Published:Updated:

கட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க! - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்

கட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க! - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க! - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்

ஸ்டார் ஃபேமிலி கு.ஆனந்தராஜ், படங்கள் உதவி: ஜி.ஆர்.தாஸ் கோபாலகிருஷ்ணன்

“அப்பா, அம்மா, நான், தங்கை கீர்த்தி சுரேஷ்... நாலு பேருக்குமே சினிமாதான் தொழில். அம்மாவும் அப்பாவும் சினிமா தயாரிப்புடன் ஃபிலிம் அகாடமி வேலைகளையும் கவனிக்க,  நான் அவங்களுக்கு உதவியா அகாடமியைப் பார்த்துகிட்டே, அசிஸ்டென்ட் டைரக்‌டராவும் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். தங்கச்சி ஹீரோயினா கலக்கிட்டு இருக்கா. நாங்க சூப்பரான ஸ்டார் ஃபேமிலிதானே?!”

புன்னகையோடு பேசத் தொடங்குகிறார் ரேவதி சுரேஷ். மலையாள நட்சத்திரத் தம்பதியான சுரேஷ் குமார் - மேனகாவின் மூத்த மகள். நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா. இயக்குநர் பிரியதர்ஷனின் உதவி இயக்குநர் என்பது ரேவதியின் இப்போதைய ஸ்டேட்டஸ்.

கட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க! - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்

“அப்பா சுரேஷ்குமார், பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர். அம்மா மேனகா, 80-கள்ல பல மொழிப் படங்கள்ல ஹீரோயினா கலக்கினவங்க. அதனால, எங்க வீட்டுக்கு எப்பவும் சினிமா பிரபலங்கள் வந்து போறது, சினிமா பத்தியே அடிக்கடி பேசறதுன்னு, நானும் சினிமாவோடதான் வளர்ந்தேன். மூணாவது படிக்கிறப்போ, ‘இந்த சீன் இப்படித்தானே வரணும், இந்த இடத்துல இப்படி ட்விஸ்ட் இருந்தா நல்லாயிருக்குமே’னு அம்மாகிட்ட சொல்ற அளவுக்கு, நான் வளர வளர ஒரு க்ரியேட்டரும் எனக்குள்ள வளர்ந்துட்டே வந்தாள். நான் எட்டாவது படிக்கிற வரை சென்னையில்தான் இருந்தோம். அப்புறம் கேரளாவுக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம்.

ப்ளஸ் டூ முடிச்சதும், ‘சினிமா டைரக்டர் ஆகணும்னு ஆசைப்படுறேன். அதனால விஸ்காம் படிக்கிறேன்’னு பெற்றோர்கிட்ட சொன்னதும், ‘தெரிஞ்சதுதானே!’னு ரியாக்‌ஷன் கொடுத்து வாழ்த்தினாங்க. அமெரிக்கா, சிகாகோவில் விஸ்காம் ஃபிலிம் அண்ட் அனிமேஷன் கோர்ஸ்ல சேர்ந்தேன். இன்டர்ன்ஷிப்புக்காக இந்தியா வந்து, புகழ்பெற்ற டைரக்டர் பிரியதர்ஷன் அங்கிள்கிட்ட ‘பில்லு பார்பர்’  இந்திப் படத்துல அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்ணினேன். டிகிரி முடிச்சதும், ஃப்ளோரிடா நகரத்துல ஒரு வருஷம் விஷுவல் எஃபெக்ட் அண்ட் அனிமேஷன் டிப்ளோமா கோர்ஸும் படிச்சேன். ஆறு வருஷ அமெரிக்கா படிப்புக்குப் பிறகு இந்தியா வந்தேன். மும்பை, ‘ரெட் சில்லீஸ்’ங்கிற நிறுவனத்துடன் சேர்ந்து விஷுவல் எஃபெக்ட் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். அப்படி கிராஃபிக்ஸ் வேலைகள் செய்யும் விஷுவல் எஃபெக்ட் கம்போசிட்டரா ‘கிரிஷ் 3’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘ரங் ரேஸ்’ படங்கள்ல வொர்க் பண்ணினேன்.’’ - தன் இலக்கு நோக்கிய பயணத்தைத் தடையில்லாமல் விளக்கிச்சென்றார் ரேவதி சுரேஷ்.

