Published:Updated:

பேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்!

பேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்!

ப்ரீத்தா ஹரி - சுமா ஹாரிஸ் நட்புக் கூட்டணிஇது ரொம்ப ஸ்பெஷல்ஆர்.வைதேகி

யக்குநருக்கும் இசையமைப்பாளருக்குமான நட்பு என்பது இயல்பானது. வெற்றிக் கூட்டணி என்கிற பெயரில் அது தொடர்வதில் ஆச்சர்யமில்லை. எந்த வெற்றியையும் கணக்குப் பண்ணாமல், எந்த இலக்கையும் குறிவைக்காமல் தொடர்கிற ஒரு நட்பு ஆச்சர்யமளிக்கிறது. அது, திருமதிகளின் நட்பு.  

பேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்!

இயக்குநர் ஹரியும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் ஃப்ரெண்ட்ஸ் என்றால், ஹரியின் மனைவி ப்ரீத்தாவும், ஹாரிஸின் மனைவி சுமாவும் `பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்'.

``எங்க ஃப்ரெண்ட்ஷிப்புக்கு 15 வயசாகுது. ஆனா, அதைப் பத்திப் பேச இந்த ஒரு ஜென்மம் போதாது. வாழ்க்கையில சில அழகான உறவுகள், தானா அமையும். அதுக்காக நாம எதுவும் மெனக்கிடத் தேவையிருக்காது. அப்படியொரு ஃப்ரெண்ட்ஷிப் எங்க ரெண்டு பேருக்குமானது...'' - கவிதையாகப் பேசுகிறார் சுமா.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்!

``என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் பெங்களூருல இருக்காங்க. கல்யாணமாகி சென்னை வந்தபிறகு என்னுடைய முதல் ஃப்ரெண்டுன்னா ப்ரீத்தாதான். ப்ரீத்தாவோட கணவரும் என் கணவரும் `சாமி' படத்துல சேர்ந்து வொர்க் பண்ணிட்டிருந்தாங்க. அந்த டைம்லதான் ப்ரீத்தாவுக்கும் ஹரிக்கும் கல்யாணம் நடந்தது. அந்தக் கல்யாணத்துலதான் ப்ரீத்தாவை முதன்முறையா சந்திச்சேன். வாழ்த்திட்டு வந்ததோடு சரி.

`சாமி' பட மியூசிக் கம்போஸிங்குக்காக நானும் என் கணவரும் மாலத்தீவு போயிருந்தோம். அங்கே ப்ரீத்தாவும் ஹரியும் வந்திருந்தாங்க. அவங்க புதுசா கல்யாணமான ஜோடி. நான் என் கைக்குழந்தையோடு போயிருந்தேன். அதனால, அப்பவும் ரெண்டு பேருக்கும் அதிகம் பேசவோ, பழகவோ முடியலை. எங்க நட்பு எந்த நிமிஷத்துல ஸ்ட்ராங் ஆச்சுனு என்னால சொல்ல முடியலை. எப்பவாவது பேசிக்கிட்டிருந்த நாங்க எப்போதுமே பேசிக்கிட்டிருக்கிற அளவுக்கு நெருங்கியிருக்கோம்னா அதுக்குக் காரணம் அதீதமான அன்பு மட்டும்தான்.   

பேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்!

ப்ரீத்தா என்னைவிட வயசுல சின்னவங்க. அவங்களுக்குக் குழந்தை பிறந்திருந்த டைம். அந்தச் சின்ன வயசுலயும் குழந்தையை அவங்க தாங்கின விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. பெரிய ஸ்டார் ஃபேமிலியிலேருந்து வந்தவங்க என்கிற கர்வமோ, பந்தாவோ இருக்காது. பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி சிம்பிளா பழகுவாங்க. அந்தக் குணம்தான் என்னை அவங்கக்கிட்ட நெருங்க வெச்சதுனு சொல்லலாம்.

செலிப்ரிட்டி மனைவிகள்... அவங்களோட லைஃப் ஸ்டைலே வேற மாதிரி இருக்கும்... பேசற விஷயங்களும் அந்த லெவல்லதான் இருக்கும்னு நிறைய பேர் நினைக்கலாம். ஆனா, நாங்க அப்படியில்லை. எங்க ரெண்டு பேருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை உண்டு. ரெண்டு பேருமே லவ் மேரேஜ் பண்ணினவங்க. ரெண்டு பேருக்கும் குடும்பமும் குழந்தைகளும்தான் முக்கியம். ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்துல அம்மாவைப் பறிகொடுத்தோம். அவங்களுக்கு நானும், எனக்கு அவங்களும்தான் மனசளவுல பெரிய ஆறுதலா இருந்தோம். குழந்தைகளை ஸ்கூல்ல கொண்டுவிடறது, கூட்டிட்டு வர்றதுனு, வெளியில போறதுனு எல்லா விஷயங்களையும் ஒண்ணாவே செய்து பழகினோம். பேருக்குத்தான் நாங்க ரெண்டு பேரும் அவங்கவங்க வீடுகள்ல இருப்போம். மற்றபடி மனசளவுல ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸ்...''  - சுமாவின் வர்ணனையில் ஹாரிஸ் இசையில் `என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்...' பாடல் மனதுக்குள் ஒலிக்கிறது நமக்கு.  

பேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்!

திருமணத்துக்குப் பிறகு நட்பைத் தொடர்வது ஆண்களைப்போல பெண்களுக்கு சாத்தியமாவதில்லை. இவர்களுக்கோ திருமணத்துக்குப் பிறகுதான் நட்பே துளிர்த்திருக்கிறது.

