Published:Updated:

RJ கண்மணி அன்போடு - நெகட்டிவ் சிந்தனைகள் வேண்டாமே!

RJ கண்மணி அன்போடு - நெகட்டிவ் சிந்தனைகள் வேண்டாமே!
பிரீமியம் ஸ்டோரி
News
RJ கண்மணி அன்போடு - நெகட்டிவ் சிந்தனைகள் வேண்டாமே!

படங்கள்: தி.குமரகுருபரன்

டகத் துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் கண்மணி, அதே ஊடகத் துறையில் பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் சக பெண்களைக் கண்டு கலந்துரையாடுகிறார். வாருங்கள்... ஒவ்வொரு பெண்ணின் வெற்றி வரலாற்றையும் வாழ்க்கையையும் சற்றே அருகிலிருந்து பார்ப்போம். இந்த இதழில் டோஷிலா - தொலைக்காட்சி  நிகழ்ச்சித் தொகுப்பாளர்.     

RJ கண்மணி அன்போடு - நெகட்டிவ் சிந்தனைகள் வேண்டாமே!

நீங்க டி.வி-யில பல வெற்றிகரமான நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிற ஒரு `விஜே'. ஆனா, முதல்ல உங்களை `ஆர்ஜே' டோஷிலாவாத்தான் தெரியும். எப்படி நடந்தது இந்த ரேடியோ டு டி.வி மாற்றம்..?

``சின்ன வயசிலிருந்தே நான் மீடியா துறைக்கு வருவேன்னு என்னைச் சுத்தி இருந்த எல்லாருமே சொல்லிட்டிருந்தாங்க. டாக்டருக்குப் படிக்க இருந்த நான், கடைசி நேரத்துல விஸ்காம் படிச்சு ரேடியோவுக்கு வந்தேன். அதுக்கப்புறமா கொஞ்சம்  இடைவெளி. மறுபடியும் நான் டி.வி-யில் புரொடக்‌ஷன்ல வேலை தேடித்தான் வந்தேன். நேர்காணலுக்கு உட்கார்ந்திருந்தபோது, வழக்கமா வர்ற ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளினி அன்று வராம போனதால, என்னை `விஜே' ஆகிட்டாங்க. என் வாழ்க்கையில  அது ஓர் அழகான, ஆச்சர்யமான விபத்து. அந்த டி.வி சேனல்ல 850 எபிசோட்ஸ் பண்ணியிருக்கேன். அதுக்கு அப்புறமா நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி தொடர்ந்துடுச்சு.''

லைவ் நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னமாதிரி `இந்த விக்கல், இருமல், தும்மல், கொட்டாவி... இதெல்லாம் தானா வரும்' - அப்படி ஏதாவது நிகழ்ந்திருக்கா?     


``ஆமாம்... நடந்திருக்கு. ஆறு மருத்துவர்களோடு நேரலையில் இருந்தேன். அப்போ ஒருவர் தன் உடல் உபாதைக்காக ஆலோசனை பெற போன் பண்ணியிருந்தார். இணைப்புல அவர் என்கிட்ட தன்னோட பிரச்னையை விவரித்த விதம் என்னையும் அறியாம என்னைச் சிரிக்க வெச்சிடுச்சு. அங்கிருந்த மருத்துவர்களும் சிரிச்சாங்க. அவ்வளவு ஏன்... போன் பண்ணினவரேகூட சிரிச்சுட்டார். ஆனா, அன்னிக்கி ராத்திரி எனக்குத் தூக்கமே வரலை. என் மனசாட்சி என்னைத் தூங்கவிடலை. `ஒருத்தர் உடல்நலக் குறைவினால பேசும்போது அது எப்படி டோஷி உனக்கு வேடிக்கையா இருக்கும்? சிரிப்பை வரவழைக்கும்?'னு என்னை நானே மண்டையில குட்டிக்கிட்டேன். அந்த நேயரிடமும் மானசீகமா மன்னிப்பு கேட்டுக்கிட்டேன். டி.வி நிகழ்ச்சிகளில் சென்சிட்டிவிட்டி ரொம்பவும் முக்கியம்.''

மக்கள் உங்களைத் தினமும் பார்க்கறாங்க. நீங்க எப்படி இருக்கீங்கன்னு விமர்சிக்கறாங்களா? அதை எப்படி எடுத்துப்பீங்க?


