Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - இருக்கு... ஆனா, இல்லை!

அனுஷா... ஆதிரா... இனியா! - இருக்கு... ஆனா, இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா! - இருக்கு... ஆனா, இல்லை!

டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா! - இருக்கு... ஆனா, இல்லை!

டிஜிட்டல் கச்சேரி

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா! - இருக்கு... ஆனா, இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
அனுஷா... ஆதிரா... இனியா! - இருக்கு... ஆனா, இல்லை!

``ஒரு விளையாட்டு ஆளையே கொல்லும்னா... அந்த விளையாட்டை ரிஸ்க் எடுத்து விளையாடுவோமா?''

``என்ன இனியா லூஸா நீ?! யாராவது சாகப்போறோம்னு தெரிஞ்சே விளையாடுவாங்களா என்ன?''

``நம்புங்க... அந்த விளையாட்டுல மூழ்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா அதுல அடிக்ட் ஆகி தற்கொலை செய்துகொள்ள வைக்கும். மேலைநாடுகள்ல இதுவரைக்கும் நூத்துக்கும் அதிகமானவங்க இறந்திருக்காங்க. இப்ப இந்தியாவிலும் சிலர் இறந்திருக்கிறதா நியூஸ்ல சொல்றாங்க.''

அனுஷா... ஆதிரா... இனியா! - இருக்கு... ஆனா, இல்லை!

``என்னடி சொல்றே... அதென்ன அப்படி ஒரு பயங்கரமான விளையாட்டு?''

``அந்த விளையாட்டோட பேரு ‘ப்ளூ வேல்’. இணையம் மூலமா சிறுவர்கள்,  இளைஞர்களைத் தற்கொலைக்குத் தூண்டுவது இந்த விளையாட்டோட சேலஞ்ச்...''

``இவ்ளோ ரிஸ்க்கான விளையாட்டுல எதுக்குப் போய் சிக்கணும்?''

``இந்த விளையாட்டு முகம் தெரியாத நபர்கள் மூலமா இணையம் வழியா நடத்தப்படுது. யார்னு தெரியாத அந்த நபர்களோட வலையில் சிக்கின அப்பாவிகள்தான் இந்த விளையாட்டால செத்துப் போயிருக்காங்க.''
``சாகுற அளவுக்கு இந்த விளையாட்டுல என்ன இருக்கு?''

``நடுராத்திரியில் எழுந்திருப்பது, மோசமான பாடல்களைக் கேட்பது, திகில் படம் பார்ப்பது, கத்தியால் கையில் கீறி ரத்தம் சொட்டச் சொட்ட உருவங்கள் வரைவது, மலை உச்சியில் நின்றுகொண்டு செல்ஃபி எடுப்பது என இந்த விளையாட்டில் 50 வகையான டாஸ்க்குகள் கொடுத்துக் கடைசியாகத் தற்கொலை செய்துகொள்ளவும் டாஸ்க் கொடுக்கப்படுகிறதாம். இதை வெறித்தனமாகப் பின்பற்றியவர்கள்தான் இறந்தும் போயிருக்காங்க.''

``கடைசியா இந்த நாசமா போன விளையாட்டு நம்ம நாட்டுக்குள்ளவும் வந்துருச்சா... பிள்ளைங்க என்ன விளையாடுறாங்கன்னு பெரியவங்க கேர்ஃபுல்லா கவனிக்கணும்...''

``நம்ம நாட்டுல இணைய விளையாட்டால மட்டும்தான் மரணங்கள் நடக்குதா, என்ன?''

``பின்ன..?''

``அரசாங்க அலட்சியத்தாலும் மரணங்கள் நடந்துட்டுதானே இருக்கு.''

``நீ என்ன சொல்றே ஆதிரா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுஷா... ஆதிரா... இனியா! - இருக்கு... ஆனா, இல்லை!

``உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில 60-க்கும் அதிகமான குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால இறந்திருக்காங்க. முன்னெச்சரிக்கை இல்லாம இத்தனை குழந்தைகளைப் பலி கொடுத்திருக்க அரசாங்கம்கூட ‘ப்ளூ வேல்’ விளையாட்டைவிட மோசமானதுதான்!''

