Published:Updated:

நகை வாங்கப்போறீங்களா... - உங்களுக்காக ஒரு செக் லிஸ்ட்!

நகை வாங்கப்போறீங்களா... - உங்களுக்காக ஒரு செக் லிஸ்ட்!
பிரீமியம் ஸ்டோரி
News
நகை வாங்கப்போறீங்களா... - உங்களுக்காக ஒரு செக் லிஸ்ட்!

ஷாப்பிங்யாழ் ஸ்ரீதேவி - படங்கள்: க.பாலாஜி

பரணங்களின் மேல் பெண்களின் ஆசை எப்போதும் குறையாது. அதே வேளையில் வெள்ளி, தங்கம், பிளாட்டினம், வைரம் என்று வாங்கும் நகைகளின் தரமும் குறைந்துவிடாமல் இருக்க வேண்டியது முக்கியம். ஆபரணங்கள் வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார், லலிதா ஜூவல்லரியின் கிளை மேலாளர் ஞானசேகரன். 

நகை வாங்கப்போறீங்களா... - உங்களுக்காக ஒரு செக் லிஸ்ட்!

தங்கமே... தங்கமே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• தங்க நகையில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட `பி.ஐ.எஸ்’ (Bureau of Indian Standards) ஏஜென்சியின் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். முக்கோண முத்திரை, தங்கத்தின் தரத்தைக் குறிக்கும் மூன்றிலக்க எண் (916, 958, 875 இப்படி. இதில் 916 என்பது 91.6% தங்கம், அதாவது 22 காரட் தங்கம் ஆகும்), தரம் அங்கீகரிக்கப்பட்ட மையம், வருடம், விற்பனை செய்யும் கடையின் எண்/லோகோ... இந்த அம்சங்கள் அடங்கியதே ஹால்மார்க் முத்திரை.

• ஹால்மார்க் முத்திரை அல்லாது, சில நகைகளில் `கே.டி.எம்’ முத்திரை இருக்கும் (KDM 916). அதாவது, அந்த நகையில் தங்கத்துடன் செம்புக்குப் பதிலாக கேட்மியம் (cadmium) என்ற ஒருவகைப் பொடி பயன்படுத்தப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்தி நகையை வார்க்கும்போது அதன் பெரும்பகுதி காற்றில் கரைந்துவிடுவதால், அந்நகையில் தங்கத்தின் சதவிகிதம் அதிக அளவு இருக்கும். கே.டி.எம் தங்கமே ஆனாலும் ஹால்மார்க் முத்திரைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

• கல் நகைகள் வாங்கும்போது கல்லுக்கு எவ்வளவு விலை, தங்கத்துக்கு எவ்வளவு விலை என்று விசாரித்து வாங்க வேண்டும். கல் நகைக்கு மறுமதிப்பீட்டு மதிப்பு குறைவு என்பதால், பின்னர் விற்கும்போது வாங்கிய விலையைவிட கணிசமாகக் குறைத்தே எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபி, எமரால்டு போன்றவை பதிக்கப்பட்டிருப்பின் அவற்றின் தரத்தை உறுதிசெய்து வாங்க வேண்டும்.

• நகைக்கான சேதாரம் எவ்வளவு குறிப்பிடப்படுகிறது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இது நகையின் வேலைப்பாட்டைப் பொறுத்தும், கடைக்குக் கடையும் மாறுபடும்.

• எந்தக் கடையில் நகை வாங்கினாலும் பில், கியாரன்ட்டி கார்டுகளைப் பத்திரப்படுத்தவும்.

மின்னும் வைரம்!


• வைர நகைகள் வாங்கும்போது கூடவே அதற்கான தரச்சான்றிதழை சரிபார்த்து வாங்கவும். வைரத்தின் விலையை அதன் தரமே நிர்ணயிக்கிறது. தரமான வைரம் குறைந்த விலையில் கிடைக்காது. வைர நகைகளை பாரம்பர்யமிக்க கடைகளில் வாங்குங்கள்.    

நகை வாங்கப்போறீங்களா... - உங்களுக்காக ஒரு செக் லிஸ்ட்!

பிளாட்டினம் பத்திரம்!

பிளாட்டினம் நகைகள் பெரும்பாலும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களால் வாங்கப்படுகின்றன. அவற்றின் தரத்துக்கு `பிடி 950’ (pt 950) என்ற முத்திரையை பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனல் வழங்குகிறது. அதைக் கவனித்து வாங்கவும். அதுதான் பிளாட்டினத்தின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்குமான அடையாளம்.  ஒவ்வொரு பிளாட்டினம் நகைக்கும் தனிப்பட்ட குறியீட்டு எண் கொடுக்கப்படும். கிராம் அளவில்தான் இதன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு கிராம் பிளாட்டினத்தின் விலை, தங்கத்தின் விலையைவிட இரண்டு மடங்குவரை இருக்கும். பிளாட்டினம் நகையின் தரச்சான்றுக்கான அட்டையில் குறியீட்டு எண், நகையின் எடை மற்றும் தரம் பற்றிய எல்லா தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். பிளாட்டினம் நகை வாங்கும்போது, இந்த அட்டையைக் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.

வெள்ளி கொலுசு மணி!
 
குழந்தைப் பருவம் முதல் அரைஞாண் கயிறு, கொலுசு, மெட்டி என ஏதாவது ஒருவகையில் வெள்ளி நகைகள் நம் உடலோடு உறவாடுகின்றன. இவற்றின் தரத்துக்கு உத்தரவாதம் அளிக்க தங்கம்போல வெள்ளிக்கும் பி.ஐ.எஸ் ஹால்மார்க் முத்திரை உண்டு. வெள்ளி நகைகளில் 80 `டச்' வரை உள்ளதை நல்ல வெள்ளி எனலாம். வெள்ளிப் பொருள்களை வாங்கிய கடையிலேயே விற்கும்போது மறுமதிப்பீட்டு விலையில் அதிக இறக்கத்தைத் தவிர்க்கலாம்.

இனி நகைகள் வாங்கும்போது இந்த செக் லிஸ்ட் நினைவிருக்கும்தானே?!

நகையை மாற்றும்போது கவனிக்க...

`ட்ரெண்டுக்கு ஏற்ப நகை அணிய வேண்டும்’ என அடிக்கடி நகையை மாற்றும்போது நஷ்டம் தவிர்க்க முடியாததாகும். புது நகை வாங்க பழைய நகையைக் கடையில் மாற்றும்போது, அதில் கழிவு நீக்கும் முறையில் தங்கத்தின் எடையில் அளவு குறைந்துபோகும். மேலும், அது 916 நகை இல்லை எனில், தங்கத்தின் விலையும் குறைத்தே மதிப்பிடப்படும். எனவே, அடிக்கடி நகையை மாற்றும் பழக்கம் உள்ளவர்கள் 916 ஹால்மார்க் முத்திரை பெற்ற நகைகளாக வாங்கிக்கொள்வது அவசியம். நகையை மாற்றும்போது கழிவு நீக்கப்பட்டாலும்கூட, அதை எந்தக் கடையிலும் தங்கத்தின் அன்றைய சந்தை விலைக்குக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.