Published:Updated:

கூந்தல் அலங்காரம்... குறைவில்லா வருமானம்!

கூந்தல் அலங்காரம்... குறைவில்லா வருமானம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கூந்தல் அலங்காரம்... குறைவில்லா வருமானம்!

வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் சாஹா, படங்கள்: சு.குமரேசன்

நீளமாகக் கூந்தல் வளர்க்கவோ, அதைப் பராமரிக்கவோ இன்றைய பெண்களுக்குப் பொறுமை இல்லை. ஆனாலும், திருமணத்தின்போதும் விசேஷங்களின்போதும் பாரம்பர்யக் கூந்தல் அலங்காரத்துடனேயே இருக்க வேண்டியிருக்கிறது. குட்டைக்கூந்தலில் அது சாத்தியப்படுவதில்லை. செயற்கையாகக் காட்டும் சவுரி முடி ஜடைகளையும் அவர்கள் விரும்புவதில்லை. `பாரம்பர்யத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது... அதே நேரம் இயற்கையான நீளக்கூந்தல் தோற்றமும் வேண்டும்' என விரும்புவோருக்கு வழிகாட்டுகிறார் நாகலட்சுமி. இயற்கை மற்றும் செயற்கை முடியைக்கொண்டு இவர் செய்கிற சிகை அலங்காரங்களுக்கு இளம்பெண்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு!

கூந்தல் அலங்காரம்... குறைவில்லா வருமானம்!

``ஹேர் ஸ்டைல் மற்றும் ஹேர் டிரெஸ்ஸிங்ல எனக்கு ரொம்ப ஆர்வமுண்டு. கல்யாணப் பெண்களுக்கு விதம்விதமான ஹேர் ஸ்டைல் செய்துவிடுவேன். மாடர்ன் பெண்களுக்கு முகூர்த்தத்துக்கான பாரம்பர்ய ஹேர் ஸ்டைல் செய்யறது ரொம்பவே கஷ்டமா இருக்கும். சவுரி முடி வெச்சுப் பின்னி, அதுக்கு மேல பூ அலங்காரம் பண்ணி விடணும். ஏற்கெனவே பட்டுப்புடவை, நகைகளோட கனம் தாங்க முடியாம நிக்கறவங்களுக்கு தலைக்கு மேல வெயிட்டைச் சுமந்துக்கிட்டு நிக்கறது இன்னும் கஷ்டமா இருக்கும். அவங்களுக்கு ஏதாவது மாற்று கண்டுபிடிக்கணும்னுதான் லைட் வெயிட் ஹேர் டெகரேஷன் பயிற்சிகளைக் கத்துக்கிட்டேன். கத்துக்கிட்டதை வெச்சு என் கற்பனையையும் சேர்த்துப் பலவித டெகரேஷன்கள் ஹேர் அட்டாச்மென்ட் பண்ணித் தரேன்'' என்கிறார் நாகலட்சுமி.

இவர்,  நிஜப் பூக்களை வைத்துச் செய்கிற ஜடை, செயற்கைப் பூக்களை வைத்துச் செய்கிற மாடல் மற்றும் கொண்டை என அடிப்படையான மூன்று மாடல்களை வைத்து எண்ணற்ற டிசைன்களில் ரெடிமேட் கூந்தல் அலங்காரங்களை டிசைன் செய்கிறார். முகூர்த்தத்துக்கு ஜடை அலங்காரம் என்றால், வரவேற்புக்கு லூஸ் ஹேர் விட்டுக்கொள்ளும் பெண்களே அதிகம். அவர்களுக்கேற்றபடி லூஸ் ஹேரிலும் விதம்விதமான அலங்காரங்கள் செய்து தருவது இவரின் ஸ்பெஷாலிட்டி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கூந்தல் அலங்காரம்... குறைவில்லா வருமானம்!

``சிலருக்கு இயற்கையிலேயே கூந்தல் அடர்த்தியில்லாமலும் குட்டையாகவும் இருக்கும். இன்னும் சிலர் ஒருநாள் கூத்துக்காக லேயர் கட்டோ, ஷார்ட் கட்டோ பண்ணிக்க விரும்ப மாட்டாங்க. அவங்களுக்கு லூஸ் ஹேர்லயே லேயர் கட் பண்ணின அட்டாச்மென்ட் டிசைன் பண்றேன். அதை அவங்களோட ஒரிஜினல் முடியோடு ஒட்டிக்கலாம். முதல்நாள் ரிசப்ஷன்ல மாடர்னா இருந்தவங்க, அடுத்தநாள் முகூர்த்தத்துல டிரெடிஷனல் தோற்றத்துல அசத்துவாங்க. எந்த இடத்துல, எந்தச் சூழலுக்கு என்ன மாதிரியான கூந்தல் அலங்காரம் பொருத்தமா இருக்கும்னு தெரிஞ்சு செய்துக்கறது ஒரு கலை. ஏன்னா, கூந்தல் ஒருத்தரோட பெர்சனாலிட்டியைத் தீர்மானிக்கிற விஷயமும்கூட...'' என்னும் நாகலட்சுமி, ஒருநாள் பயிற்சியிலேயே மூன்று மாடல் ஹேர் டெகரேஷன்களைக்  கற்றுக்கொடுக்கிறார்.

``பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தைரியமாக இந்தத் தொழிலில் இறங்கலாம். இயற்கையான அல்லது செயற்கையான முடி, அலங்காரத்துக்குத் தேவையான மணி, முத்து உள்ளிட்ட நகைகள், பூக்கள், அட்டை, தெர்மாகோல், யு பின், வலை என எல்லாம் இதில் அடக்கம். 50 சதவிகிதம் லாபம் பார்க்கலாம். பெரும்பாலும் பியூட்டி பார்லர்களில் பிரைடல் மேக்கப் பண்ணும்போது ஹேர் டிரெஸ்ஸிங்கும் செய்துவிடுவாங்க. ஹேர் டெகரேஷன் பொருள்களைத் திருப்பிக் கொடுத்துடணும். சிலர் கடைகள்ல வாடகைக்கு வாங்கி உபயோகிச்சுட்டுத் திருப்பித் தருவாங்க. இந்தச் செலவுல நாமே நமக்குனு சொந்தமா வாங்கி வெச்சுக்கிட்டா, தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்திக்கலாம். தெரிஞ்சவங்களுக்கு வாடகைக்கு விட்டும் சம்பாதிக்கலாம்...''

- நம்பிக்கை விதைக்கிறார் நாகலட்சுமி.