Published:Updated:

ஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்!

ஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்!

சேஃப்டி ஃபர்ஸ்ட் ஜெ.நிவேதா

ன்றைய நவீன யுகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பதே  கேள்விக்குறியாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் பொது இடங்கள் என எங்கேயும் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய சூழ்நிலையில், பெண்களுக்கு கைகொடுக்கும் வகையில் சில பாதுகாப்பு கேட்ஜெட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் பயனுள்ள சிலவற்றின் தொகுப்பு இங்கே...

சேஃப்லெட் (Safelet)

ஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்!

இது பிரேஸ்லெட் வடிவில் இருக்கும். வேகமாகச் செயல்படும் ஆற்றல்கொண்டது. ஸ்மார்ட்போனில் இதன் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து, பிரேஸ்லெட்டுடன் கனெக்ட் செய்துகொள்ள வேண்டும். ஆபத்தான நேரங்களில் பிரேஸ்லெட்டின் இரு புறங்களிலும் இருக்கும் பட்டன்களை அழுத்தினால் உடனடியாக நாம் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கு எச்சரிக்கை சென்றுவிடும். அதேநேரத்தில் வாய்ஸ் ரெக்கார்டிங்கையும் மொபைலில் பதிவு செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு.

வீடியோவைப் பார்க்க: http://bit.ly/2w8jKWP

ஸ்டெலெட்டோ (Stiletto)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்!

பல டிசைன்களில் கிடைக்கிறது பெண்டன்ட்டாகப் பயன்படுத்தக்கூடிய இந்த கேட்ஜெட். ஆபத்தான நேரங்களில் பெண்டன்ட்டில் உள்ள பட்டனை அழுத்துவதன் மூலம், உதவிப்பட்டியலில் உள்ளவர் களுக்குச் சில விநாடிகளில் தகவல் அனுப்பிவிட முடியும். வாய்ஸ் ரெக்கார்ட் செய்யும் வசதியும் உண்டு. நம்மால் பேச முடியாத இக்கட்டான நேரங்களில், வழக்கத்தைவிட வேகமாக நடப்பதன்மூலம் போலீஸ் எமர்ஜென்சி எண்ணைத் தொடர்பு கொள்ளும் வசதியும் உண்டு. அருகில் இருக்கும் வைஃபை  நெட்வொர்க்குடன் தன்னை கனெக்ட் செய்துகொண்டு நாம் சென்ற இடங்களின் வழித்தடங்களைக் குறித்து வைத்துக்கொள்ளும் இந்த கேட்ஜெட்.

வீடியோவைப் பார்க்க: http://bit.ly/2eVos6M

சைரன் (SIREN)

ஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்!

மோதிர வடிவில் இருக்கும் இந்த கேட்ஜெட் ஆபத்தான காலத்தில் அபாய ஒலியை ஏற்படுத்தித் தாக்குதல் ஏற்படுத்துவோரை பயமுறுத்தும். 110 டெசிபல் அளவில் ஒலிப்பதுடன், 50 அடி தூரம் வரை அபாய ஒலியைப் பரப்பக்கூடியது. விரலில் பொருத்திய மோதிரத்தை இடமிருந்து வலமாகத் தொடர்ந்து சுழற்றுவதன் மூலம் சத்தம் எழுப்ப முடியும். சுழற்றிய ஒன்றரை நொடிகள் கழித்தே சத்தம் எழும்பத் தொடங்கும். தவறாக அதை அழுத்திவிட்டால் சுதாரித்துக்கொண்டு அணைத்து விடுவதற்கான அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலுக்கு சார்ஜ் செய்வது போலவே, இதையும் சார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.

வீடியோவைப் பார்க்க: http://bit.ly/2vRZcCm

ரோர் ஃபார் குட் (Roar for Good)

ஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்!

இதுவும் பெண்டன்ட் போலவே இருக்கும். போன், பர்ஸ், நெக்லஸ், பிரேஸ்லெட் என நாம் உபயோகிக்கும் பொருள் களுடன் இதைக் கோத்துக்கொள்ளலாம். ஆபத்துச் சூழல்களின் போது, இதிலுள்ள பட்டனை அழுத்தினால், உடனடி யாகச் சத்தம் எழும்பத் தொடங்கிவிடும். கூடுதலாக, நமது இருப்பிடத்தோடு கூடிய மெசேஜ் ஒன்றும் உதவி செய்யக்கூடியவர்களுக்குச் சென்றுவிடும். சத்தம் வேண்டாம், மெசேஜ் மட்டுமே போதும் என்று நினைப்பவர்களுக்கு சைலன்ட் மோடு வசதியும் உண்டு.

வீடியோவைப் பார்க்க: http://bit.ly/2tRDaSW

ரிவோலர் (Revolar)

ஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்!

இதன் பின்புறத்தில் இருக்கும் மேக்னட் உதவியால், எந்த ஒரு பொருளோடும் ஒட்டவைத்துக் கொள்ளலாம். பொருள்கள் மட்டு மல்ல... உடைகளோடும் இது ஒட்டிக்கொள்ளும். ஆபத்தின் போது இரண்டு முறை இதை அழுத்தும்போது, YELLOW ALERT வசதி மூலம் அருகில் இருக்கும் நண்பர்களுக்கு முதல் தகவல் செல்லும். மூன்றாவது முறையாக இது அழுத்தப்பட்டால், RED ALERT ஆரம்பமாகும். ரெட் அலெர்ட் என்பது எமர்ஜென்சி அலெர்ட்.

வீடியோவைப் பார்க்க: http://bit.ly/2o6iimT

ஆர்டெமிஸ் (Artemis)

ஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்!

ஆபரண வகையைச் சேர்ந்தது இது. பெண்டன்ட் போல பொருத்தப்பட்டிருக்கும் இதை, ஆபத்தான சூழலில் மூன்று முறை அழுத்த வேண்டும். ஆடியோ ரெக்கார்டிங், எமர்ஜென்சி அலெர்ட், எமர்ஜென்சி அறைக்குத் தகவல் என பல்வேறான வசதிகள் இதில் உள்ளன.

வீடியோவைப் பார்க்க: http://bit.ly/2vSak2k

 கார்டியன் ஏஞ்சல்  (Guardian Angels)

ஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்!

பிரேஸ்லெட்டாகவும் நெக்லஸாகவும் பயன்படும் இந்த கேட்ஜெட்டை முதல்முறை அழுத்துவதன் மூலம், நட்பு வட்டாரங்கள் மொபைலில் இருந்து அழைப்பு வரும். மற்றவர்களைத் திசை திருப்புவதற்காகவே இது பயன்படுத்தப்படுகிறது. அப்படியும் பிரச்னை தீவிரமடைந்தால், தொடர்ந்து  பட்டனை அழுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் டெக்ஸ் வடிவ மெசேஜை அனுப்பிவிடும்.

வீடியோவைப் பார்க்க: http://bit.ly/2w8h6jV

சேஃப்டி (Safeti)

ஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்!

க்ளிப் வடிவத்தில் இருக்கும் இதை, எதனுடன் வேண்டு மானாலும் ஒட்டவைத்துக்கொள்ளலாம். ஆபத்தான நேரங்களில் தொடர்ந்து அழுத்துவதன் மூலம், அலெர்ட் செல்லத் தொடங்கிவிடும். ஜி.பி.எஸ். மூலம் நீங்கள் இருக்கும் இடமும், ஆபத்துச்சூழல் பற்றியும் மெசேஜ் சென்றுவிடும்.

வீடியோவைப் பார்க்க: http://bit.ly/2v8jtG4