``திருமணம் என்ற விஷயம் நட்புக்குத் தடையா அமையறதில்லை. எங்க நட்பு ஸ்ட்ராங்கா இருக்கக் காரணம் நாங்க ரெண்டு பேருமே ஒருநாள்கூட குடும்பத்தை விட்டுக் கொடுத்ததில்லை. எங்களுக்குள்ள எந்த விஷயத்துக்கும் ஈகோ பார்க்க மாட்டோம். நாங்க ரெண்டு பேருமே நாங்களா இருக்க அனுமதிக்கிறதுதான் எங்க நட்பின் சிறப்பு. எங்களோட பேச்சு பெரும்பாலும் குழந்தைகளைப் பத்தி ஆரம்பிச்சு, குழந்தைகளைப் பத்திதான் முடியும். அதைத் தாண்டி ஏதாவது விஷயங்கள்ல கருத்து வேறுபாடு வந்தாலும், அவங்கவங்க கருத்துக்கு ரெண்டு பேருமே மதிப்பு கொடுத்துப் புரிஞ்சுப்போம்...'' - சீக்ரெட் சொல்கிற சுமா, சென்ட்டிமென்ட்ஸும் பகிர்கிறார்...

``ஒருநாளைக்கு எத்தனை முறை பேசுவோம்னு கேட்டா சொல்லத் தெரியாது. எப்பல்லாம் தோணுதோ பேசுவோம். தினமும் சாயந்திரம் ரெண்டு பேரும் ஒண்ணா வாக்கிங் போவோம். அதை முடிச்சுட்டு சரவண பவன்ல காபி குடிப்போம். இத்தனை வருஷங்கள்ல அந்த டைம் மிஸ் ஆனதே இல்லை. பிள்ளைங்களோட ஒண்ணா வெளியில போவோம். பொதுவான ஃபங்ஷன்ஸுக்கு ஒண்ணா போவோம். எங்க வீட்ல ப்ரீத்தா இல்லாமலோ, அவங்க வீட்ல நான் இல்லாமலோ எந்த விசேஷமும் நடக்காது. நிறைய நிறைய டிராவல் பண்ணுவோம்.  

பேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்!

நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டாலே ரகளைதான். சோகங்களைப் பேசி, கண்ணீர் கதைகள் சொல்லியழுது, வருத்தத்துல மூழ்கற கதையெல்லாம் எங்கக்கிட்ட நடக்காது. பேசிப் பேசி ஓய்வோம்; சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம். நான் பியூர் வெஜிடேரியன். அதனால எங்கே வெளியில போனாலும் ப்ரீத்தா தேடறது எனக்கான வெஜிடேரியன் சாப்பாடாத்தான் இருக்கும். அவங்க வீட்டுக்குப் போகும்போது எனக்காக என் ஃபேவரைட் மஷ்ரூம் பிரியாணியும் பூண்டுத் துவையலும் செய்து வெச்சிருப்பாங்க. அந்த அக்கறை ரொம்ப ஸ்பெஷலான ஃபீலிங்கைத் தரும்.

லைஃப்ல சாப்பாடு, தூக்கம் மாதிரி நல்ல நட்பும் அத்தியாவசியமான ஒன்று. நல்ல நட்பைப் போல ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேற இருக்காது. நல்ல நட்புங்கிறது ஒருத்தரை ஜட்ஜ் பண்ணாது; அப்படியே ஏத்துக்கும். அது எந்த அந்தஸ்தும் பார்க்காது. ஃப்ரெண்ட்ஷிப்தான் இந்த உலகத்தின் ஆகச் சிறந்த உறவு. எல்லா உறவுகளிலும் கண்டிஷன்ஸ் இருக்கும். எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனா, நட்பு மட்டும்தான் விதிவிலக்கு...'' - நட்பைக் காக்கும் வழிகள் சொல்பவருக்கு இந்த வருட ஃப்ரெண்ட்ஷிப் தினம் ரொம்பவே ஸ்பெஷல் என்கிறார். ஏனாம்?

``பழக ஆரம்பிச்ச புதுசுல கார்டு கொடுக்கிற மாதிரியான விஷயங்களை எல்லாம் நாங்களும் பண்ணியிருக்கோம். ஆனா, ஒருகட்டத்துல இது அதையெல்லாம் தாண்டின நட்புங்கிறதை ஃபீல் பண்ணினோம். எல்லா நாளும் மீட் பண்ணிக்கிட்டாலும், ஃப்ரெண்ட்ஷிப் டே மாதிரியான ஸ்பெஷல் தினங்கள்ல ஏதோ பல நாள் சந்திக்காதது மாதிரி ஸ்பெஷலா மீட் பண்ணுவோம். நானும் ப்ரீத்தாவும் உடலும் உயிரும்போலனு எங்களைத் தெரிஞ்ச எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதைப் பத்தி நாங்க ஒருநாள்கூட டிஸ்கஸ் பண்ணினதில்லை. இந்த வருஷ ஃப்ரெண்ட்ஷிப் டேக்கு இந்தப் பேட்டிதான் ப்ரீத்தாவுக்காக நான் வெச்சிருக்கிற சர்ப்ரைஸ். ப்ரீத்தாவோட நட்பைப் பத்திச் சொல்லாதது இன்னும் நிறைய இருக்கு. ஆனா, சொல்றதுக்கு என்கிட்ட வார்த்தைகள்தான் இல்லை...''

- வார்த்தைகள் இல்லாவிட்டால் என்ன? காலத்துக்கும் நட்பின் அருமை பேச வாழ்க்கை இருக்கிறதே!