``ஆதிரா, அரசாங்கம்கிறது தனிநபர் இல்ல.. நாம எல்லாரும் சேர்ந்ததுதான். எவ்ளோதான் கத்திக்கத்திக் குரல் கொடுத்தாலும் ஓட்டைகளை அடைக்கிறதுதான் இங்கே கஷ்டமா இருக்கு.''

``அதுக்கு, இது நடக்கணும்.''

``எது?''

`` `நீ படிச்சு என்னவாகப் போறே'னு யாராச்சும் கேட்டா... `நான் விவசாயி ஆகணும்; அரசியல்வாதியாகணும்'னு படிக்கிற இளைஞர்கள் எப்ப பதில் சொல்றாங்களோ அப்பதான் கொஞ்சமாச்சும் மாற்றம் நடக்கும்.''

``எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை.''

``அப்ப ஒரு காபி சொல்லு!''

``என்ன லூஸு... `டக்'குனு டாப்பிக் மாத்துற...''

``நீ `விவேகம்' ட்ரெய்லர் பார்க்கலையா?''

``ஓ... அதுல அஜித் சொல்ற டயலாக்தானே `காபி சொல்லு’ங்கிறது..?''

``ஆமா... உனக்கு ட்ரெய்லர் பிடிச்சிருக்கா?''

`` `ஆமா'ன்னும் சொல்லலாம்... `இல்லை'ன்னும் சொல்லலாம்.''

``இதுக்கு நீ காபியே சொல்லலாம்!''

``ஹாஹாஹா!''

``அப்புறம்... சாரா (sarahah) ஆப்ல உனக்கு தாறுமாறா கேள்விகள் வந்துச்சு போல?''

``சாரான்னா என்னன்னு சொல்லிட்டுப் பேசுங்க.''

``இதுக்குதான் சோஷியல் மீடியாவுல ஆக்டிவ்வா இருக்கணும்னு சொல்றது.’’

`` `சாரா'னு ஒரு ஆப். அதை இன்ஸ்டால் பண்ணிட்டு, அதுல நம்ம பெயரை ரெஜிஸ்டர் பண்ணணும். அதுக்கப்புறம் நம்ம ஐ.டி-யை சோஷியல் மீடியாவுல ஷேர் பண்ணினா, யார் வேணும்னாலும் அதுல வந்து கமென்ட் பண்ணுவாங்க. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, யார் நமக்கு மெசேஜ் அனுப்புறாங்களோ அவங்க பெயர் எதுவுமே நமக்குத் தெரியாது.''

``இதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு?''

``இருக்கே... நம்மகிட்ட நேருக்கு நேரா சொல்ல முடியாத விஷயங்களைக்கூட இந்த `ஆப்' மூலமா சொல்வாங்க.''

``கிட்டத்தட்ட அந்தக் காலத்துக்கு மொட்டக் கடுதாசி மாதிரியா?''

``அப்படியும் வெச்சுக்கலாம். இதுல பாசிட்டிவ்வும் இருக்கு... நெகட்டிவ்வும் இருக்கு.''

``இன்னிக்கு என்ன நாம பேசுற விஷயமெல்லாம் `இருக்கு... ஆனா, இல்லை' மாதிரியே இருக்கு!''

ஆமா... ஆமா... இருக்கு... ஆனா, இல்லை!’’

- கச்சேரி களைகட்டும்!

அனுஷா... ஆதிரா... இனியா! - இருக்கு... ஆனா, இல்லை!

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது, இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.
 

அனுஷா... ஆதிரா... இனியா! - இருக்கு... ஆனா, இல்லை!

விவேகம் ட்ரெய்லர் http://bit.ly/2vLcyRq

அனுஷா... ஆதிரா... இனியா! - இருக்கு... ஆனா, இல்லை!

மொட்ட கடுதாசியின் டிஜிட்டல் வெர்ஷன் சாரா ஆப்... என்ன ஸ்பெஷல்? #Sarahah http://bit.ly/2uNJwmL

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism