Published:Updated:

‘கனவுலகூட திடீர்னு ஐடியா வரலாம்!’ - `மெர்சல்' பட காஸ்ட்யூம் டிசைனர் கோமல்

‘கனவுலகூட திடீர்னு ஐடியா வரலாம்!’ - `மெர்சல்' பட காஸ்ட்யூம் டிசைனர் கோமல்
பிரீமியம் ஸ்டோரி
‘கனவுலகூட திடீர்னு ஐடியா வரலாம்!’ - `மெர்சல்' பட காஸ்ட்யூம் டிசைனர் கோமல்

ரசனைஆர்.வைதேகி

‘கனவுலகூட திடீர்னு ஐடியா வரலாம்!’ - `மெர்சல்' பட காஸ்ட்யூம் டிசைனர் கோமல்

ரசனைஆர்.வைதேகி

Published:Updated:
‘கனவுலகூட திடீர்னு ஐடியா வரலாம்!’ - `மெர்சல்' பட காஸ்ட்யூம் டிசைனர் கோமல்
பிரீமியம் ஸ்டோரி
‘கனவுலகூட திடீர்னு ஐடியா வரலாம்!’ - `மெர்சல்' பட காஸ்ட்யூம் டிசைனர் கோமல்

‘நான் மெர்சலாயிட்டேன்' என்று பாடாத குறைதான்... பாலிவுட்டின் பிரபல டிசைனர் கோமல் ஷஹானியின் இந்த இன்ப அதிர்ச்சிக்குக் காரணம், நடிகர் விஜய். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் `மெர்சல்' படத்தில் கோமல்தான் காஸ்ட்யூம் டிசைனர். ஏற்கெனவே  `ஜில்லா', `துப்பாக்கி', `தெறி' என ஹாட்ரிக் அடித்துவிட்ட கோமலுக்கு இது விஜய்யுடன் நான்காவது லக்கி பிரேக்.

``விஜய் சார்கூட நாலாவது படமா? உனக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் நடக்குதுனு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பொறாமையோட கேட்கறபோது வானத்துல பறக்கற மாதிரி இருக்கு. விஜய் சாருக்கு டிசைன் பண்றது எந்தளவுக்குச் சவாலானதோ, அதே அளவுக்கு ஜாலியானதும்கூட. விஜய் ஒரு ஸ்டைல் ஐகான். எந்த காஸ்ட்யூம்லயும் செம ஸ்டைலா இருப்பார். அதனால எங்களுக்கு வேலை ஈஸி. அதேநேரம், அவரோட முந்தைய படத்துலேருந்து அடுத்த படத்துல சின்னதா ஒரு புதுமையாவது காட்டியாகணும்கிறதுதான் சேலஞ்ச். இப்படியொரு மாஸ் ஹீரோகூட நாலு படங்கள்ல தொடர்ந்து  வொர்க் பண்ற வாய்ப்புக்குக் காரணம், அவர் என் திறமை மேல வெச்சிருக்கிற நம்பிக்கைதான். அதைக் காப்பாத்தற மாதிரி நானும் ஒவ்வொரு படத்துலயும் என்னால முடிஞ்சதைப் பண்ணிட்டிருக்கேன். இந்தப் படத்துல விஜய்யோட லுக், ரசிகர்கள் மத்தியில அப்ளாஸ் அள்ளும்கிறது நிச்சயம்...'' - ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டிஃபை செய்கிறது கோமலின் பேச்சு.

‘கனவுலகூட திடீர்னு ஐடியா வரலாம்!’ - `மெர்சல்' பட காஸ்ட்யூம் டிசைனர் கோமல்

மும்பையின் முக்கியமான பிசினஸ்மேன் விஷ்ணு ஷஹானியின் மகள், பாலிவுட் இயக்குநர் ஆஷிஷ் ஆர்.மோகனின் மனைவி என்று கோமலுக்கு  வேறு அடையாளங்களும் உண்டு.ஆனாலும், பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பிரபலங்கள் விரும்பும் காஸ்ட்யூம் டிசைனராக இருப்பதே கோமல் ஸ்பெஷல்.

``இன்டீரியர் டிசைனரான என் அம்மா, நேஷனல் அவார்டு வாங்கின காஸ்ட்யூம் டிசைனரும் என் கசினுமான ரேஸா... இவங்க ரெண்டு பேர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ஃபேஷன் டிசைனிங் முடிச்சுட்டு, ஒரு பொட்டீக்ல டிசைனரா வேலை பார்த்திட்டிருந்தேன். ஃபிலிம்பேர் பத்திரிகை அட்டைக்காக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு டிரெஸ் டிசைன் பண்ணினேன். அப்புறம் மிஸ் யுனிவர்ஸ் நேஹா துபியா, ஐஸ்வர்யா ராய், அக்‌ஷய்குமார், தீபிகா படுகோன், ப்ரியங்கா சோப்ரா, காஜல் அகர்வால் உள்பட நிறைய பேருக்கு டிசைன் பண்ணியிருக்கேன்.  ‘கோய் மில் கயா’ படத்துல ப்ரீத்தி ஜிந்தாவுக்கு டிசைன் பண்ணினது மூலமா பாலிவுட்ல அறிமுகமானேன். `180’ படத்துல சித்தார்த்துக்கும் ப்ரியா ஆனந்துக்கும் நித்யா மேனனுக்கும் டிசைன் பண்ணினது மூலமா தமிழுக்கு வந்தேன். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷன்ல `துப்பாக்கி' படத்துல விஜய்க்கும் காஜல் அகர்வாலுக்கும் டிசைன் பண்ணினதுக்குப் பிறகுதான் தமிழ் சினிமாவுல என் பெயர் பிரபலமானது. தேங்க்ஸ் டு தமிழ் சினிமா...'' - நன்றி நவில்கிறார் கோமல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கனவுலகூட திடீர்னு ஐடியா வரலாம்!’ - `மெர்சல்' பட காஸ்ட்யூம் டிசைனர் கோமல்

`` `துப்பாக்கி', `ஜில்லா'னு ரெண்டு படங்களுக்குப் பிறகு `தெறி'யில விஜய்யோட மூணு கெட்அப்புக்கும் டிசைன் பண்ணினேன். விஜய்க்கு ரொம்ப பெரிய மனசு. டிசைனர்ஸுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறவர். இதுவரைக்கும் அவருக்கு நான் டிசைன் பண்ணினதுல எதையுமே வேண்டாம்னே சொன்னதில்லை. சின்னதா மாற்றம் வேணும்னு நினைச்சா, அதை அவ்வளவு பணிவா சொல்வார்.   `மெர்சல்' படத்துலயும் அப்படித்தான்...'' - விஜய் புகழ் பாடும் கோமலிடம் சில கேள்விகள் கேட்டோம்...

`மெர்சல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஜல்லிக்கட்டு இளைஞர் போலத் தோற்றமளிக்கிறாரே... மும்பை டிசைனருக்கு தமிழ்க் கலாசாரம் பற்றித் தெரியுமா?

``ஒரு படத்துல வொர்க் பண்றதுக்கு முன்னாடி நான் டிசைன் பண்ணப் போற கேரக்டர்ஸைப் பத்தி முழுமையா ரிசர்ச் பண்ணிட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பேன். தமிழ்க் கலாசாரத்தைப் பத்தியும் நல்லாவே தெரிஞ்சுக்கிட்டுத்தான் வொர்க் பண்ணியிருக்கேன். விஜய்யோட லுக் பத்தி இதுக்கு மேல நான் சொல்ல முடியாது!''

‘கனவுலகூட திடீர்னு ஐடியா வரலாம்!’ - `மெர்சல்' பட காஸ்ட்யூம் டிசைனர் கோமல்

கோமலுக்கு மட்டும் தொடர்ந்து விஜய் மேஜிக் வொர்க் அவுட் ஆவது எப்படி?

``இதுல மேஜிக்னு ஒண்ணுமில்லை. ஹார்டு வொர்க் மட்டும்தான் பதில். குறுக்கு வழிகள் கைகொடுக்காது. எல்லா டிசைனர்ஸோட வொர்க்கையும் கவனிக்கணும்; அதேநேரம் நம்ம வேலையில அவங்களோட ஸ்டைல் கொஞ்சமும் வந்துடாம பார்த்துக்கணும். கனவுலகூட திடீர்னு ஒரு டிசைனோ, ஐடியாவோ வரலாம். அந்தளவுக்கு இருபத்தி நாலு மணி நேரமும் அலெர்ட்டா இருக்கணும்; அப்டேட்டடா இருக்கணும். வேலையில மட்டுமில்லை, வாழ்க்கையிலயும் ஜெயிக்க எனக்கு என் கணவர் சொல்லிக்கொடுத்த சிம்பிள் சீக்ரெட் சொல்லவா... செயற்கை தவிர்த்து உண்மையா இருக்கிறது!''

- டிம்பிள் சிரிப்பில் கொள்ளைகொள்கிறார் கோமல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism