Published:Updated:

மனுஷி - தாய்மை எனும் தவம்!

மனுஷி - தாய்மை எனும் தவம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மனுஷி - தாய்மை எனும் தவம்!

சுபா கண்ணன் - ஓவியம்: ஸ்யாம்

‘எவள் இல்லையென்றால் நீ பிறந்திருக்க முடியாதோ, எவளை இழந்துவிட்டால் மறுபடியும் பெற முடியாதோ, அவளே உன் வாழ்க்கைத் தத்துவங்களைத் தொடங்கி வைக்கிறாள். அவள்தான் உன் தாய்.’

- சுவாமி விவேகானந்தர்    

மனுஷி - தாய்மை எனும் தவம்!

‘`வாழ்த்துகள் நரேஷ். சீக்கிரம் அப்பாவாகப் போகிறீர்கள். லக்ஷ்மியைக் கவனமா பார்த்துக்கங்க. ரெகுலர் செக்கப்பை மறக்காமச் செய்யுங்க’’ என்று சிரித்தபடியே வழி அனுப்பி வைத்தார் டாக்டர்.

நரேஷுக்கு மனசெல்லாம் மத்தாப்பூதான். ஆனாலும், உள்ளுக்குள் பயம். லக்ஷ்மி மனநிறைவோடு காணப்பட்டாள். தன் கையை ஆதுரமாகப் பற்றிய கணவனைப் பார்த்து, ‘`நான் இந்த உணர்வை முழுவதுமாக என்ஜாய் செய்யப்போகிறேன். குழந்தை பிறக்கும்வரையான காலம் எனக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்குமானதுதான். எனவே, வேலையை விட்டுவிடப் போகிறேன்’’ என்றாள்.

மகிழ்ச்சியுடன் தலையசைத்த நரேஷ், ‘`அம்மாவை வேண்டுமானால் வரவழைக்கட்டுமா?’’ என்று கேட்டான். லக்ஷ்மியோ, ‘`பாட்டி வந்தால் நன்றாக இருக்குமே’’ என்றாள். நரேஷ் குறிப்பிட்டது லக்ஷ்மியின் அம்மாவை... லக்ஷ்மி குறிப்பிட்டது நரேஷின் பாட்டியை. `சரி, இருவருமே வரட்டும்' என்று முடிவு செய்தனர்.

பகல் உணவுக்குப் பிறகு பாட்டியுடன் தாயம், பரமபதம் விளையாடுவதுதான் பொழுதுபோக்கு. அப்படி ஒருநாள் தாயம் விளையாடும்போது லக்ஷ்மி காலை மடித்தபடி உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்த பாட்டி, ‘`காலை மடிச்சு உட்காராதே. நன்னா நீட்டி உட்கார்ந்துக்கோ’’ என்றார்.

பாட்டி சொன்னதைக் கேட்டு லக்ஷ்மி சிரித்ததால், ‘`நாங்க சொன்னா சிரிக்கத்தான் செய்வீங்க. இதையே யோகா கிளாஸ்ல சொன்னா கேட்பீங்க’’ என்று பாட்டி சொன்னதற்கு,

‘`அதுக்கில்லை பாட்டி, பெரியவங்க முன்னாடி காலை நீட்டக்கூடாதுன்னு’’ என்று இழுத்தாள்.

‘`அடி அசடே, மரியாதை மனசுல இருந்தா போதும். இந்தத் தொல்லைக்காகத்தான் நாலாம் மாசம் ஆரம்பத்துல பும்ஸுவனம் செஞ்சி அம்மா வீட்டுக்கு அனுப்பிடறது. அம்மா வீட்டுல ஃப்ரீயா இருந்துக்கலாமே’’ என்று பாட்டி சொல்லவும்,   ‘`அது என்ன பாட்டி பும்ஸுவனம்?’’ என்று கேட்டாள் லக்ஷ்மி.

‘`பும்ஸுவனங்கறது கர்ப்பம் உறுதியான நாலாவது மாசத்தின் ஆரம்பத்துல செய்யற ஒரு சடங்கு. பொதுவாவே கருவில் உருவாகி இருக்கற குழந்தைக்கு மட்டுமில்லாம, இனிமேல் பிறக்கப்போகும் எல்லா குழந்தைகளுக்கும் சேர்த்துச் செய்யறதுதான் பும்ஸுவனங்கறது சிலரோட எண்ணம்’’ என்றார் பாட்டி.

‘`பும்ஸுவனம் செய்யறதைப் பத்தி நான் தெரிஞ்சிக்கலாமா பாட்டி?’’

