Published:Updated:

வீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை!

வீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
வீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை!

வி.எஸ்.சரவணன் - படம்: சொ.பாலசுப்ரமணியன்

“எங்கள் குடும்பத்தில் வேலைக்குச் செல்கிற முதல் பெண் நான்தான். அதில் என்னைவிட, என் அப்பாவுக்குத்தான் சந்தோஷம் அதிகம். எம்.சி.ஏ-வில் கோல்டு மெடல் வாங்கியபோது அப்பா முகத்தில் அப்படியொரு பெருமிதம். நான் எப்போதாவது சோர்வானால் அப்பாவின் முகம் மனதில் தோன்றி, தட்டிக்கொடுத்து உற்சாகமாக்கிவிடும்...”      

வீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை!

- பூரிப்போடு சொல்கிறார், சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் கங்கா. இவரின் கணவர் பிரகாஷுக்கு வங்கியில் வேலை. எல்.கே.ஜி படிக்கும் மகன் கெளசிகன். பரபரப்பான ஐ.டி வேலைக்கும் அன்பான குடும்பத்துக்கும் தன்னுடைய நேரத்தை எப்படிப் பங்கிட்டுத் தருகிறார் என்பதைச் சொல்கிறார் கங்கா...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• காலையில் நான் எழுந்த பிறகுதான் ஐந்தரை மணி அலாரமே அடிக்கும். எழுந்திருப்பதில் தாமதித்தால், அந்த டென்ஷன் எந்த வேலையைத் தொட்டாலும் ஒட்டிக்கொள்ளும் என்பதால் ஷார்ப்பாக எழுந்துவிடுவேன்.

• ஏழே காலுக்குள் சமையலை முடித்துவிடுவேன். மகனை எழுப்பி, பல் தேய்க்க வைத்திருப்பார் கணவர். 8.40-க்கு கெளசிகனுக்கு ஸ்கூல் பஸ் வந்துவிடும். அதற்குள் அவனைத் தயார் செய்து, சாப்பிட வைப்பேன்.

• கெளசிகன் சாப்பிட்டு முடிப்பதற்குள் அவனுக்குத் தேவையான லஞ்ச், ஸ்நாக்ஸ், டிரெஸ், கர்ச்சீஃப் எல்லாவற்றையும் கணவர் எடுத்து வைத்துவிடுவார். கெளசிகனுக்கு மதியத்துடன் ஸ்கூல் முடிந்துவிடும். அங்கிருந்து அவனை டே கேருக்கு வேனில் அழைத்துச் சென்றுவிடுவார்கள். அதனால் ஸ்நாக்ஸ், ஸ்பூன், வாட்டர் பாட்டில், இரண்டு செட் டிரெஸ், கர்ச்சீஃப்  என அனைத்தையும் எடுத்துவைக்க வேண்டும்.

• பிறகு, ஐந்து நிமிடங்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்வேன். வீட்டிலிருந்து ஆபீஸ் செல்ல அதிகபட்சம் அரை மணி நேரம். 9.15-க்குள் அலுவலகத்தில் இருப்பேன். அதன்பின், வேலையில்தான் மனம் முழுக்க இருக்கும்.

• மாலையில் வீடு திரும்பும்போது மகனை அழைத்துக்கொண்டு செல்வேன். அவனுக்குக் குடிப்பதற்கு ஏதேனும் தந்து, ஒரு மணி நேரம் விளையாடிக் கொண்டிருப்போம். இரவில் காய்கறி வாங்க இருவரும் செல்வதை ஒருநாளும் தவறவிட மாட்டோம். இரவு சமையலை முடிப்பதற்குள் கணவர் வந்துவிடுவார்.

• சனிக்கிழமையன்று அந்த வாரத்துக்கான பொருள்களை வாங்கி வைத்துவிடுவேன். ஐந்து பாலிதீன் கவர்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மகனுக்குத் தேவையான பொருள்களை தனித்தனியாக வைத்துவிடுவேன். இதனால் காலை டென்ஷனைத் தவிர்க்க முடியும்.

• ஐ.டி நிறுவனத்தில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் என்பதால்,வேலை சற்று அதிகம்தான். சில நாள்கள் மகனைத் தூங்க வைத்துவிட்டு இரவு 10 மணிக்குத் தொடங்கும் வேலை விடியற்காலை 3 மணி வரை இழுத்து விடும்.

• என் பொறுப்பில் இரண்டு பேர் வேலை செய்கிறார்கள். அவர் களுக்கான வேலையைச் சரியாக வழிகாட்டி விடுவேன். அப்படியும் செய்ய முடியவில்லை என்றால் நானே செய்து காட்டுவேன். 
என்னாலும் முடிய வில்லை என்றால் தயங் காமல் மேலதிகாரியின் உதவியை நாடுவேன்.

• என் மகனோடு விளையாடுவதற்குத்தான் கிடைக்கிற ஒவ்வொரு நிமிடத்தையும் பயன் படுத்துகிறேன். அதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு ஏதாவது இருக்கிறதா என்ன?

• குடும்பமோ, வேலையோ  கணவரோடு விவாதித்து திட்ட மிட்டால், அதைப் பின் பற்றும்போது முரண்பாடு வராது. குடும்பம், வேலை இரண்டிலும்  டென்ஷன் இல்லாமல் பயணிக்கலாம்!