Published:Updated:

வனத்தில் ஒரு குருகுலம்!

வனத்தில் ஒரு குருகுலம்!
பிரீமியம் ஸ்டோரி
வனத்தில் ஒரு குருகுலம்!

வித்தியாசம்ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

வனத்தில் ஒரு குருகுலம்!

வித்தியாசம்ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

Published:Updated:
வனத்தில் ஒரு குருகுலம்!
பிரீமியம் ஸ்டோரி
வனத்தில் ஒரு குருகுலம்!

``இந்தியக் கலாசாரம் மற்றும் பண்பாட்டை உலகம் முழுக்கப் பரவச்செய்வதே என் நோக்கம்...” - கனிந்த புன்னகையுடன் சொல்கிறார் சுவாமினி பிரம்ம பிரகாசானந்த சரஸ்வதி.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் வனப்பகுதியில் குருகுலம் நடத்திவரும் இவர், தமிழ்ப்பெண்; மகப்பேறு மருத்துவர். 

நாக்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் தண்டகாரண்யம் வனப்பகுதியில் குருகுலத்தை நிறுவி, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியப் பாரம்பர்ய ஆன்மிகக் கருத்துகளைக் கற்பித்துவரும் சுவாமினியிடம் பேசினோம். ``ராசிபுரத்தில் பிறந்தேன். பெற்றோர் எனக்கு வைத்த பெயர் கீதா. தந்தையின் பணி காரணமாக மும்பைக்குக் குடிபெயர்ந்தது எங்கள் குடும்பம். பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து மகப்பேறு மருத்துவம் பயிலும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பூஜ்ய ஸ்வாமிஜி தயானந்தரின் பகவத்கீதை சொற்பொழிவைக் கேட்டேன். அது என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பூஜ்ய சுவாமிஜியிடம் பிறப்பு, இறப்பு, கடவுள் என என் மனதின் கேள்விகள் அனைத்துக்கும் விளக்கங்களைப் பெற ஆரம்பித்தேன். அவரின் பல்வேறு பணிகளுக்கிடையிலும் எனக்குப் பொறுமையுடன்  உபதேசங்கள் வழங்கினார்.

வனத்தில் ஒரு குருகுலம்!

உலகைத் துறந்து தவத்தில் ஈடுபட்டு மனித குலத்துக்கு என்னாலானதைச் செய்ய விருப்பம் மேலிட்டது. அயல்நாடுகளில் பணிபுரிய கிடைத்த வாய்ப்புகளை நிராகரித்து, திருமணம் செய்துகொள்ள மறுத்து, மகாராஷ்டிர - குஜராத் எல்லையில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியில் 12 ஆண்டுகள் மருத்துவ சேவை புரிந்தேன். சம்ஸ்கிருதம் கற்றேன். பூஜ்ய சுவாமிஜி கோயம்புத்தூர் ஆனைகட்டியில் குருகுலம் தொடங்கி நீண்டகால ஆன்மிகப் பயிற்சி வகுப்புகளை நடத்தியபோது, அங்கு சம்ஸ்கிருத ஆசிரியையாக பல ஆண்டுகள் சேவை செய்தேன். 1999-ல் முறைப்படி சந்நியாச தீட்சை பெற்றேன். 2001-ல் வேதாந்தம் கற்பிக்க நாக்பூர் நகருக்கு வந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வனத்தில் ஒரு குருகுலம்!

ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரின் பாதம்பட்ட புனித இடமான இந்த அடர்ந்த வனத்தில், தமிழகச் சிற்பக் கலை மற்றும் ஆகம விதிகளின்படி கோயில்கட்டி, கும்பாபிஷேகம் செய்தோம். 2004-ல் குருகுலம் செயல்படத் தொடங்கியது. இங்கு பயின்ற பலர் இந்தியா மற்றும் அயல்நாடுகளில் ஆன்மிகப் பிரசாரம் செய்கிறார்கள்.

ஆர்வமுடைய எவரும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் ஜாதி மத பேதமின்றி, பாலினப் பாகுபாடு இன்றி இங்கு பயிலலாம். உணவு, உடை, உறைவிடம் மற்றும் மருத்துவச் செலவு முற்றிலும் இலவசம். ஒரு தமிழ்ப் பெண்ணாக, தமிழர்களை நான் சற்று அதிகமாக எதிர்நோக்குகிறேன்!” - கைகள் கூப்பி முடித்தார் சுவாமினி.

இங்கு படிக்க விரும்புபவர்கள் www.arshavijnanagurukulamnagpur.org என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism