Published:Updated:

ரெட்டை ஜடை நட்பு... ரொம்பவே ஸ்ட்ராங்கு!

ரெட்டை ஜடை நட்பு... ரொம்பவே ஸ்ட்ராங்கு!
பிரீமியம் ஸ்டோரி
News
ரெட்டை ஜடை நட்பு... ரொம்பவே ஸ்ட்ராங்கு!

பள்ளிக்கூட கில்லிகள்யாழ் ஸ்ரீதேவி - படங்கள்: வி.சதீஷ்குமார்- விஜயகுமார்

ள்ளிப் பருவ நட்பு, ஓர் அற்புதம். எத்தனை வருடங்கள் கழித்துச் சந்தித்தாலும், கால இடைவெளியை நொடியில் கடந்து, பழைய ப்ரியத்துடன் ஓடிச்சென்று  கட்டிக்கொள்ளும் அதிசய அன்பு அது. பால்மனம் மாறாத வயதில் கரம் பற்றி, கட்டிப்புரண்டு, காய் விட்டு, பழம் விட்டு, காற்று நிறைக்கும் கதைகள் பேசிய அந்த நட்பை, இறுதிவரை எடுத்துச் செல்வது சில பெண்களுக்கே வாய்க்கிறது. இதோ... இந்தப் பெண்கள் பகிரும் நினைவுகள் அவர்களுக்கானவை மட்டுமல்ல... ரெட்டை ஜடை நட்புக்கான பொது இலக்கணம்.  

ரெட்டை ஜடை நட்பு... ரொம்பவே ஸ்ட்ராங்கு!

சேலத்தைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் சாந்தியும் அவரின் பள்ளித் தோழி சசிகலாவும் பேரப்பிள்ளைகள் எடுக்கும் வயதிலும் பள்ளி நட்பைத் தொடர்கிறார்கள்.

``நானும் சசிகலாவும் சேலம் ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் படிக்கும்போதிருந்து தோழிகள். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ரெண்டு பேருக்குமே ஸீட் கிடைச்சப்போ, டாக்டருக்குப் படிக்கப் போறதைவிட, ரெண்டு பேரும் சேர்ந்து படிக்கப்போறோம் என்பதுதான் எங்களுக்குப் பெரிய சந்தோஷமா இருந்தது. ஹாஸ்டலிலும் ஒரே ரூம். எல்லாமே தற்செயலா அமைந்ததுதான். அப்போ காலேஜ்ல ராகிங் ரொம்ப அதிகமா இருக்கும். சசிகலா தைரியமான பொண்ணு என்பதால, கேன்டீன், லேப்னு எங்கே போனாலும் அவ கூடவேதான் நானும் போவேன். படிப்பை முடிச்சுட்டு நான் சேலத்தில் செட்டில் ஆனேன். சசிகலா திருமணம் முடிந்து ஹைதராபாத்தில் செட்டில் ஆனாள். எங்க ரெண்டு பேரோட கணவர்களும் டாக்டர்ஸ்தான். எங்க நட்பு, குடும்ப நட்பா மாறிச்சு’’ என்று சொல்ல, தொடர்ந்தார் டாக்டர் சசிகலா... 

‘`எங்க அம்மா அப்பா சேலத்தில்தான் இருக்காங்க. அவங்களுக்கு ஏதாச்சும் உடம்புக்கு நோவு, எதுக்கும் தேவைன்னா, ‘நீ டென்ஷன் ஆகாதே, நான் இருக்கேன்’னு சாந்திதான் போய் பார்த்துக்கிறா. ‘நீ ஹைதராபாத்வாசி. சாந்திதான் எங்க பக்கத்துல இருக்கிற மகள்’னு அவங்க நெகிழ்ச்சியா சொல்வாங்க. நான் சேலம் போனா, முதல்ல சாந்தி வீட்டுக்குப் போயிட்டு, அப்புறம்தான் எங்க வீட்டுக்குப் போவேன். குடும்பம், குழந்தைகளைத் தாண்டி மனசைப் பகிர்ந்துக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தோழி வேணும். நானும் சாந்தியும் அப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் நெருக்கடியான தருணங்களில் தோள்கொடுத்து நின்னிருக்கோம். ஆனாலும், எங்களோடது நன்றி சொல்ல அவசியமற்ற நட்பு’’ என்கிறார் சசிகலா, நெகிழ்ச்சியுடன்.    