``ஆறு வயசுல நான் பத்மா சுப்ரமணியம் அக்காகிட்ட டான்ஸ் கத்துக்கச் சேர்ந்து, 13 வயசுல அரங்கேற்றம் செய்தேன். தொடர்ந்து பல வருஷங்கள் டான்ஸ் கத்துகிட்டும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மேடை நிகழ்ச்சிகள் செய்துட்டும் இருந்தேன். ஒருகட்டத்துல என் கவனமெல்லாம் டைரக்‌ஷன் ஃபீல்டை நோக்கியே நகர, மும்பையிலிருந்து கேரளாவுக்குத் திரும்பி, டைரக்‌ஷன் துறையில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். 2014... அந்த நேரத்துல அப்பா ஃபிலிம் அகாடமி தொடங்குற வேலையில தீவிரமா கவனம் செலுத்திட்டு இருந்தாரு” என்பவர், உதவி இயக்குநரான கதையைச் சொல்கிறார்.

“ `நமக்கு நிறைய நல்லது செய்த சினிமாவுக்கு நாம ஏதாச்சும் பயனுள்ள விஷயங்களைச் செய்யணும்’னு எங்கப்பாவும் அம்மாவும்  நிறைய புதுமுகங்களைத் திரையில் அறிமுகப்படுத்தும் ஆசையோட ‘ரேவதி கலா மந்திர்’ ஃபிலிம் அகாடமியை ஆரம்பிச்சாங்க. இதில் அப்பா சேர்மன், நான் வைஸ்-சேர்மன். இங்க சினிமாவுல பணிபுரியத் தேவையான ஏ டு இசட் பயிற்சிகளை, அந்தந்தத் துறை நிபுணர்களைக் கொண்டு கொடுக்கிறோம். இப்போ பல மாநிலங்களைச் சேர்ந்தவங்க நிறையப் பேர் எங்க அகாடமியில படிக்கிறாங்க. சிலபஸ் செட் பண்றது, அட்மிஷன் மற்றும் கெஸ்ட் லெக்சர்களை வரவழைக்கிற பொறுப்பு, விஷுவல் எஃபெக்ட் வகுப்புகள் எடுக்கிறதுனு இங்க எனக்கு நிறைய வேலைகள்’’ என்பவருக்கு 2016-ல் திருமணம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க! - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்

``ஆனாலும், என் டைரக்‌ஷன் கனவு அப்படியேதான் இருந்தது. இந்த முறையும், ‘கம் ஆன் பேபி’னு கைகொடுத்தார் பிரியதர்ஷன் அங்கிள். ‘பூச்சக்கொரு மூக்குத்தி’ மலையாளப் படத்தின் மூலமாக, என் அப்பாதான் பிரியன் அங்கிளை (பிரியதர்ஷன்) டைரக்டரா அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அப்பாவின் பல படங்கள்ல டைரக்டரா வொர்க் பண்ணி, அவர் நெருங்கிய குடும்ப நண்பரானார். கீர்த்தி சுரேஷை ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக்கினதும் அங்கிள்தான். அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்து, ‘ஒப்பம்’கிற மலையாளப் படத்துல வொர்க் பண்ணினேன். அது போன வருஷம் ரிலீஸ் ஆச்சு. அடுத்து இப்போ அங்கிள், தமிழ்ல உதயநிதி ஸ்டாலினை ஹீரோவா வெச்சு இயக்கிட்டு இருக்கிற படத்துலயும் அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். சென்டிமென்ட், காமெடி, டைமிங் சென்ஸ், கதை சொல்ற விதம், ஜூனியர்ஸோட கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதுனு, பிரியதர்ஷன் அங்கிள்கிட்ட இருந்து நான் கத்துக்கிற விஷயங்கள் நிறைய. அந்த சூப்பர் சீனியர் முதன்முதலா ஒரு பொண்ணுக்கு அசிஸ்டென்ட் டைரக்டர் வாய்ப்பு கொடுத்திருக்கிறது எனக்குத்தான். அதனால அந்தப் பொறுப்பை உணர்ந்து வேலை பார்த்திட்டிருக்கேன். சீக்கிரமே தனியா படம் பண்ணணும்’’ என்பவர், பரதநாட்டியத்தில் மாஸ்டர்ஸ் இன் ஃபைன் ஆர்ட்ஸ் முதுகலைப் படிப்பையும் முடித்திருக்கிறார். 

