Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - யாஞ்சி யாஞ்சி

அனுஷா... ஆதிரா... இனியா! - யாஞ்சி யாஞ்சி
பிரீமியம் ஸ்டோரி
News
அனுஷா... ஆதிரா... இனியா! - யாஞ்சி யாஞ்சி

டிஜிட்டல் கச்சேரி

``நெஞ்சாத்தியே... நெஞ்சாத்தியே... நீதானடி என் வாழ்க்கையே... நீ என்பதே நான் என்கிற நீயே!''

``என்னவோ செய்கிறாய்... நீ  என் வாழ்வின் எல்லைகள் போலாகிறாய்!''

``வாழ்க்கை போகும் தூரம் நீயும் நானும் போக வேணும்... எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது!''

``யாஞ்சி... யாஞ்சி... என் நெஞ்சில் வந்து வந்து நிக்குறே!''

``என்ன அனு... ஒரே பாட்டை ரிப்பீட் மோட்ல பாடிட்டு இருக்க...''

``வாவ் மேடி!''

``ஆமாம். தாடி மேடி சூப்பர்ல..?''

``அய்யே... அசடு வழியுது புள்ள!''

``சரி, பாட்டை விடுங்க... `விக்ரம் வேதா' படம் எப்படி இருக்கு?''

அனுஷா... ஆதிரா... இனியா! - யாஞ்சி யாஞ்சி

`` `ஒரு கதை சொல்லட்டுமா சார்’னு விஜய் சேதுபதி படத்துல டயலாக் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் தியேட்டர் அதிருது. மனுஷன் என்னம்மா நடிச்சிருக்கார்!''

``மாதவன் - விஜய் சேதுபதி ரெண்டு பேருமே மாஸ். டைரக்‌ஷன்ல புஷ்கர் - காயத்ரி ஜோடி பின்னி எடுத்திருக்காங்க.''

``ஆமா... ஆக்‌ஷன் மூவீஸ் நிறைய வந்திருந்தாலும், இந்தப் படத்துல வித்தியாசமான ஸ்க்ரீன்ப்ளே மூலமா அசத்தியிருக்காங்க.''

``ஒரே துறையில கணவன் மனைவி ரெண்டு பேரும் சேர்ந்து சாதிக்கிறதுங்கிறது ரொம்ப அழகான விஷயம்ல..!’’

``படத்துல மாதவன் போலீஸ். அவர் மனைவியா நடிச்சிருக்கிற ஷ்ரத்தா அட்வகேட். தொழில்ல எலியும் பூனையுமா இருந்தாலும் ரொமான்ஸ்ல அடிச்சுக்க முடியுமா?''

``படத்துல விஜய் சேதுபதியோட தம்பி தன்னைவிட வயசுல மூத்த பெண்ணைக் காதலிப்பார். எப்பவுமே தன்னைவிட சிறிய பெண்ணைத்தான் ஆண்கள் காதலிக்கணும்கிற பொதுவிதியை மாத்தியிருக்குறதுக்கே கிளாப் பண்ணலாம்.’’

``ஆமாம்பா.  ஆனா, விஜய் சேதுபதிக்குத்தான் இந்தப் படத்துல ஜோடி இல்லாம போயிடுச்சு.''

``அவர் மூணு கதையை மாதவன்கிட்ட சொல்லிட்டு நாலாவது கதையா ஒரு லவ் ஸ்டோரி சொல்லட்டுமான்னு கேட்டுட்டு, கடைசி வரைக்கும் அதை சொல்லவே மாட்டார்.''

``அப்ப அந்த நாலாவது லவ் ஸ்டோரிதான் ‘விக்ரம் வேதா’ படத்தோட பார்ட் 2-வா  இருக்குமோ?''

``இருக்கலாம்... கலாம்... லாம்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனுஷா... ஆதிரா... இனியா! - யாஞ்சி யாஞ்சி

``ஹாஹாஹா!''

``இனியா, இதென்னடி புது ஹேர்ஸ்டைல்... ஹேர்கட் பண்ணிக்கிட்டியா?''

``ஆமா... முடி கொட்டிட்டே இருந்தா, `ஷார்ட் கட்'டுக்குத்தானே போய் ஆகணும்.''

``ஏய், ஹேர்கட் மட்டும் முடி உதிர்வைத் தடுத்துடாது. ஹெல்த்தி ஃபுட் எடுத்துக்கோ பேபி.''

``ஆதிரா, ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். `செங்காந்தள்'ங்கிற ஷார்ட் ஃபிலிமை யூடியூப்பில் பார்த்தேன். வசனங்கள் ஒவ்வொண்ணும் தெறி!''

``நானும் பார்த்தேன். ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குனதும் அவங்க வீட்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. அப்ப பாதிக்கப்பட்ட பொண்ணு ஒரு கேள்வி கேட்பா பாரு... சான்ஸே இல்ல!''

``அதானே... `ஒரு பொண்ணுக்குப் பிரச்னைன்னா உடனே பயந்து, ஒண்ணு... வெட்டிப் போட்டுடுறீங்க; இல்லாட்டி, கட்டிக் கொடுத்துடுறீங்க’னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்பா. எனக்கு அப்படியே கண்கலங்கிப் போச்சு.''

``இந்த மாதிரி இன்னும் எத்தனை குறும் படங்கள் வந்தாலும் சமூகம் திருந்தாத வரைக்கும் இங்கே எதுவும் மாறிடாது.''

``இப்ப இவ்ளோ தீவிரமா பேசுற நாமளே கொஞ்ச நேரத்துல இதையெல்லாம் மறந்துட்டு, ஹெட்போன்ல பாட்டுக் கேட்க ஆரம்பிச்சிடுவோம். வழக்கமா இதானே நடக்குது இனியா?''

``இனிமே அப்படி இருக்க வேணாம். கொஞ்சமாச்சும் அரட்டையைத் தாண்டி சொசைட்டிக்காக யோசிக்கலாமே..?''

``ஓகேய்ய்ய்ய்ய்... யோசிக்கலாமே!''

- கச்சேரி களைகட்டும்

அனுஷா... ஆதிரா... இனியா! - யாஞ்சி யாஞ்சி

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது, இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - யாஞ்சி யாஞ்சி

யாஞ்சி... யாஞ்சி... பாடலை ரசிக்க
http://bit.ly/2h0YCz1

அனுஷா... ஆதிரா... இனியா! - யாஞ்சி யாஞ்சி

முடிப் பராமரிப்பில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்! #HairTips
http://bit.ly/2v4XnCb

அனுஷா... ஆதிரா... இனியா! - யாஞ்சி யாஞ்சி

செங்காந்தள் குறும்படம் பார்க்க
http://bit.ly/2wrkV3P