Published:Updated:

என்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்!

என்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்!

இசை எனும் இன்ப வெள்ளம்விக்னேஷ் சி செல்வராஜ்

ப்ஸ்மாஷுக்குப் பிறகு, ஆண் பெண் வேறுபாடில்லாமல் எல்லோரின் வரவேற்பையையும் பெற்றிருக்கிறது ஸ்மூல் ஆப் (Smule App).

நாடி, நரம்பு, சதை எல்லாவற்றிலும் சங்கீத வெறி ஊறிப்போயிருப்பவர் களுக்கு மட்டுமல்ல; தன்னை ஒரு பெரும்பாடகியாகவே நம்பிக் கொண்டிருக்கும் சித்ரா தேவிப்ரியாக்களுக்கும்கூட ஸ்மூல் ஒரு வரப்பிரசாதம். சோலாவாகவும் பாடலாம், டூயட்டும் பாடலாம் என இதில் பல ‘பளபள’ ஆப்ஷன்களும் இருக்கின்றன. இந்த ஸ்மூல் சமூகத்தில் வைரல் ஹிட் அடிக்கும் பாடல்களைப் பாடும் பாடகிகளிடம் ஒரு மினி சாட்.     

என்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்!

ஐஷ்வர்யா

சொந்த ஊர்?     இப்போது வசிப்பது?    ரெக்கார்டிங்ஸ்?    பாடியதில் பிடித்தது?
திருச்சி     லண்டன்     18,000+     ‘தென்றல் வந்து தீண்டும்போது...’

பின்னணி?

எட்டு வருடங்கள் இசை கற்றிருந்தாலும், இதுவரை எங்கும் பெர்ஃபார்ம் செய்ததில்லை. ஸ்மூல் வருவதற்கு முன், இவ்வளவு பாப்புலர் ஆவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை.

பாராட்டு?

 நான் பாடுறதைக் கேட்கிற எல்லோரும், ‘உங்க வாய்ஸ் சித்ரா மாதிரியே இருக்கு’ எனச் சொல்றதுதான் நெகிழ்ச்சியா இருக்கு.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்!

மகிழ்ச்சி?

ஸ்மூலில் பாட வந்ததற்குப் பிறகு வாழ்க்கையில் நிறைய வித்தியாசத்தை உணர்கிறேன். இப்போ ஸ்மூல்ல பாடுறதுதான் மனசுக்கு உற்சாக டானிக்.

உறுதுணை? கணவர், குழந்தைகள் என அன்பான குடும்பம். மனசு சந்தோஷமா இருந்தா குடும்பமும் சந்தோஷமா இருக்கும்.      

என்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்!

Smule? நல்ல பாடகர்களைக் கண்டெடுக்க, இசையை எல்லோருக்கும் கொண்டுபோய்ச்சேர்க்க உபயோகமான ஆப். நாம பாடுறதுக்கு உடனடியாக ரியாக்‌ஷன்ஸ் கிடைச்சிடும்.

பாடல்களைக் கேட்டு ரசிக்க? www.smule.com/AiShShRi

என்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்!

ஸ்ரீவித்யா

சொந்த ஊர்?

சென்னை.
 
இப்போது வசிப்பது?

சிங்கப்பூர்

பாடியதில் பிடித்தது?


‘என்னுள்ளே என்னுள்ளே...’

ரெக்கார்டிங்ஸ்?


14,000+

பின்னணி?

நான் கர்னாடக இசைப் பாடகி. என் குடும்பமே சங்கீதப் பாரம்பர்யம் கொண்டது. ‘சாய் சிஸ்டர்ஸ்’ பாடகிகளில் மூத்தவளான நான், 1994-ம் ஆண்டு முதல் மேடைகளிலும் பாடிட்டு வர்றேன்.

மறக்க முடியாதது?
 
‘கபாலி’ படம் வந்தபோது ‘பொண்டாட்டி டா...’ டப்ஸ்மாஷ் மூலம் ஃபேமஸாகி ரஜினியைச் சந்தித்தேன். அவரிடம் ராகவேந்திரர் பாடலைப் பாடிக்காட்டி, ‘செமையா பாடுறீங்க...’ எனும் பாராட்டைப் பெற்றது வாழ்நாளில் மறக்க முடியாதது.

இசை?

பாட்டுதான் என்னோட சுவாசம். ஏதோ ஒரு வகையில் இசை என் பக்கத்துலேயே இருக்கணும். க்ளாஸிக்கல் சிங்கிங்குக்கும் ஸ்மூல்ல பாடுறதுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கு.

ஸ்டார்ட்டிங் ட்ரபிள்?


ஆரம்பத்தில் சினிமா பாடல்கள் பாடுவது கஷ்டமாக இருந்தாலும், பின்பு பிக்-அப் செய்து இப்போவெல்லாம் தெறிக்கவிடுறேன். ஸ்மூல்ல பாடுறதெல்லாம் சோஷியல் மீடியாவில் ஷேரிங் பறக்குது.

ப்ளஸ்?