‘`பொதுவா வளர்பிறையில் பூச நட்சத்திரம் வரும் நாளில்தான் பும்ஸுவனம் செய்வார்கள். நாள் சரியில்லை என்றால் தேய்பிறையிலும் செய்யலாம். அதிகாலையில தம்பதிகள் மங்கள ஸ்நானம் செஞ்சிட்டு, புரோகிதர் வழிகாட்டற
படி கலசத்தில் வருண பகவானை வழிபடுவார்கள். அந்தக் கலச தீர்த்தத்தால் கர்ப்பிணிக்கு அபிஷேகம் செய்வாங்க. பிறகு மஞ்சள் கயிறு ஒண்ணை மந்திரம் சொல்லிப் பொண்ணோட இடக்கையில காப்புப் போலக் கட்டுவாங்க. கர்ப்பத்தைப் பாதுகாக்கும் தெய்வத்துக்கு ஹோமம் செஞ்சி வேண்டுவார்கள். எல்லாத்துக்கும் மேல ஆலமரத்தின் கிழக்கு அல்லது வடக்குப் பக்கத்துல இருக்கற இரண்டு காய்களுடன் இருக்கற ஆலமொக்கை எடுத்து வந்து கர்ப்பிணியின் மூக்கில் பிழிவாங்க. இந்தச் சடங்கின்போதுதான் புதுப்புடைவைதான் கட்டணும். மூக்கில் இருந்து அது தொண்டைக்கு வர்றச்சே கர்ப்பிணி அதை முழுங்கிடணும். ஆலமொக்கோட சாறு கர்ப்பத்துக்கு உறுதியையும் பலத்தையும் கொடுக்கறதா சுச்ருதர் சொல்லியிருக்கார். சுகப் பிரசவத்துக்கும் உதவறதா ஆயுர்வேதத்துல சொல்லப்பட்டிருக்காம். ஆரம்பத்துல நாலாவது மாசத்துல செஞ்சிட்டிருந்த பும்ஸுவனம் இப்ப எட்டாவது மாசமா மாறிடுத்து’’ என்று பாட்டி நீண்ட பிரசங்கமே செய்துவிட்டார்.

தொடர்ந்து, ‘`சீமந்தம்’’ என்று பாட்டி தொடங்கும்போதே குறுக்கிட்ட லக்ஷ்மி, ‘`கையில் வளையல்லாம் போடுவாங்களே அதானே சீமந்தம்?’’ என்று கேட்டாள்.

‘`அப்படி இல்லே. சம்ஸ்கிருதத்துல சீமாங்கறது எல்லை, அந்தம், முடிவுன்னெல்லாம் அர்த்தம் சொல்லி இருக்கு. இது தலை சீவறச்சே வகிடு எடுக்கறதைக் குறிக்கும். தலையில் வகிடு ஆரம்பிக்கும்  இடத்துல இருந்து முடியும் இடம் வரை வகிர்ந்துவிடறதைத்தான் சீமந்தம்னு சொல்வாங்க. `சீமந்தோநயனம்'னுகூட சொல்வாங்க. இந்தச் சடங்கின்போது பௌர்ணமி சந்திரனின் தேவதையான ராகா என்னும் தேவதையை அழைத்து, அத்திமரக்கிளை, நெற்கதிர், முள்ளம்பன்றி முள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றால் பெண்ணின் வகிட்டை, கணவன் வகிந்துவிட வேண்டும். இப்படிச் செய்யறதால கர்ப்பிணியின் மனக்கிலேசம் போயிடுங்கறது ஐதீகம். ஆரோக்கியமாகவும் சுகமாகவும் குழந்தை பிறக்க இனிமையான சங்கீதம் கேட்கணும்னு சொல்லுவாங்க. சீமந்தம் நடக்கற அன்னிக்குக் காளைக் கன்றைத் தொட்டுவிட்டுச் சாப்பிடச் சொல்வாங்க. கர்ப்பிணியைக் குனியச் சொல்லி, இடுப்பின் அருகில் அச்சுதம் தெளிக்கறதுங்கற சடங்கைச் சுமங்கலிகள் சேர்ந்துச் செய்வாங்க. இதற்குப் பூக்கள், அட்சதை, பால் போன்றவற்றைப் பயன்படுத்துவாங்க. எல்லாத்தையும் சேர்த்துக் கர்ப்பிணியின் முதுகெலும்பும் இடுப்பெலும்பும் சேரும் இடத்துல, ‘ஆண் பிள்ளை பெற்றாள்; பெண் பிள்ளை பெற்றாள்’ என்று பாடிக்கொண்டே தெளிப்பார்கள்’’ என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதே...

கொட்டாவி விட்ட லக்ஷ்மி, ‘`பாட்டி, தூக்கம் கண்ணைச் சுத்துது. எனக்குப் பதிலா அம்மா விளையாடுவாங்க’’ என்று சொல்லியபடி உறங்கச் சென்றாள் லக்ஷ்மி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மனுஷி - தாய்மை எனும் தவம்!

ர்ப்பத்தின் கடைசி மூன்று மாத காலத்தில் தினமும் உட்கொள்ளும் கலோரிகளைவிட கூடுதலாக 300 கலோரிகளை எடுக்க வேண்டும். அதற்கு நற்பதமான பழங்கள், புரோட்டீன் உணவுகள், முழுத் தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளைச் சற்று அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

அன்-சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தொப்புள் கொடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். ஆகவே, ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, விதைகள், சால்மன் மீன் போன்றவற்றைச் சற்று அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.