``மக்கள் முதலில் கவனிக்கறது வெயிட். `குண்டா இருக்கீங்க... குண்டா இருக்கீங்க' என்கிற விமர்சனத்தை அதிகமா கேட்க நேரிடுது. `நேர்ல பார்த்தா அப்படி ஒண்ணும் தெரியலையே மேடம்'னும் சொல்லுவாங்க. கேமரா மூலமா பார்க்கும்போது உடைக்கு ஏற்ப சற்று பருமனாகத்தான் காட்டும். இந்த டெக்னாலஜி எல்லாம் சொல்லிப் புரிய வெச்சுக்கிட்டு இருக்க முடியாது. தோற்றத்தையும் தாண்டி என்னால உங்களை டி.வி முன்னாடி உட்கார வைக்க முடியுதான்னு மட்டும்தான் பார்ப்பேன்.''   

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
RJ கண்மணி அன்போடு - நெகட்டிவ் சிந்தனைகள் வேண்டாமே!

உங்க விசிறிகள் பற்றிச் சொல்லுங்க டோஷிலா...

``ரொம்பவும் நேசிக்கிற, தொடர்ந்து என்னைக் கவனிச்சுட்டு வர்ற ரசிகர்கள்  நிறைய பேர் உண்டு. முக்கியமா, ஒரு ரசிகர் தினமும் நான் என்ன கலர் உடையில் வர்றேனோ அதுக்கு ஏத்தமாதிரி ஒரு பாட்டு அனுப்புவார்; ஒருநாள் வரலேன்னா, அதுக்கும் பாட்டு அனுப்புவார்.''

கேட்கறதுக்கு கொஞ்சம் ரொமான்டிக்கா இருக்கே... ஹ்ம்... என்ன கதை?

``ஐயய்யோ... ஒண்ணுமே இல்ல. நல்ல ஒரு நட்புதான்.''

உங்களுக்கு நிறைய பாராட்டுகள் கிடைத் திருக்குன்னு தெரியும். அவற்றில் உங்களால மறக்க முடியாதது..?


``ஒருமுறை ராதாரவி சார் என் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர்கிட்ட பேசறதுன்னாலே எல்லாரும் பயப்படுவாங்க. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியைத் தொகுக்கும் வாய்ப்பு என்னுடைய நண்பர்களுக்குக் கிடைச்சாக்கூட பயத்துல வேணாம்பாங்க. அன்னிக்கு என்னோட நிகழ்ச்சியில அவர்கிட்ட பல கேள்விகளைக் கேட்டேன். சர்ச்சைக்குரிய அவரோட சில கருத்துகள் பற்றியும் கேட்டேன். எல்லாத்துக்கும் பொறுமையா விளக்கம் கொடுத்தார். நிகழ்ச்சிலேயே `இப்படிக் கேள்வி கேட்டா ஏம்மா நான் திட்டப்போறேன்?' என்றும் சொன்னார். அது ஒரு சிறந்த பாராட்டு.'’

உங்க நிகழ்ச்சிகளுக்கு விருந்தினரா வருகிற பிரபலங்களை எப்படி மேனேஜ் பண்றீங்க..?


``என் நிகழ்ச்சிக்கு வர்ற விருந்தினர் யாருன்னு எனக்குத் தெரிஞ்ச அந்த நொடியே ஆராய்ச்சியைத் தொடங்கிடுவேன். அவங்களைப் பத்தின முழு விவரங்கள், அவங்க பண்ணின சாதனைகள், அவங்க விருப்பங்கள்... இதையெல்லாம் குறித்து வைத்துக்கொள்வேன். நிகழ்ச்சியின் முதல் ஐந்து நிமிடங்கள் மிக முக்கியமானவை. என்னுடைய அறிமுக வரிகள், முதல் கேள்வி... அதிலேயே விருந்தினரின் மனதில் இடம்பிடிப்பதே நோக்கம். அதை மட்டும் சரியாகச் செய்துவிட்டால் போதும்... நிகழ்ச்சி தானாக சூப்பராகிடும்''. 

உங்களைப் போல டி.வி தொகுப்பாளினியாக வர விருப்பம் உள்ளவர்களை வழிநடத்துங்க டோஷி...

