Published:Updated:

என் நண்பர் என் அன்பர் - உயிரின் உயிரே!

என் நண்பர் என் அன்பர் - உயிரின் உயிரே!
பிரீமியம் ஸ்டோரி
News
என் நண்பர் என் அன்பர் - உயிரின் உயிரே!

ஆர்.சரண் - படம்: கே.ராஜசேகரன்

றவின் உன்னதத்தை அணையா ஜோதியாய் சூரியனைப்போல பிரகாசமாய்  புயலும் மழையிலும் காத்து நிற்க வைப்பது அன்பெனும் ஒற்றை மந்திர வார்த்தைதான். ஆம்... சூர்யா - ஜோதிகாவின் காதலும் அப்படிப் பட்டதுதான். நண்பர்களாக இருந்த காலம்தொட்டு இன்று இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக, சக்சஸ்ஃபுல் நட்சத்திரத் தம்பதியாக, இல்லறத்தில் ரோல் மாடல் தம்பதியாக அவர்களை வழிநடத்துவதும் அன்பெனும் ஒற்றைச் சொல்தான்.   

என் நண்பர் என் அன்பர் - உயிரின் உயிரே!

இதோ சூர்யா - ஜோதிகா தம்பதியரின் லவ் லைஃப்... ஒரு சின்ன ரீவைண்ட்...

1999-ம் ஆண்டு... சரவணனாக இருந்து விபத்துபோல நடிக்கவந்து சூர்யாவாகத் தத்தளித்துக்கொண்டிருந்த சமயம். 5-வது படமாக வந்ததுதான் ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’. இந்தியில் சில படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாமல் சென்னையில் லேண்ட் ஆகியிருந்தார் ஜோ. அது ஒரு டிசம்பர் மாதம். சென்னை ஃபிலிம் சிட்டியில் டெஸ்ட் ஷூட். இயக்குநர் வஸந்த்தான் சூர்யாவிடம், ``சரவணா, இதுதான் ஜோ. உன்னோட ஹீரோயின். நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிக்கங்க ஃபர்ஸ்ட். ஏன்னா இது ரொமான்டிக் மூவி!’’ என அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். ஜோவின் முதல் பார்வையிலும் புன்னகையிலும் சூர்யா வசீகரிக்கப்பட்டிருக்கிறார். ‘மணிரத்னம் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமான ஆள்’ என்ற தயக்கம் ஜோவுக்கு. ‘பாலிவுட்ல இருந்து வந்த பொண்ணு’ என்ற பிரமிப்பு சூர்யாவுக்கு. முதல் டெஸ்ட் ஷூட்டில் சூர்யா தயங்கி நிற்க `நாம இப்போ ஃப்ரெண்ட்ஸ்!’ எனக் கைகுலுக்கி ஜோவியலாகப் பேசியிருக்கிறார் ஜோ.

சூர்யாவே ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படப்பிடிப்பு நாள்கள் குறித்துப் பின்னாளில் மீடியாவில் நினைவுகூர்ந்திருக்கிறார்.

``ஷூட்டிங் ஸ்பாட்ல காதல் தவிப்பைக் காட்டுறதுக்கும் கோபத்துக்கும் ஒரேவிதமான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்குற அளவுக்குத்தான் அப்போ என் சினிமா நாலேஜ் இருந்தது. ஆனா, ஜோ கண்களாலேயே நடிக்கிற ஆளு. `என்ன பொண்ணுடா இது!’னு நடிப்பைப் பார்த்து வியந்திருக்கேன். வியந்திருக்கேன்னு சொல்றதைவிட வியர்த்திருக்கேன்னு சொல்லலாம். அதேபோல ஜோ என்னைப் பாராட்டும்போதெல்லாம் என்னோட கான்ஃபிடன்ஸ் லெவல் அவ்ளோ ஏறும். அதுக்குப்பிறகு ஒருவரோட வளர்ச்சியில இன்னொருவர் அக்கறை எடுத்துக்க ஆரம்பிச்சோம். சினிமா சம்பந்தமா பேசுவோம். எங்களைப் பத்தி வந்த கிசுகிசுக்களைப் பேசி காமெடி பண்ணிக்குவோம். செப்டம்பர் 11, 2006 கல்யாணம் ஆன நாள்ல இருந்து இன்றுவரை நாங்க நார்மலான தம்பதியா சந்தோஷமாதான் இருக்கோம். கல்யாணம் ஆனதும் நாங்க பேசின முதல் விஷயம் ‘எங்களுக்குள்ள எப்போதாவது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்தா பேசாமல் இருக்கணும். வார்த்தையால காயப்படுத்திக்கூடாதுங்கிறதுதான். அப்படி ஒரு சின்ன சண்டையில 15 நாள்கள் பேசாம இருந்திருக்கோம். ஆனால், ரெண்டு பேருமே அந்தக் காலகட்டத்துல ரொம்ப மிஸ் பண்ணினோம். பதறிட்டுத் திரும்பப் பேச ஆரம்பிச்சுட்டோம். அதுக்குப்பிறகு இப்பவரை சண்டைகளே வர்றதில்லை. இந்த ஃபார்முலா எல்லோருக்கும் பொருந்தும். 

உண்மையிலேயே ஜோவைத் தினமும் லவ் பண்ணிட்டு்தான் இருக்கேன். இப்பவும் நேரம் கிடைச்சா லவ் லெட்டர் எழுதி அவங்க கண்பார்வையில படுற மாதிரி வெச்சுட்டு வந்துடுவேன். அன்பால நெகிழ்ந்துடுவாங்க. ரொம்ப லவ்வபிள் பொண்ணுதான் ஜோ'' என்று சிலிர்க்கிறார்.

2007-ல் தியாவும் 2010-ல் தேவ்வும் பிறந்தபோது சூர்யா பிஸியான நடிகராக வலம்வந்து கொண்டிருந்தார். ஆனாலும் ஜோ, கணவரின் கேரியரைப் புரிந்துகொண்டு ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் ஜோதிகாவை சினிமா உலகுக்கு மீண்டும் அழைத்து வந்ததே சூர்யாதான்.

‘36 வயதினிலே’ படத்தின் வெற்றி விழாவில், ``சூர்யா என் நண்பராக இருந்ததால்தான் நல்ல காதலராக, கணவராக இருக்கிறார். உண்மையில் சூர்யா ஒரு நல்ல மனிதர். அப்படிப்பட்ட மனிதர் ஒரு நண்பராக, ஒரு கணவராகக் கிடைக்க நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’’ என்று சொல்லிக் கண்கலங்க, சூர்யா இரண்டு கைகளையும் மேலே தூக்கி ஆமோதிப்பதுபோலக் குனிந்து லவ் சிம்பல் காட்டினார்.

‘மகளிர் மட்டும்’, `நாச்சியார்’ என அடுத்த இன்னிங்ஸில் ஜோ பின்னி எடுக்க, சூர்யா ஜோவுக்குப் பக்கபலமாக இருக்கிறார். ‘மகளிர் மட்டும்’ படத்துக்காகத் தன் காதல் மனைவிக்கு புல்லட் கற்றுக்கொடுத்தது சூர்யாதான். ‘நாச்சியார்’ ஷூட்டிங்கில் பிஸியாக ஜோ இருக்கும் இந்நாள்களில் குழந்தைகளோடு கூடுதல் நேரம் ஒதுக்கிக் குடும்பத்தை பேலன்ஸ் செய்கிறார் சூர்யா.

நிச்சயம் சூர்யா - ஜோவுடையது, Never Ending Love Story தான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz