Published:Updated:

உங்கள்மீதும் அக்கறை காட்டுங்கள்!

உங்கள்மீதும் அக்கறை காட்டுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள்மீதும் அக்கறை காட்டுங்கள்!

நடிகை மனைவி அம்மா ஆர்.வைதேகி படங்கள்: கே.ராஜசேகரன்

20 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் கஜோல். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷுடன் `வி.ஐ.பி 2' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிற கஜோலிடம் அதே மின்சாரச் சிரிப்பு...

`` `மின்சாரக் கனவு' படத்தை ரீமேக் செய்தால் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கஜோலைத் தவிர வேறு சாய்ஸ் இல்லை என்றே தோன்றுகிறது. கஜோல் என்ன நினைக்கிறார்?''

``உங்களுக்கு வேணும்னா அப்படித் தெரியலாம். ஆனா, மாற்றத்தை என்னால் உணர முடியுது. எனக்கு இப்போ 42 வயசாகுது. 19 வயசுல மரத்தைச் சுத்தி டூயட் பாடின மாதிரி இப்போ என்னால பண்ண முடியாது. இன்னிக்கு ட்ரெண்டுல மின்சாரக் கனவை ரீமேக் பண்ணவும் முடியாது. அதற்கான காலமில்லை இது.''

உங்கள்மீதும் அக்கறை காட்டுங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``கஜோல் ரொமான்டிக் பெர்சனா?''

``நான் அப்படித்தான் நம்பிட்டிருக் கேன். ஆமாவா, இல்லையானு நீங்க என் கணவர்கிட்டதான் கேட்க வேண்டும்.''

`` `மாம்' ஸ்ரீதேவி மாதிரி படம் நடிக்கும் ஐடியா இருக்கா?''

``தெரியலை. ஆனா, அவங்க அளவுக்கு வேற யாராலயும் நடிக்க முடியாது. அவங்க சீக்கிரமே ஆக்டிங் ஸ்கூல் ஆரம்பிச்சு எல்லாருக்கும் நடிப்பு கத்துக் கொடுக்கணும்ங்கிறது என் ஆசை.''

``டெலிவரிக்குப் பிறகு எக்கச்சக்கமா வெயிட் போட்டிருந்த நீங்க, கஷ்டப்பட்டு அதைக் குறைச்சீங்களாமே... நிஜமா?''

``100 சதவிகிதம் நிஜம். அது அப்போதைய நிஜம். கஷ்டப்பட்டுதான் இளைச்சேன். அந்த மாற்றமொன்றும் மேஜிக் மாதிரி ஒரே இரவிலோ, ஒரே மாதத்திலோ நிகழ்ந்துவிடலை. நிறைய நிறைய மெனக்கெட்டேன். விருப்பமான உணவுகளைத் தவிர்த்துட்டு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட்டேன். வொர்க் அவுட் செய்தேன். எந்த ஒரு விஷயத்தை ஆரம்பிச்சாலும் அதுல முழு மனதையும் செலுத்திச் செய்யாவிட்டால் பலன் இருக்காது. வெயிட்டைக் குறைக்கிறதும் அப்படித்தான்.''

உங்கள்மீதும் அக்கறை காட்டுங்கள்!

``ஏன், ஒல்லியாக இருக்கிறதுதான் பெண்களுக்கு அழகா?''

``நிச்சயமா இல்லை. அது தேவையும் இல்லை. ஆரோக்கியம்தான் முக்கியம். நான் ஸ்ட்ராங்கா இருந்தால்தான் என் குடும்பத்தை, குழந்தைகளைப் பார்க்க முடியும்.  ஷூட்டிங் போறேன்... முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தால் மனைவியாக, அம்மாவாக எல்லா ரோல்களையும் செய்றேன். உடலளவிலும் மனதளவிலும் பலமாக இருந்தால் மட்டுமே எல்லாத்தையும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும். எனக்கு நான் முக்கியம். பல பெண்கள் அப்படி நினைக்கிறதில்லை. குழந்தைகளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா துடிச்சுப் போய்ப் பார்ப்பாங்க. கணவருக்கும் மாமனாருக்கும் ஹெல்த் செக்கப் செய்வாங்க. `நீங்க பிளட் டெஸ்ட் பண்ணிப் பார்த்தீங்களா'னு கேட்டா, `எனக்கென்ன... நான் நல்லாத்தானே இருக்கேன்'னு சொல்வாங்க.  அவங்களுக்கெல்லாம் நான் சொல்றது ஒரே ஒரு விஷயம்தான். மற்றவர்களிடம் அக்கறை காட்டுவதைப் போல உங்கள்மீதும் அக்கறை காட்டுங்கள். அப்போதான் அடுத்தவரின் நலனில் உங்களால் அக்கறை காட்ட முடியும்.''

``அம்மா அந்தஸ்தும் மனைவி ரோலும் எப்படி இருக்கு?''

``அம்மாங்கிற இடம் தினமும் என் பொழுதுகளை அழகாக்குகிற விஷயம். கடவுள் எனக்குக் கொடுத்த  அந்தப் பரிசுக்காகத் தினமும் நன்றி சொல்லிட்டிருக்கேன். மனைவியாக இருப்பதன் மாபெரும் சந்தோஷம்... எப்போதும் எல்லா விஷயங்களுக்கும் எனக்குத் துணையாக, ஆதரவாக ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பு. தவறு செய்யும்போது கண்டிக்கவும் அப்படியொரு துணை தேவை. கணவன் மனைவின்னு சொல்லிக்கிறதைவிடவும் இணையர்னு சொல்றதுதான் எங்கள் உறவில் அர்த்தமுள்ளதாக இருக்கும்னு நினைக்கிறேன்.''

``வீடு மற்றும் வேலையைச் சமாளிக்க டிப்ஸ்...''

``வேலையையும் வீட்டையும் குழப்பிக் காதீங்க.... வேலைன்னு வரும்போது அதற்கு நூறு சதவிகிதம் நியாயமாக நடந்துக்கங்க. வேலை செய்யும் இடத்தில் குடும்ப நினைவுகளைப் போட்டுக் குழப்பிக்க வேண்டாம். அதேபோல வீட்டுக்குள்ளே வேலையைக் கொண்டு வராதீங்க. அப்புறம் என்ன, நிம்மதியான வாழ்க்கைக்கு நான் கியாரன்டி!''