• ``சிவகார்த்திகேயனுக்கு அப்பறம் நிறைய பேரு டி.வி என்பதை சினிமாவுக்கான வாயிலா எடுத்துக்கறாங்க. எல்லாருக்கும் அப்படி அமைஞ்சுடாது. இந்தத் துறைக்குதான் வரணும் என்கிற கிளாரிட்டி முக்கியம்.    

RJ கண்மணி அன்போடு - நெகட்டிவ் சிந்தனைகள் வேண்டாமே!

• நிறைய புத்தகங்கள் படிக்கணும். படிக்கப் படிக்க மொழி வளமை அதிகமாகும்.சிந்தனைகள் தெளிவாகும்.

• நம்மை எப்படிப் புத்துணர்வோடு வெச்சுக்கிறது என்பது பற்றித் தெரிஞ்சுக்கோங்க. உடல் தோற்றம் பற்றிய நெகட்டிவ் சிந்தனைகளை விட்டுடுங்க. தன்னம்பிக்கையோடு இருங்க.

• தொடர்ந்து பேசிப் பேசிப் பார்க்கணும். கூட்டத்தில் பேச பயம் இல்லாம இருக்கப் பழகுங்க. எங்கே, என்ன வாய்ப்பு கிடைச்சாலும் உபயோகிச்சுக்கோங்க. ஒரு வாய்ப்பையும் தவறவிடாதீங்க.''

நீங்க எப்போதுமே ஸ்க்ரீன்ல பளிச்சுனு இருக்கீங்களே... எப்படி?

``எப்போதும் நல்ல பழக்கவழக்கங்களோட இருக்கிறதுதான் நிரந்தர வழிமுறை. என்றாலும்கூட, சில ஷார்ட் கட்ஸ் இருக்கு. இப்போ நல்லா வயிறுமுட்ட சாப்பிட்டதால் இறுக்கமா இருக்கா? அன்னாசிப்பழம் சாப்பிட்டா போதும். பிரியாணியைச் சாப்பிட்டாக்கூட சில துண்டுகள் அன்னாசிப்பழம் உங்களுக்கு ரொம்ப ஈஸியா செரிமானத்தைக் கொடுத்திடும். நிறைய புரோட்டீன் சாப்பிட்டா அதுக்கப்புறம் ஒரு `சிட்ரஸ்' சாப்பிட்டால் சரியாயிடும்; வாந்தி வரும்போல இருந்தால்கூட சரியாகிடும்.   

உங்ககிட்ட அழகுக் குறிப்புகள் கேட்கலைன்னா அவள் வாசகிகள் வருத்தப்படுவாங்க. சொல்லுங்க ப்ளீஸ்...

``நால்பாமராதி தைலம், ஏலாதி தைலம்... இது ரெண்டையும் வாரத்துல இரண்டு தரம் உடல் முழுக்கப் பூசி நலங்கு மாவால் தேய்த்துக் குளித்துவந்தால் உங்கள் சருமம் பளபளக்கும். என்ன மேக்கப் போட்டாலும் சருமத்துக்கு ஒண்ணுமே ஆகாது; இயற்கை பளபளப்பு கூடும்.

மைதா, கேக் வகைகள் சாப்பிட மாட்டேன். ஆரோக்கிய உணவு சாப்பிடுவேன். அப்புறம் நம்மோட ஸ்கின்னுக்கு ஏற்றாற்போல மேக்கப் சூஸ் பண்ணணும். இதையெல்லாம் செஞ்சா அழகுல ஜொலிக்கலாம்.''

வீடியோ ஜாக்கி ஆக வேண்டுமா?

• Viscom அல்லது masscom படிக்கலாம்.

• தன்னம்பிக்கை வேண்டும்.

• Comfortable in your own skin என்பார்கள்... அந்தப் பக்குவம் வர வேண்டும்.

• ஆரோக்கியமாக வாழத்தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

• நல்ல மொழிவளமும், சிறந்த பொது அறிவும் இருத்தல் நலம்.

• டி.வி நிலையங்களில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன் youtube சேனல்களில் பணியாற்றி அனுபவம் பெறலாம்.

• அழகு, அறிவு, ஆரோக்கியம் மூன்றையும் பேணுதல் அவசியம்.