Published:Updated:

யாரிந்த நம்பிக்கை நட்சத்திரம்?

யாரிந்த நம்பிக்கை நட்சத்திரம்?
பிரீமியம் ஸ்டோரி
யாரிந்த நம்பிக்கை நட்சத்திரம்?

பிக் பாஸ் ஹீரோயின் கார்க்கி பவா

யாரிந்த நம்பிக்கை நட்சத்திரம்?

பிக் பாஸ் ஹீரோயின் கார்க்கி பவா

Published:Updated:
யாரிந்த நம்பிக்கை நட்சத்திரம்?
பிரீமியம் ஸ்டோரி
யாரிந்த நம்பிக்கை நட்சத்திரம்?

`பிக் பாஸ்' வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல; பார்வையாளர்களுக்கும் அது பெரிய சர்ப்ரைஸ்தான். மாஸ் ஹீரோ அறிமுகப் பாடல் போல, கயிறு கட்டி உள்ளே இறங்கிய அந்த 17-வது நபர் சுஜா வருணி. யார் இவர்? எங்கேயோ பார்த்ததுபோல இருக்கிறதா?

`அங்கும் இங்கும் எங்கும் தரமே... நிஜாம் பாக்கு’ - முகங்கள் மாறும் அந்த விளம்பரத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யெஸ்... அதில்வரும் முகங்களில் ஒன்றான அந்தக் குட்டிப்பெண்தான் சுஜா வருணி.
சென்னையில் பிறந்து வளர்ந்த சுஜாவின் முழு பெயர் சுஜாதா நாயுடு. சினிமாவுக்காக சுஜா வருணி ஆனார். 1985-ல் பிறந்த சுஜாவுக்கு, அவரது 14 வயதிலே சினிமா வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் வெளியாகாமல் போனதில் மூன்றாண்டுகள் போய்விட்டன. பின், `வர்ண ஜாலம்' என்ற படத்தில் சிறிய வாய்ப்பு கிடைத்ததும் சட்டென்று  பிடித்துக்கொண்டார். தொடர்ந்து பாடல்களுக்கு நடனம், குட்டிக் குட்டிக் கதாபாத்திரம் என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் சுஜா. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அம்மணி தென்னிந்தியாவில் ஆல் ரவுண்டர். சமீபத்தில் கிடாரி, குற்றம் 23 ஆகிய படங்களில் சுஜாவைப் பார்த்திருக்கலாம்.

யாரிந்த நம்பிக்கை நட்சத்திரம்?

அப்படியென்றால், சுஜா துணை நடிகையா என யோசிக்க வேண்டாம். முதல் படம் தந்த அதே சோகத்தைத்தான் மீண்டும் சந்தித்தார் சுஜா. அருண் விஜய்யுடன் கதாநாயகியாக நடித்த `வா டீல்’ என்ற படம் நீண்ட நாள்களாக வெளியாகாமலேயே இருக்கிறது. அது வந்திருந்தால், கதாநாயகியாகவும் ஒரு ரவுண்ட் வந்திருப்பார்.

`பிக் பாஸ்' வீட்டுக்கு வரும்முன்பே சுஜா இந்த நிகழ்ச்சியின் ரசிகை. சொல்லப்போனால், ஓவியா ஆர்மியின் ஓர் உறுப்பினர். ``ஓவியாவின் முடிவை மதிக்கிறேன். என்ன நடந்தாலும் நாங்கள் உனக்காக இருக்கிறோம் ஓவியா. நீ வந்து இந்தப் போட்டியில் ஜெயிக்க வேண்டும்” என ட்வீட் எல்லாம் போட்டுவிட்டுத்தான் `பிக் பாஸ்' வீட்டுக்குள் நுழைத்திருக்கிறார் சுஜா. அதனால், ஓவியா ரசிகர்களின் ஆதரவும் இவருக்குக் கிடைக்கலாம்.

சுஜா ஒரு ட்விட்டர் அடிக்ட். நிறைய பாசிட்டிவ் விஷயங்களையும் தனது புகைப் படங்களையும் அதிகம் ட்வீட் செய்பவர். நண்பர்களின் பிறந்த நாள், அவர்கள் படங்களின் ரிலீஸ் என எதையும் தவறவிடாமல் வாழ்த்துவார். வெளிப்படையாகப் பேசுபவர். இந்தக் குணத்தால்தான் `பிக் பாஸ்' வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே அனைவருடனும் கலகலவெனப் பேசத் தொடங்கிவிட்டார். விளையாட்டு என்றால் உயிரையே கொடுப்பார். கிரிக்கெட், பேட்மிண்டன் என அனைத்து விளையாட்டுகளையும் கொண்டாடும் பெண்.

சமீபத்தில் சுஜா பேசியிருந்த வார்த்தைகள் நெகிழ்ச்சியானவை... “ஒரு கிளாமர் நடிகையாக நான் நிறைய பணம் சம்பாதித்துவிட்டேன். எனக்கு இப்போது தேவை நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பேரும் புகழும்தான். என் திறமைக்கேற்ற கதாபாத்திரங்களுக் காகக் காத்திருக்கிறேன். அதற்காக உழைக்கிறேன்.”

என்ன நடந்தாலும், சுஜாவின் நம்பிக்கை குறையாது. `இந்த உலகமே நீ தோத்துட்ட, தோத்துட்டன்னு அலறினாலும், நீயா ஒப்புக்கிற வரைக்கும் உன்னை யாரும் ஜெயிக்க முடியாது!’ -  விவேகமில் அஜித் சொல்லும் இந்த பன்ச், நிஜத்தில் சுஜாவுக்குப் பொருந்திப்போகும். அந்த விடாமுயற்சி, `பிக் பாஸ்' வீட்டிலும் தொடரும் என நம்பலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism