Published:Updated:

மூன்றாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - இது ரொம்ப யம்மி!

மூன்றாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - இது ரொம்ப யம்மி!
பிரீமியம் ஸ்டோரி
News
மூன்றாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - இது ரொம்ப யம்மி!

அவள் விகடன் கிச்சன் எம்.ஆர்.ஷோபனா, பா.காளிமுத்து, ப.சரவணக்குமார், சொ.பாலசுப்பிரமணியன்

`ருச்சி மேஜிக் பிக்கிள்ஸ்' நிறுவனம் (Title sponsor) வழங்கிய அவள் விகடன் கிச்சன் மூன்றாம் ஆண்டுக் கொண்டாட்டம், ‘பவர்டு பை’ சக்தி மசாலா நிகழ்வு... ஜூலை 23 அன்று சென்னை க்ரவுன் பிளாசாவில் சுவை ராஜ்யமாகவே நிகழ்ந்தது.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், “சமையல் என்கிற கலையில் ‘அவள் விகடன் கிச்சன்’ இதழ் ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்துகிறது என்பதில் பெருமைகொள்கிறோம்” என்றவர், இரண்டு புதிய திட்டங்களுக்கான அறிவிப்பையும் வெளியிட்டார். சிறப்பான உணவகங்களை வகைப்படுத்தும் அவள் விகடன் கிச்சன் ‘யம்மி ரேட்டிங்ஸ்', சுவையில் அசத்தும்  ரெஸ்டாரென்ட்டுகள், செஃப்களுக்கு வழங்கப்படவிருக்கும் ‘யம்மி அவார்ட்ஸ்' ஆகியவற்றுக்கான லோகோக்களை அறிமுகப்படுத்தினர், சிறப்பு விருந்தினர்களான இசையமைப்பாளர்-நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவர் மனைவி பாடகி சைந்தவி.

மூன்றாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - இது ரொம்ப யம்மி!

சின்னத்திரை ஸ்டார் ஈரோடு மகேஷ், நகைச்சுவை நடிகர் மதன்பாபு, 'சரவணன் மீனாட்சி’ நடிகை சித்ரா, செலிபிரெட்டி செஃப்கள் மெனுராணி செல்லம், ரேவதி சண்முகம், எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், மருதன், முகில், `ஆர்ஜே' மிருதுளா, அழகுக்கலை நிபுணர் வசுந்தரா என நட்சத்திரக் கூட்டமாகவே அமைந்தது நம் சிறப்பு விருந்தினர்களின் வரவு.

சைந்தவியுடன் மேடையேறிய ஜி.வி.பிரகாஷ், ``சைந்தவி என்ன சமைச்சாலும் சூப்பரா இருக்கும்'' என்று `ஆஸம்' கணவராகப் பேச, சைந்தவி கன்னங்களில் வெட்கச் சிவப்பு. சனோ, ``சரி... பாடகி சைந்தவிக்கு ஒரு சவால்” என்று நெடுஞ்சாலை உணவுகளின் பெயர் பட்டியலைக் கொடுத்து, ``இதை வைத்து ஒரு பாட்டுப் பாடுங்களேன்” என்று கேட்க, இரண்டே நிமிடங்களில் அதற்குத் தயாராகி, “முர்கு தரிவாலா... பிதாய் கச்சோரி... கடி பக்கோடி” எனப் பாடி அசத்தினார் சைந்தவி. தொடர்ந்து ஜி,வி.பிரகாஷ், “நான் சின்ன வயசுல இருந்தே விகடன் வாசகன். நல்ல உணவுகளுக்கு நிச்சயமா அவள் கிச்சனை ஒரு வழிகாட்டியா வெச்சுக்கலாம்” என்றார் வாழ்த்துகளுடன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மூன்றாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - இது ரொம்ப யம்மி!

“பெரிய பெரிய ஹோட்டல்ல எல்லாம் ஆண்கள்தான் சமைக்கிறாங்க’’ என மேடையேறும்போதே அதகளப்படுத்திய ஈரோடு மகேஷ், ``நாம் மறந்துபோன பாரம்பர்ய உணவுகளை நம் வீட்டுக்குக் கொண்டுவரும் நல்ல காரியத்தைச் செய்துகொண்டிருக்கும் பத்திரிகை விகடன்'' என்றார் நெகிழ்ச்சியுடன். இனிப்பு வகைகளைச் சுவைத்த `ஆர்ஜே' மிருதுளா, ``விகடன் வழங்கும் உணவும் மனசை நிறைக்குது'' என்றார் உற்சாகமாக.