எப்போதாவது புத்தகம் வாசிக்கிறவள் நான். அப்படி வாசிக்கிற புத்தகங்களின் ஆரம்பப் பக்கங்கள் என்னை ஈர்க்காவிட்டால் தொடர்ந்து படிக்க மாட்டேன்.

ஒரு ஷூட்டிங் இடைவேளையில் பொழுதுபோகாமல் ரோண்டா பைர்ன் (Rhonda Byrne) எழுதிய ‘தி சீக்ரெட்’ புத்தகத்தைப் புரட்டினேன். வாழ்க்கையோ, நபர்களோ, வேறெந்த விஷயங்களோ நமக்குக் கற்றுத்தராத ஒன்றை வெறும் புத்தகம் கற்றுத் தந்துவிடுமா? ‘தி சீக்ரெட்’ புத்தகம் எனக்குக் கற்றுத் தந்தது.

வாழ்க்கையில் எல்லோரும் விரும்புவது அமைதியை... மனநிறைவை... சந்தோஷத்தை.

இவற்றைத் தேடிய ஓட்டத்தில்தான் எத்தனை எத்தனை சர்ச்சைகள்... சிக்கல்கள்... சண்டைகள்.

இந்தத் தேடல்களுக்கு விடை சொல்கிற புத்தகம்தான் ‘தி சீக்ரெட்’.

மனசுதான் எல்லாவற்றுக்கும் காரணம் என நிறைய பேர் சொல்லிக் கேட்டிருப்போம். மேலோட்டமாகக் கேட்கும்போது அதெப்படி எனத் தோன்றலாம். வாழ்க்கையின் பல தருணங்களில் எனக்குப் பிரச்னைகள் வந்தபோது இதே அட்வைஸைக் கேட்டிருக்கிறேன். இந்தப் புத்தகத்தைப் படித்தபிறகுதான் எனக்கே அந்த நம்பிக்கை வந்தது.

இந்தப் புத்தகத்தின் மையக்கரு பாசிட்டிவிட்டி. உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் பாசிட்டிவாக இருக்கப் பழகிவிட்டீர்கள் என்றால், வாழ்க்கையை வெற்றிகொள்ளும் வித்தை உங்களுக்கு சாத்தியம் என்பதுதான் ‘தி சீக்ரெட்’ சொல்லும் சீக்ரெட். அதாவது நீங்கள் விரும்பும் விஷயத்தை அடைய உங்கள் மனதை நீங்களே பழக்கும் வித்தை இது. நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ, அதுவே உங்களுக்குத் திரும்பக் கிடைக்கிறது என்கிற தத்துவம் சிம்பிளாக இருந்தாலும் எத்தனை பெரிய உண்மையை உள்ளடக்கியது? யோசித்துப் பார்த்தால் அன்போ, காதலோ, கோபமோ, வன்முறையோ... நாம் எதை அடுத்தவருக்குக் கொடுக்கிறோமோ, அதுதானே நமக்கும் திரும்ப வருகிறது? பாசிட்டிவ் எனர்ஜியும் அப்படித்தான்.

நமக்கு நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் நம் மனதுடன் தொடர்புண்டு. அவற்றைப் பாசிட்டிவாக மாற்றுவதா, நெகட்டிவாக எதிர்கொள்வதா என்பதையும் மனதுதான் முடிவு செய்யும். பாசிட்டிவாக நடப்பதற்கேற்ப மனதை ட்யூன் செய்ய வேண்டியது நம் வேலை. இந்த டெக்னிக்கைப் புத்தகத்தின் ஆசிரியர் ‘லா ஆஃப் அட்ராக்ஷன்’ என்கிறார்.

`உங்கள் எண்ணங்களே செயல் களாகின்றன. இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நபர் நீங்கள்தான். உங்களால் மட்டும்தான் உங்களுக்கு வேண்டியதை நிகழ்த்திக்கொள்ளவும் விரும்பியதை அடையவும் முடியும். அப்படி நடப்பதற்காக உங்களைச் சுற்றியுள்ள உலகையும் உங்கள் விதியையும் நீங்கள் மட்டுமே ட்யூன் செய்ய முடியும். இதற்குத் தேவை மூன்று விஷயங்கள்...

* உங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்து அதையே வேண்டிக் கேளுங்கள்.

* நீங்கள் கேட்ட விஷயம் உங்களைத் தேடி வந்துகொண்டிருப்பதாக நம்புங்கள்.

* அது உங்களை வந்து சேரும்போது வரவேற்கத் தயாராக இருங்கள்.

இந்த மூன்று மட்டுமே உங்கள் மனதில் இருக்க வேண்டும். நாம் நினைப் பது நடக்குமா என்கிற சின்ன சந்தேகம்கூட உங்களைச் சுற்றி நெகட்டிவ் அலையைப் பரவவிடும். உங்கள் மனதின் ஆற்றல் அவ்வளவு சக்தி
வாய்ந்தது. அதைச் சந்தேகிக்காதீர்கள்’ என்கிறார் ஆசிரியர்.

முன்பெல்லாம் சின்னச் சின்ன விஷயங் களில்கூட நம்பிக்கை இழந்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு என் பார்வை மாறியிருக் கிறது. இந்த வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கிறது என்கிற நம்பிக்கையும் அந்த வாழ்க்கையில் நான் விரும்பும் இடத்தில் என்னை வைத்துப் பார்க்கும் மந்திரச்சக்தி என்னிடமே இருக்கிறது என்கிற எண்ணமுமே என்னை இயக்குகின்றன.

எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும். அதுதான் ‘தி சீக்ரெட்’!