தங்கை கீர்த்தி சுரேஷைப் பற்றிக் கேட்டதும், “கீர்த்தி ஹீரோயினா அறிமுகமான ‘கீதாஞ்சலி’ படத்துல நடிச்சப்போ, ‘தயக்கமா இருக்கு, நீயும் வா’னு முதல் மூணு நாள் என்னையும் ஷூட்டிங்குக்கு இழுத்துட்டுப் போயிட்டா. ஆனா, இப்போ அவ எங்கிட்டயே பேச நேரமில்லாத அளவுக்கு பிஸி ஹீரோயினா கிட்டா” எனச் செல்லக் கோபமும், நிறைய பெருமையுமாகத் தொடர்கிறார்.

கட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க! - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்

“தமிழ், தெலுங்குல பிஸியா நடிச்சுகிட்டு இருக்கிறதால, கீர்த்திகிட்ட எப்பயாச்சும்தான் பேச முடியுது. அதுவும் நான் போன் பண்ணினா பெரும்பாலும் எடுக்க மாட்டா. இல்லைன்னா, ‘நான் பிஸியா இருக்கேன்டீ, அப்புறமா பேசலாம்டீ...’னு கொஞ்சலா சொல்லுவா. சின்ன வயசுல நாங்க ரெண்டு பேரும் கட்டி உருண்டு சண்டை போட்டுக்குவோம். இப்போ, வேலை காரணமா பிரிஞ்சிருக்கும்போது ஒருத்தரை ஒருத்தர் ரொம்பவே மிஸ் பண்றோம். அவ குழந்தை நட்சத்திரமா நடிக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து அவ நடிப்புக்கு நான் ரெவ்யூ கொடுப்பேன். ‘நீயும் நடிடீ... நான் உனக்கு மார்க் போடுறேன்’னு சிணுங்குவா. ‘காஷ்மீரம்’னு ஒரு மலையாளப் படத்துல மட்டும் நான் சைல்டு ஆர்ட்டிஸ்டா நடிச்சேன். தொடர்ந்து எனக்கு நடிப்பில் ஆர்வம் வரலை.

இப்போ எங்க வீட்டுல இருந்து ரெண்டு புது ஆர்ட்டிஸ்ட்ஸ் வந்திருக்காங்க. அப்பாவைப் படங்கள்ல நாங்க நடிக்கச் சொல்லும்போதெல்லாம் மறுத்துட்டே இருந்தவர், இப்போ உருவாகிட்டு இருக்கிற ‘ராமலீலா’ மலையாளப் படத்துல லீட் ரோல்ல நடிச்சிட்டிருக்கார். அப்புறம், 79 வயசாகும் எங்க பாட்டி சரோஜா, இப்போ ஒரு தமிழ்ப் படத்துல சாருஹாசன் சாருக்கு ஜோடியா நடிச்சுட்டு இருக்காங்க’’ என்றவர்,
``எனக்கு ஓர் ஆசை... அப்பா தயாரிக்க, நான் இயக்க, தங்கச்சி ஹீரோயினா, அம்மா தங்கச்சிக்கு அம்மாவா நடிக்கிற ஒரு படம் அமையணும். ஃபேமிலி போட்டோ மாதிரி, இது ஃபேமிலி ஃபிலிம். சூப்பரா இருக்கும்ல!”

தன் கேமரா கனவைக் கண்கள் விரியச் சொல்கிறார் ரேவதி சுரேஷ்!