Published:Updated:

ஜூட் ஜுவல்லரி மேக்கிங் அழகாக செய்து அசத்திய அவள் வாசகிகள்!

ஜூட் ஜுவல்லரி மேக்கிங் அழகாக செய்து அசத்திய அவள் வாசகிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூட் ஜுவல்லரி மேக்கிங் அழகாக செய்து அசத்திய அவள் வாசகிகள்!

அவள் விகடன் சக்சஸ் வொர்க்‌ஷாப் மு.பார்த்தசாரதி, படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன், பா.காளிமுத்து

`வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்ட முடியுமா?’, `சணலைக்கொண்டே சம்பாதிக்க முடியுமா?’ - என்கிற கேள்விகளோடு அவள் விகடன் வாசகிகள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்குள் (Venue Partner) நுழைந்தார்கள். `அவள் விகடன்' நடத்திய சக்சஸ் வொர்க் ஷாப்புக்கு வந்திருந்த அத்தனை பேர் முகத்திலும் கொஞ்ச நேரத்திலேயே வியப்பு. காரணம், உமா ராஜ் சணல் கயிற்றில் உடனடியாக நெக்லெஸ் மற்றும் கம்மலாகச் செய்துகாட்டியதுதான்.
 
“நான் அவள் விகடன் வாசகி. திருநெல்வேலியிலிருந்து வந்திருக்கேன். எனக்குச் சின்ன வயசுலேர்ந்தே கிராஃப்ட்ல அதிகமான ஈடுபாடு உண்டு. ஆரம்பத்துல சணல் கயிற்றை எங்கள் கையில கொடுத்ததும் `திடுக்’குன்னு ஆகிடுச்சு. `இதுல எப்படி ஜுவல்ஸ் பண்ண முடியும்’னு கேட்டேன். கொஞ்ச நேரத்துலயே உமா அற்புதமான நெக்லெஸ்ஸை செய்துகாட்டினாங்க. அதைப் பார்த்தே நாங்களும் செய்து முடித்தோம்” என்கிறார் வாகீஸ்வரி. இவரைப் போலவே அன்றைய பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆச்சர்யம் ப்ளஸ் ஆனந்தம்தான்.

ஜூட் ஜுவல்லரி மேக்கிங் அழகாக செய்து அசத்திய அவள் வாசகிகள்!

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நித்யலட்சுமி, ``ஆரம்பத்துல இந்தப் பயிற்சி கஷ்டமா இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா, கிடைக்குற சணலைக்கொண்டு எளிமையா ஜுவல்ஸ் பண்ணக் கத்துக்கிட்டேன்’’ என்றார் ஆர்வத்துடன்.

`‘நான் ஆர்ட் அண்ட் கிராஃப்ட் டீச்சரா இருக்கேன். எத்தனையோ இடங்களுக்குப் போயிருந்தாலும் சணல்ல ஜுவல்லரி பண்ணினதை இங்கதான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன். தொழில்முனைவோருக்கான புதிய முயற்சியா இது இருக்கும்னு நம்புறேன்” - பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சௌந்தரியின் குரல் இது.

`‘நானும் என் தோழி சுமித்ராவும் திருவேற்காட்டுல இருந்து வந்திருக்கோம். நாங்க ரெண்டு பேருமே ஃபேஷன் டிசைனிங் ஸ்டூடன்ட்ஸ். இங்கே வந்த பிறகுதான் ஹேண்ட்கிராஃப்ட் பண்றதுக்குப் படிப்பு அவசியமில்லை... பயிற்சியே போதும்னு புரிஞ்சிக்கிட்டோம்” என்கிறார்கள் இருவரும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜூட் ஜுவல்லரி மேக்கிங் அழகாக செய்து அசத்திய அவள் வாசகிகள்!

ஜூட் ஜுவல்லரி மேக்கிங் பயிற்சியை அளித்த உமா ராஜ் பேசும்போது, “நான் 1998-ல் இருந்து பயிற்சி கொடுத்து வருகிறேன். மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பயிற்சியால் பயனடைந்திருக்கிறார்கள். இன்று அவள் விகடன் மூலமாக ஒரே நேரத்தில் 200-க்கும்  மேற்பட்ட பெண்களுக்குச் சொல்லிக்கொடுத்ததை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. ஆரம்பத்தில் என்னால் செய்யவே முடியாது என்று சொன்னவர்கள் போகப்போக அழகாகச் செய்து அசத்தினார்கள். இனி, சணல் மற்றும் தங்களிடம் கிடைக்கும் பொருள்களை வைத்து சிறு சிறு ஜுவல்லரிகளைச் செய்து வருமானமும் ஈட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

இதுபோன்ற இன்னும் பல பயிற்சிப் பட்டறைகளை `அவள் விகடன்' தொடர்ந்து நடத்தவிருக்கிறது.