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரெட்டை ஜடை நட்பு... ரொம்பவே ஸ்ட்ராங்கு!

மதுரை கேப்ரன்ஹால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது தோழிகள் ஆனவர்கள் குளோரியும் மியூரியலும்.

24 ஆண்டுகளுக்குப் பின்னும் தொடர்கிறது நட்பு.

‘`பத்தாம் வகுப்பு படிக்கும்போது மியூரியல், ஜெயலட்சுமி, ஏஞ்சல், ஜெயபாரதி, புஷ்பலதா, சித்ரா, மீனாட்சி, பானு, நான்... இப்படி ஒன்பது பேரும் கேங் ஸ்டார்ஸா ஸ்கூலைக் கலக்கினோம். பதினொன்றாம் வகுப்பில் வெவ்வேறு பிரிவுகளில் சேர்ந்தாலும், அலப்பறைக்குக் குறைச்சல் இல்லை. ஸ்கூலுக்குப் போறதே ஃப்ரெண்ட்ஸைப் பார்க்கத்தான்னு இருந்த காலம் அது. லீவு நாள்களிலும் கால் வலிக்க சைக்கிள் மிதிச்சு ஒருத்தர் வீட்டுக்கு ஒருத்தர் போய் கதை பேசிக் கிடப்போம். கல்லூரி, திருமணம்னு பிரிஞ்சுப்போனதுக்கு அப்புறமும் தொடர்பில் இருக்கோம். புதுப்புடவை எடுக்கிறதிலிருந்து பிள்ளைகளை ஸ்கூல்ல சேர்க்கிறது வரை, ஒருத்தருக்கு ஒருத்தர் கேட்டுதான் எல்லாம் செய்வோம். இப்போ எங்க எல்லாரோட பிள்ளைங்களும் சேர்ந்து அடுத்த தலைமுறை நட்பை ஆரம்பிச்சிட்டாங்க’’ என்று குளோரி மகிழ, தொடர்ந்தார் மியூரியல். 

‘`தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளரா பணியாற்றும் குளோரி பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட வர்களுக்கு நிறைய உதவிகள் செய்துட்டு இருக்கா. எங்க எட்டு பேர்ல யாருக்கு என்ன மனக்குறைன்னாலும் தஞ்சமடையுறது அவகிட்டதான். வருஷத்துல ஒருமுறை எல்லோரும் சந்திச்சு ரணகளம் செய்வோம். யாராச்சும் ஒருத்தி போன் பண்ணாம இருந்தா, ‘ஏதாச்சும் பிரச்னையா’னு எல்லோரும் பதறி, சட்டுன்னு நேர்ல போய் என்னன்னு பார்த்துடுவோம். ஆனா, இப்போ பெரிய சண்டை வரப்போகுது எங்களுக்குள்ள. ‘அடிப் பாவிங்களா... எங்களை விட்டுட்டு நீங்க மட்டும் அவள் விகடன்ல வந்துட்டீங்களே!’னு கொட்டப் போறாங்க எல்லோரும். என்ன பண்றது... எல்லோரும் தூரம் தொலைவுனு போயிட்டீங்க. போட்டோவுக்கு நாங்க   நாலு பேர் மட்டும்தானே இருக்கோம்!” என்கிறார் மியூரியல் பரவசத்துடன்.

பள்ளி நட்பின் ப்ரியமும் உரிமையும் ரொம்பவே அதிகம்தான்!