நிறைவடைந்துவிடாது. `அடுத்தது என்ன?’ என்கிற தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கும். இந்த வகையில் பிரபலங்கள் சிலர், தங்கள் ஆடை ஆபரண ரசனையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள்...    

அள்ள அள்ளக் குறையாதே... ஆடை ஆபரண ஆசை!

பெருசு பெருசாதான் ஜுவல்ஸ் போடுவேன்!

பாத்திமா பாபு


``ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கிறப்பவே புடவை கட்ட ஆரம்பிச்சுட்டேன். இப்போ எங்கிட்ட 300 புடவைகள் இருக்கும். பொதுவா ஷாப்பிங்ல `இதை செலக்ட் பண்ணலாமா, அதை செலக்ட் பண்ணலாமா’னு யோசிக்காம, பிடிச்சிருந்தா ரெண்டையும் வாங்கிடுவேன். குறிப்பா, பாரம்பர்ய டிசைன் புடவைகளில் விருப்பம் அதிகம்.

கோ-ஆப்டெக்ஸ்ல வாங்கின ஒயிட்ல பிங்க் பூ போட்ட அஸ்ஸாம் காட்டன் புடவையும், க்ரீம் கலர்ல கிரீன் பூ போட்ட கோட்டா  புடவையும் எப்பவும் என் ஃபேவரைட். முதன்முதலா நியூஸ் வாசிக்கிறப்ப கட்டியிருந்த பர்ப்பிள் கலர் சைனா சில்க் புடவை, ஸ்பெஷலுக்கும் மேல.

எந்த ஊருக்குப் போனாலும் கண்ணாடி வளையல்களைத் தேடித்தேடி வாங்குவேன். சின்னதா கம்மல், செயின்னு போடுறது எனக்குப் பிடிக்காது. பெருசு பெருசாதான் ஜுவல்ஸ் போடுவேன். ஜிமிக்கி ரொம்பப் பிடிக்கும். அதுல அசத்தல் கலெக்‌ஷனே வெச்சிருக்கேன்.  எவ்வளவோ பர்ஸ், ஹேண்ட் பேக் இருந்தாலும், பிளாக் அண்ட் வொயிட் கிளட்ச் பர்ஸ்தான் என் லவ்லி   சாய்ஸ்.
 
எவ்ளோ ஆர்வமா பேசுறேன் இல்ல... சூப்பர் டாப்பிக்!”     

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அள்ள அள்ளக் குறையாதே... ஆடை ஆபரண ஆசை!

அலங்காரம் என்பது சுவாசம்!

தமிழச்சி தங்கபாண்டியன்

``சின்ன வயசுல இருந்து பொட்டு, பூ, புடவை, வளையல்னு வளர்ந்த கிராமத்துப் பொண்ணு நான்... சிட்டிக்கு வந்ததுக்குப் பிறகும் அப்படியே இருக்கேன். புடவை, நகைகளில் இந்தியாவுல ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பாரம்பர்ய டிசைன் இருக்கும். அதைத் தேடித்தேடி வாங்கறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பொதுக்கூட்டம்னா கைத்தறிப் புடவை, இலக்கியக் கூட்டங்களுக்கு பிரைட் கலர் புடவைன்னு ஒவ்வோர் இடத்துக்கும் தகுந்தமாதிரி உடுத்திட்டுப் போவேன். கடை கடையா ஏறி இறங்கி, புடவை எடுக்கிறதில்ல. சாரி எக்ஸிபிஷன்ல மொத்தமா அள்ளிட்டு வந்துடுவேன். எந்த மாநிலம் அல்லது எந்த நாட்டுக்குப் போனாலும் ட்ரைபல் ஜுவல்ஸ்தான் வாங்குவேன். மயில்தோகை கம்மல், பாசிமணிகள் கோத்த நெக்லஸ்னு வித்தியாசமான அணிகலன்கள் பிடிக்கும்.

மாலைநேர நிகழ்ச்சிகளுக்குக் கறுப்புதான் என் சாய்ஸ். புடவை பற்றின இன்டர்வியூனு நீங்க சொன்னதும், எண்ணிட்டே வந்துட்டேன். நம்புங்க... எங்கிட்ட 300 புடவைகள்தான் இருக்கு. அப்பா வாங்கிக்கொடுத்த சுங்கடிப் புடவை, என் திருமணக் கூறைப்புடவை, என் முதல் குழந்தைக்குத் தொட்டில் கட்டின எங்கப்பத்தாவோட புடவை... இந்த மூணும் எனக்குப் பொக்கிஷம். என்னோட 25-வது வருஷ கல்யாண நாளுக்கு என் பொண்ணு வாங்கிக்கொடுத்த கறுப்புப் புடவை, இப்போ என் மருமகன் சித்தார்த் என் பிறந்த நாளுக்கு வாங்கிக்கொடுத்த புடவைன்னு, பரிசா வந்து சேரும் புடவைகள் மேல் கூடுதல் ப்ரியம்.

அலங்காரம் சுவாசம் மாதிரி எனக்கு... விட்டுப் பிரிய முடியாது!”      

அள்ள அள்ளக் குறையாதே... ஆடை ஆபரண ஆசை!

காஸ்ட்யூம்ஸ்ல எக்ஸ்பிரிமென்ட் பண்ணிட்டே இருப்பேன்!

சுதா சந்திரன்

``புடவைகள், ஜுவல்ஸ் எல்லாம் எங்கிட்ட எத்தனை இருக்குனு எண்ணுறது கஷ்டம். அந்தளவுக்கு வாங்கிக் குவிச்சு வெச்சிருக்கேன். நான் சம்பாதிக்கிறதுல நான்கில் ஒரு பங்கு ஆடை ஆபரணங்களுக்கே போயிடும். நாம எந்தத் துறையில் சம்பாதிச்சமோ அந்தத் துறைக்காகச் செலவழிக்கிறதை ஒரு தர்மமா பார்க்கிறேன். நான் ரியல் லைஃப்ல எளிமையான பெண். ஆனா, சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் என் உடைகள் பிரத்யேகமா இருக்கணும்னு நினைப்பேன். மும்பையில  வசிக்கிற மீனா என்ற பெண்தான், 15 வருஷங்களா எனக்கு ஜுவல்லரி டிசைனர். ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை ரெண்டு பைகள் நிறைய ஜுவல்ஸ் செய்துவந்து கொடுத்துட்டுப் போவாங்க. எல்லாம் எனக்கே எனக்குனு செஞ்ச யுனீக் டிசைன்ஸ்.
என்னோட புடவைகள் எல்லாமே நானே டிசைன் பண்றதுதான். சமீபத்தில் ‘நாகினி 2’ சீரியல்ல, ஒரு ஷார்ட் பிளவுஸ், ஒரு லாங் பிளவுஸ்னு டபுள் பிளவுஸ் ஸ்டைலை அறிமுகப்படுத்தினேன். ஆடியன்ஸை ஈர்க்க நாம ஏதாவது க்ரியேட்டிவா பண்ணிட்டே இருக்கணும். ‘தெய்வம் தந்த வீடு’ சீரியல்ல ஆரம்பத்துல என்னோட காஸ்ட்யூம்ஸ், மேக்கப் பார்த்துட்டு எல்லோரும் சிரிச்சாங்க. ஆனா, அதுதான் ஹிட் ஆச்சு.

சுதா சந்திரன் லுக் எப்பவும் ஸ்பெஷல்தானே!''  

அள்ள அள்ளக் குறையாதே... ஆடை ஆபரண ஆசை!

நான் நீலப் பிசாசு!

‘தெய்வமகள்’ ரேகா

``எந்த ஊருக்குப் போனாலும் டிரெஸ், ஜுவல்ஸ்னு ஷாப்பிங்ல அள்ளிட்டு வந்துடுவேன். அப்புறமா மிக்ஸ் அண்ட் மேட்ச் பண்ணிப் போட்டுக்குவேன். பட்டு சாரிக்கு மாடர்ன் பிளவுஸ் போட்டு, ட்ரெண்டி லுக் க்ரியேட் பண்ணலாம்; ஃபேஷன் புடவைக்கு காப்பர், சில்வர்னு ஜுவல்ஸ் போட்டு ஆன்டிக் லுக் க்ரியேட் பண்ணலாம். எல்லாம் நம்ம டேஸ்ட்லதான் இருக்கு. என்னோட வார்ட்ரோப்ல ஆர்ட்டிஃபிஷியல் ஜுவல்ஸ் நிறைய இருக்கும். கிட்டத்தட்ட 500-க்கும் மேல புடவைகள் இருக்கும்; என் கணவர் என்னை ‘நீலப் பிசாசு’ன்னு சொல்வார். புளூல எத்தனை ஷேட்ஸ் இருக்கோ அத்தனையிலும் என்கிட்ட டிரெஸ் இருக்கு. ஷாப்பிங் கிளம்பும்போதெல்லாம், ‘புளூ கலர்ல எடுக்கக் கூடாது’னு மனசுல சொல்லிட்டே போய், புளூ கலர்லயே எடுத்துட்டு வந்துடுவேன்.

ஜீன்ஸ் - குர்தா, லெகிங் - குர்தா வசதியான உடை.  புடவை எடுத்ததும், அதுலயே அட்டாச்டா இருக்கிற பிளவுஸை தைச்சு வாங்க பெரும்பாலும் நேரம் இருக்காது. பிளாக், கோல்டு, புளூ கலர்ஸ்ல ஏற்கெனவே தைச்சு வெச்சிருக்கும் புரொக்கெட் பிளவுஸ்களை மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்து போட்டுப்பேன்.

வீட்டுலயே எனக்குப் பிடிச்ச இடம், வார்ட்ரோப்தான்!”