Published:Updated:

எக்கோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார்... ஒரே கல்லில் மூன்று மாங்காய்!

எக்கோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார்... ஒரே கல்லில் மூன்று மாங்காய்!
பிரீமியம் ஸ்டோரி
எக்கோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார்... ஒரே கல்லில் மூன்று மாங்காய்!

புதுமைபிரேமா நாராயணன், படங்கள்: ப.சரவணகுமார்

எக்கோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார்... ஒரே கல்லில் மூன்று மாங்காய்!

புதுமைபிரேமா நாராயணன், படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
எக்கோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார்... ஒரே கல்லில் மூன்று மாங்காய்!
பிரீமியம் ஸ்டோரி
எக்கோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார்... ஒரே கல்லில் மூன்று மாங்காய்!

`வாட்ஸ்அப்’பில் சட்டென கண்களைக் கவர்ந்தது ஒரு தகவல்... ‘இந்த விநாயகர் சதுர்த்தியைச் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் கொண்டாடுவோம்’ என்ற அறிவிப்புக்குக் கீழே, அதைப் பற்றிய விளக்கமும் படமும். ஒரு சிறிய தொட்டியில் களிமண் விநாயகர் சிலை... அது கரைந்து செடியாக வளர்ந்திருக்கிறது. ‘சுற்றுச்சூழலுக்குக் கேடில்லை; வீட்டுக்கு ஒரு செடி கிடைக்கும்’ என்பது கான்செப்ட்.

மும்பையில் பிரபலமான இந்த விஷயத்தைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியிருப்பவர்கள் ஆர்த்தி ஹரிநாத் மற்றும் நிஷா பிரஷாந்த். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் மரங்களும் செடிகளும் சூழ்ந்த பசுமை கொஞ்சும் அந்தக் காலத்து வீட்டில் இவர்களைச் சந்தித்தோம்.

எக்கோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார்... ஒரே கல்லில் மூன்று மாங்காய்!

``என்னோட ஃபுல்டைம் வேலை இதுதாங்க... இதிலிருந்து பிறந்ததுதான் இந்தப் பிள்ளையார் ஐடியா’’ என்று சொல்லும் ஆர்த்தி, எம்.டெக். பயோடெக்னாலஜி படித்துவிட்டு, இயற்கை விவசாயத்தில் முழுமையாக இறங்கியிருப்பவர்.

‘`தஞ்சாவூர்ல எங்க வீட்டில் பெரிய தோட்டம் உண்டு. அதனால் எனக்கு அது சின்ன வயசிலிருந்தே மனசுக்குப் பிடிச்ச விஷயமாயிடுச்சு. பயோடெக் முடிச்சதும் பெங்களூரில் ‘டெரஸ் கார்டனிங்’ புரமோட் பண்ற கம்பெனியில் சேர்ந்தேன். பிறகு, சென்னைக்கு மாறி வந்ததும் வேளாண் பண்ணைகள், ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை விவசாயம், வேளாண்மையில் பாரம்பர்ய ரகங்களைப் பாதுகாத்தல், மாடித்தோட்டங்கள்னு முழுநேர கன்சல்டன்ட் ஆனேன். கூடவே நானே பண்ணையும் தோட்டமும் வெச்சு, ஆர்கானிக் பொருள்களை விற்பனை செய்துகிட்டிருக்கேன்’’ என்று அறிமுகம் தந்ததோடு, நிஷாவைக் கை காட்டினார்.

``நான் ஆர்க்கிடெக்ட் படிப்பு  முடிச்சிருக்கேன். இப்போ நடனத்தில் மேற்படிப்பு படிக்கிறேன். நானும் ஆர்த்தியும் பள்ளி நாள்களிலிருந்து தோழிகள். போன வருஷம் பிள்ளையார் சதுர்த்தி அப்போ, பிள்ளையாரைக் கடலில் கரைக்கிறது பத்தி வீட்டுல பேசிட்டிருந்தோம். அப்போ என் மூணு வயசு மகன் தனவ், ‘கடல்ல இருக்கிற ஃபிஷ் எல்லாம் என்ன ஆகும்’னு கேட்டான். அந்தக் கேள்விக்குக் கொஞ்சம் சமூக அக்கறை கொடுத்ததில் உருவானதுதான் இந்த எக்கோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார் ஐடியா’’ என்று கூறிய நிஷா, அந்தத் தொட்டியை எடுத்து வந்தார்.

‘`இந்தத் தொட்டியில் உரமும் தேங்காய் நார் பத்தையும் கலந்து நிரப்பியிருக்கோம். மண் பிள்ளையார் சிலை உள்ளே பீன்ஸ், கீரை விதைகள் இருக்கு. சதுர்த்தி முடிஞ்சதும் பிள்ளையாரைத் தொட்டியிலேயே கரைச்சுவிட்டா, செடி முளைக்க ஆரம்பிக்கும். உரம் கலந்த மண் என்பதால் உரமெல்லாம் போட வேண்டாம். கீரையோ, பீன்ஸ் செடியோ முளைச்சு வந்து, வீட்டுச் சமையலுக்கு ஃப்ரெஷ்ஷா கிடைக்கும். சதுர்த்திக்கு பூஜை செய்து, பிள்ளையாரைக் கரைச்ச திருப்தியும் இருக்கும்; கிச்சன் கார்டனுக்குப் பிள்ளையார் சுழிபோட்ட மாதிரியும் இருக்கும்; சுற்றுச்சூழலுக்கும் கேடு இருக்காது. ஒரே கல்லில் மூணு மாங்காய்’’ என்று சிரித்தபடியே நமக்கு ஒரு ‘டெமோ’ காண்பித்தனர் தோழிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எக்கோ ஃப்ரெண்ட்லி பிள்ளையார்... ஒரே கல்லில் மூன்று மாங்காய்!

இரு விதைகளைத் தன்னுள் கொண்ட பிள்ளையார் சிலையுடன் ஓர் அழகிய குடை, அறுகம்புல், எருக்கம்பூ மாலையுடன் 250 ரூபாய்க்கு இந்தத் தொட்டி கிடைக்கும்.

‘`மும்பையில் இதை ‘ட்ரீ கணேஷா’ன்னு சொல்வாங்க. பெரிய பெரிய தொட்டிகளில், நாம் கேட்கும் சைஸில் ‘கஸ்டமைஸ்’ பண்ணி பிள்ளையார் செய்து தருவாங்க. இங்கே ஃப்ளாட்களில் பெரிய தொட்டியெல்லாம் வைக்க முடியாதே... அதனால, சின்னத் தொட்டியில் இதை ஆரம்ப முயற்சியாகச் செய்து பார்த்திருக்கிறோம். இதன் வெற்றியைத் தொடர்ந்து, கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் பிறந்த நாளுக்குப் பரிசு கொடுப்பதுபோலவும் பண்ணலாம்னு ஐடியா இருக்கு’’ என்கிற ஆர்த்திக்குச் சமூக வலைதளங்கள் மூலமாகவே 500 ஆர்டர்களுக்கும் மேல் கிடைத்திருக்கின்றன.
 
‘`இதைப் பார்த்துட்டு அடுத்த வருஷம் இன்னும் சில பேர் இதுபோல செய்ய முன்வந்தால், அதுவே எங்களுக்குப் பெரிய வெற்றி, மகிழ்ச்சி. ஆர்கானிக் முறையில் தோட்டம் போடுறதையும் நம்மைத் தாங்கும் பூமிக்குக் கேடு விளைவிக்காம இருக்கிறதையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோகணும். அந்த முயற்சிக்கான சின்ன ஆரம்பமான இந்தப் பிள்ளையார், ஒரு பெரிய மாற்றத்துக்கான சுழியைப் போடற பிள்ளையாராகவும் இருக்கணும் என்பதுதான் எங்கள் நோக்கம்” - இயற்கையின் மீதுள்ள காதல், கண்களில் தெறிக்கிறது தோழிகளிடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism