Published:Updated:

ஷேரிங் நல்லது! - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி!

ஷேரிங் நல்லது! - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேரிங் நல்லது! - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி!

கருப்பு

து இது எதுவாக இருந்தாலும் நட்பில் ஷேரிங் நல்லது. சிறுவயதில் ‘காக்கா கடி’ கடித்து கடலை மிட்டாயைப் பகிர்ந்துகொண்ட நட்பின் பரிமாணம், வளர்ந்தபின் மாறியிருக்கலாம். அத்தகைய மலரும் நினைவுகளை மீட்டுத்தரும் விதத்தில் வந்துள்ள சில தொழில்நுட்பங்களையும் நண்பர்களுக்குள் பகிரமுடியும். அவை என்னவென்று பார்ப்போமா? 

ஷேரிங் நல்லது! - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி!
ஷேரிங் நல்லது! - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரிவர்ஸ் சார்ஜிங்!

நண்பரின் மொபைல் போனில் ‘Battery Low’ எனக்காட்டினால், சார்ஜர் அல்லது பவர் பேங்க் தேடிய காலம் மாறிக்கொண்டு வருகிறது. சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள சில மொபைல் போன்களில் ரிவர்ஸ் சார்ஜிங் என்றொரு வசதி இருக்கிறது. மொபைல் போனில் டேட்டா கேபிளை கனெக்ட் செய்து, ரிவர்ஸ் சார்ஜிங் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால் போதும். ஒரு மொபைலின் பேட்டரியில் இருந்து மற்றொரு டிவைஸுக்கு எளிதாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். அவசர காலத்தில் இந்த வசதி பெரிதும் கை கொடுக்கும்.

ஷேரிங் நல்லது! - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி!
ஷேரிங் நல்லது! - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி!

இன்டர்நெட்டையும்  இலவசமாகப் பகிர்ந்துகொள்ளலாம்!

மொ
பைல் நெட்வொர்க் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குள் டேட்டா பேக், மொபைல் டாக் டைம் போன்றவற்றை டிரான்ஸ்ஃபர் செய்துகொள்ள முடியும். திடீரென நெட்பேக் முடிந்துவிட்டதாக உங்கள் தோழி கவலைப்பட்டால்,  உடனடியாக உங்கள் மொபைல் டேட்டாவை ஷேர் செய்து உதவலாம்.  இப்போது குறைந்த கட்டணத்திலேயே அதிக டாக் டைம் மற்றும் அதிக இன்டர்நெட் வசதிகளைப் பெரும்பாலான நெட்வொர்க்குகள் வழங்குகின்றன. அவற்றை முழுக்க முழுக்க நாமே பயன்படுத்தித் தீர்க்க முடியாதென்பதால், பிறரோடு பகிர்ந்துகொண்டு இரட்டைப் பலன்களைப் பெறலாம். ஓகேதானே ஃப்ரெண்ச்!

ஷேரிங் நல்லது! - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி!
ஷேரிங் நல்லது! - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி!

ஒரே அக்கவுன்ட்... இரண்டு பலன்கள்!

ன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான அமேசான் ப்ரைமில் எண்ணற்ற திரைப்படங்களைக் கண்டு ரசிக்க முடியும். மேலும், அமேசான் தளத்தில் பொருள்களை ஆர்டர் செய்யும்போது ப்ரைம் அக்கவுன்ட் இருப்பவர்களுக்கு எண்ணற்ற சிறப்புச் சலுகைகள் தரப்படுகின்றன. ரூபாய் 499 செலுத்தி ப்ரைம் அக்கவுன்ட் தொடங்கினால், ஒரு வருடத்துக்கு அமேசான் நிறுவனத்தின் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும். ப்ரைம் அக்கவுன்ட் இருப்பவர்கள் தங்களுடைய நண்பர்களுக்கும் இதைப் பகிர முடியும். பிரீமியம் அக்கவுன்ட்டில் லாக்-இன் செய்து, அமேசான் தளத்தில் கணக்கு வைத்திருக்கும் மற்றொரு  நபரையும் தங்களது கணக்கில் சேர்த்துக்கொள்ள முடியும். மேலும், இரண்டு குழந்தைகளின் கணக்கையும் இதோடு இணைத்துக்கொள்ள முடியும். ப்ரைம் கணக்கைத் தொடங்கும் ஒருவர் பணம் செலுத்தினாலே  மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

ஷேரிங் நல்லது! - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி!

வெவ்வேறு இடங்களிலிருக்கும் நண்பர்களும் ஒன்றாகப் பயணிக்கலாம்!    

ஷேரிங் நல்லது! - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி!

யணம் என்றாலே ஆனந்தமான விஷயம்தான். அப்பயணத்தில் நண்பர்களும் சேர்ந்துகொண்டால், போக்குவரத்து நெரிசல்கூட ஒரு பொருட்டாகவே தெரியாது. ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்களுடன் வேலைக்குச் சென்றுவர, சில நேரங்களில் வாடகை கார்களைப் பயன்படுத்த வேண்டி வரலாம். வாடகை கால் டாக்ஸி சேவையில் ஷேரிங் முறையில் பயணிக்கும்போது, அறிமுகம் இல்லாத நபரும் உடன்வர வாய்ப்பிருக்கிறது. இதற்குப்பதிலாக நண்பர்களுடன் மட்டுமே பயணிக்க விரும்பினால், ரைட் ஷேரிங் செய்யலாம். ஓலா, உபெர் போன்ற வாடகை கால் டாக்ஸி சேவை நிறுவனங்களில் இந்த வசதியைப் பெறலாம். ரைட் ஷேரிங் ஆப்ஷனில் புக் செய்து, நண்பர்களுக்கு அதன் கோட் விவரங்களைக் கொடுத்தால் போதும், அவர்களும் பயணத்தில் இணைந்துகொள்ள முடியும். இதனால் கால் டாக்ஸியிலும் நண்பர்களுடன் சேர்ந்தே பயணிக்க முடியும்.