Published:Updated:

வீடு Vs வேலை - தடைகளைத் தாண்டிய ஓட்டம் தேவை!

வீடு Vs வேலை  - தடைகளைத் தாண்டிய ஓட்டம் தேவை!
பிரீமியம் ஸ்டோரி
News
வீடு Vs வேலை - தடைகளைத் தாண்டிய ஓட்டம் தேவை!

ஆர்.ஜெயலெட்சுமி, படம்: ஆ.முத்துக்குமார்

ன்னியாகுமரி மாவட்டத்தில் 2,500 சுயஉதவிக்குழுக்களை ஒருங்கிணைப்பதுடன், ‘மங்கையர் மங்களம்’ அமைப்பின்மூலம் குடும்ப வன்முறையால் பாதிக்கப் பட்ட பல பெண்களுக்கு நிவாரணம் கிடைக்க சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார் எல்.விக்டோரியா கௌரி. இவர் நாகர்கோவில் மற்றும் மதுரையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருவதுடன், இப்போது எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் அதிகாரி அல்லாத முதல் பெண் சுயேச்சை இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். இவ்வளவு பொறுப்புகளைச் சுமப்பதுடன் இரண்டு பெண் குழந்தைகளின் அம்மாவாக, குடும்பத்தையும் சிறப்பாக அரவணைத்துச் செல்கிறார். `எப்படி மேடம் இவ்வளவும்!’ என்று ஆச்சர்யப்பட்டால்... தன் பேலன்ஸிங் டெக்னிக்கை புன்னகையுடன் விவரிக்கிறார்...

* வீடு, சமூகம், வேலை என மூன்றும் எனக்கு முக்கியமானவை. அதனால் எந்த வேலையை, எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதைச் சரியாகத் திட்டமிட்டுக்கொள்வேன்.

சிறுவயதில் இருந்தே என் குழந்தைகளுக்கு என் பணியின் விவரங்களைச் சொல்லிப் புரிய வைத்துள்ளேன்.  பணியின் காரணமாக  நான் வெளியூரில் இருக்கும்போது, என் கணவர் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்து, தாயுமானவராகவும் இருக்கிறார்.

வீடு Vs வேலை  - தடைகளைத் தாண்டிய ஓட்டம் தேவை!

* எந்த விஷயத்தையும் தடை, சவால் என நான்  ஒருபோதும் நினைக்க மாட்டேன். ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாகவும் முழுமையாகவும் கழிக்க வேண்டும். பெண்கள் தடைகளைத் தாண்டிய ஓட்டத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். ஒரு நிமிடம்கூட நிற்கக்கூடாது; நின்று பார்க்கும் நேரத்தில்கூட தோற்கடிக்கப்படுவோம்.  இதை மனதில்கொண்டே செயலாற்றுவேன்.

எவ்வளவு நேரமானாலும் இரவு படுக்கைக்குச் செல்வதற்குமுன் `அன்றைக்கு செய்ய வேண்டிய பணிகளை முடித்துவிட்டேனா?’ என  செக்   செய்து விட்டே தூங்குவேன்.  ஒரு வேலை  அதிக நேரம் எடுத்தால், அடுத்த வேலையை விரைவாக முடிக்கக் கற்றுக்கொள்வது அவசியம்.

நமக்கென பொழுதுபோக்கு, ஹாபியைத் தேர்ந்தெடுத்து பின்பற்றுவது அவசியம். ஒரு மணி நேரம் நமக்கு பிடித்த விஷயத்தை செய்வதன் மூலம் நம்மால் நாள் முழுவதும் ஃப்ரெஷ்ஷாக செயல்பட முடியும்.

என்னை ஒரு வழக்கறிஞ ராகவே சமுதாயத்தில் அடை யாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். என் அம்மா சரோஜினி சந்திரா என்னிடம் விதைத்த வீரியத்தின் வளர்ச்சி யாகத்தான் நான் செயல்பட்டு வருகிறேன். மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்தான் என்னு டைய இன்ஸ்பிரேஷன், ரோல் மாடல்.

சமையலோ, பொதுக்கூட்டமோ... எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்பாடு இல்லாமல் இறங்க மாட்டேன். இதனால் தேவையற்ற டென்ஷனைக் குறைத்துக்கொண்டு எப்போதும் ‘கூல் அஸ் எ குக்கும்பர்’ போல செயல்படுவேன்.

நவீன யுகத்துக்கு ஏற்றபடி அப்டேட் செய்துகொள்வதில் எப்போதும் நான் மாணவியாக இருப்ப தால், தொழிலையும் வீட்டையும் சமா ளிப் பது எளிதாகிறது.

வீட்டில் இருக்கிற நேரத்தில், குழந்தைகளுக்குப் பிடித்த உணவைச் செய்துதருவது, அவர்களுக்கு தலைவாரிக்கொண்டே பேசுவது, இளமைக்கால விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்வது, விளையாடுவது என கிடைக்கும் நேரத்தை குவாலிட்டி டைமாகச் செலவிடுவேன்.

குடும்பம், அலுவலகம் என அனைத்திலும் நூறு சதவிகிதம் சிறப்பாகப் பணிபுரிபவர்கள் என்று ஒருவரும் இல்லை. எந்த நேரத்தில், எந்த இடத்தில் அதிக உழைப்பும் ஈடுபாடும் அவசியம் என்பதை அனுமானிக்கும் திறமையை வளர்த்துக்கொண்டேன். எதற்கு முன்னுரிமை என்பதைப் பிரித்துக்கொண்டு, விரைவாகப் பணியாற்றியதன் மூலம் குறித்த நேரத்தில் பணிகளைப் பூர்த்திசெய்ய முடிந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz