Published:Updated:

பத்திரமா பாத்துக்கோங்க!

பத்திரமா பாத்துக்கோங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
பத்திரமா பாத்துக்கோங்க!

பராமரிப்புஆர்.ஜெயலெட்சுமி

`ஆடைகளை வாங்குவதைவிட பராமரிப்பதுதான் கொஞ்சம் கஷ்டம்’ என்பவரா நீங்கள்? கவலையே வேண்டாம். பராமரிப்பதற்கான ஆலோசனைகள் தருகிறார், காஸ்ட்யூம் டிசைனர் நிவேதா ஜோசப். 

பத்திரமா பாத்துக்கோங்க!

  பட்டை அயர்ன் செய்யலாமா?

இன்றைய சூழ்நிலையில் டிரை வாஷ் பண்றது நல்லது. நாமே துவைக்கிறதா இருந்தால், புரோட்டீன் கலந்த ஷாம்புவை நீரில் கலந்து, அதில் பட்டாடையைப் பத்து நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து, நீரில் அலசி, நிழல்ல உலர வைக்கணும்.
பட்டுப்புடவைகளை அயர்ன் பண்ணி மடிச்சு வைத்தால், ரொம்பக் காலம் பயன்படுத்தாம இருக்கிற சூழல்ல மடிப்புகளில் துணி நைந்து போகலாம். அதனால அயர்ன் செய்யாம கைகளால மடிச்சு வெச்சு, உடுத்துறப்ப மீடியம் ஹீட்ல அயர்ன் செய்யலாம். மாசத்துக்கு ஒரு தடவை மடிப்பை மாத்தி மடிச்சு வைக்கலாம்.

காட்டனை அடித்துத் துவைத்தால்?


காட்டனை அடித்துத் துவைத்தால் நூல் பலவீனமாகிவிடும் என்ப தால் அப்படிச் செய்ய வேணாமே... தரமான டிடர்ஜென்ட் கலந்த நீரில் ஊறவைத்துத் துவைத்து, ஸ்டார்ச் கலந்த நீரில் மூழ்கவைத்து எடுத்து, ஹேங்கரில் உலர வைக் கணும். நார்மல் அயர்னிங் போதுமானது.

ஷிஃபான் மெட்டீரியலில் பார்டர் இருந்தால்..?


பாலியஸ்டர், சிந்தடிக் ரக ஆடைகளுக்கு நார்மல் வாஷ், நார்மல் அயர்னிங் போதுமானது. கிரேப், ஷிஃபான் மெட்டீரியலில் பார்டர் இருந்தால் கிராண்ட் லுக் கொடுக்கும். இவற்றை நார்மல் வாஷ் செய்து, பார்டர் சுருங்காமல் ஸ்டீம் அயர்னிங் செய்யணும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பத்திரமா பாத்துக்கோங்க!


  
உல் மெட்டீரியலுக்கு பிரஷ் பயன் படுத்தலாமா?


குளிர்காலங்கள்ல பயன்படுத்துற ஃபேப்ரிக் உல் இயற்கையானது. இதை டிடர்ஜென்ட் கலந்த நீரில் ஊறவைத்துத் துவைத்து, வெயிலில்  உலர வைக்கணும். பிரஷ் பயன்படுத்தக் கூடாது.

சில்க் காட்டனை ஹை ஹீட்டில் அயர்ன் செய்யலாமா?


சில்க் காட்டன் மிருதுவான ஃபேப்ரிக். ஷாம்பு கலந்த நீரில் பத்து நிமிஷங்கள் ஊற வெச்சு, நீரில் அலசி எடுத்து உலர்த்தணும். பிழியக் கூடாது, பிரஷ் போடக் கூடாது. மிதமான ஹீட்டில்தான் அயர்ன் பண்ணணும். 

லெதர் டிரெஸ்ஸைத் துவைக்கலாமா?

லெதர் மெட்டீரியல் ஆடைகளைத் துவைக் காமல், சோப்பு நீரில் மூழ்கவைத்து எடுத்து, அழுக்கான பகுதிகளைத் துடைத்தாலே போதும்.