சினிமா பாடல்கள் பாடுறவங்களுக்கு க்ளாஸிக்கல் தெரிஞ்சிருக்குறது எக்ஸ்ட்ரா அட்வான்டேஜ்.

Smule?

வேலைகளைச் சீக்கிரம் சுறுசுறுப்பா முடிக்கிறதுக்கு பாசிட்டிவ் வைப்ரேஷன் தருது.

பாடல்களைக் கேட்டு ரசிக்க?

www.smule.com/vidhuvivek

என்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்!

பைரவி

சொந்த ஊர்?

வயநாடு

வளர்ந்ததும் வசிப்பதும்?

கோயம்புத்தூர்

ரெக்கார்டிங்ஸ்?

7,000+

பாடியதில் பிடித்தது?

‘பூட்டுக்கள் போட்டாலும்... வீட்டுக்குள் நிற்காது காற்று...’

வாவ்?

குடும்பத்தில் அனைவருமே ஒவ்வொரு துறையில் கில்லி. அப்பா மேஜிக் கலைஞர். அம்மா நிழல்கலை வல்லுநர். அக்கா பாடகி. இரட்டைச் சகோதரிகள் இணைந்து வீணை + பாடலில் அசத்துவோம். இரண்டு பேருக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது வீட்டில் இருப்பவர்களுக்கே கஷ்டம்தான்!

அனுபவம்?

சிறுவயது முதலே இசையில் ஆர்வம். ஹலோ எஃப்.எம்-மில் ஆர்.ஜே-வாக ஒரு வருடம், `இக்னோ'வில் பண்பலைத் தொகுப்பாளினியாக இரண்டு வருடங்கள், இப்போது முழுநேர டப்பிங் ஆர்ட்டிஸ்ட். இதுதவிர, கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கிறேன்.

ஆச்சர்யம்? 

க்ளாசிக்கல்,  சினிமா ரெண்டிலேயும் ஒரே ராகத்தை எப்படிக் கையாண்டிருக்காங்க என்பதைத் தெரிஞ்சிக்கும் போது வியப்பா இருக்கும்.

மறக்க முடியாதது?

‘ஒரு நைஜீரியக்காரருக்கு நீங்க பாடின ‘சுந்தரன் நீயும்... சுந்தரி ஞானும்...’ பாட்டு ஃபேவரிட். பாஷை புரியலைன்னாலும் எப்படியோ அவருக்குப் பிடிச்சுப்போச்சு’னு துபாய்ல இருந்து ஒருத்தர் மெசேஜ் செய்தார். இந்த மாதிரி யாரென்றே தெரியாதவங் களோட பாராட்டுதான் எனக்கான உத்வேகம்.

வாட் நெக்ஸ்ட்? 

இப்போ voice virus-னு ஒரு சேனல் நடத்துறோம். இசையையும் பாட்டையும் இன்னும் க்ரியேட்டிவ்வா எப்படி வெளிப்படுத்தலாம்னு யோசனைல இருக்கேன்.

பாடல்களைக் கேட்டு ரசிக்க?

www.smule.com/BairaviGopi

என்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்!

ரம்யா துரைசாமி

சொந்த ஊர்?
 
சென்னை

வேலை? 

செய்தி வாசிப்பாளராக இது 11-வது ஆண்டு.

ரெக்கார்டிங்ஸ்?

6,000+

பாடியதில் பிடித்தது?

‘நெஞ்சம் மறப்பதில்லை...’

அனுபவம்?


இருபது வருடங்களுக்கும் மேலாக மேடைகளில் பாடியிருக்கேன்.
 
சினிமா வாய்ப்பு?

ஸ்மூல் வந்ததுக்குப் பிறகு மூன்று படங்களில் பாடியிருக்கேன்.  விளம்பரங்களுக்கு ஜிங்கிள்ஸ் பாடியிருக்கேன்.

மறக்கமுடியாத பாராட்டு?

ஜெயலலிதா அம்மா ‘உங்க பாடல்கள்லாம் நல்லா இருக்கு’ எனப் பாராட்டியது.

நெகிழ்ச்சி?

 ‘எங்க குடும்பத்துல எல்லோரும் உங்களுக்கு ஃபேன்’னு சொல்ற கடல்கடந்து இருக்கற ஒருத்தர், யதேச்சையா கோயில்ல பார்த்துட்டு ‘எங்க அம்மா சாகுறதுக்கு முன்னாடி கடைசியா உன் பாட்டதான் கேட்க ஆசைப்பட்டாங்க...’ என நெகிழும் தோழி என நாம சாதாரணமா பாடுறதுகூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான ஃபீல் கொடுக்குது.

பாடல்கள்?

துக்கத்தைக் கடக்கலாம்; மகிழ்வைப் பகிரலாம்.

ஒரு வரி?

இன்னிசை மட்டும் இல்லையென்றால்... என்றோ என்றோ இறந்திருப்பேன்..!

பாடல்களைக் கேட்டு ரசிக்க?

www.smule.com/ramyaduraiswamy