Published:Updated:

அந்த அழகிய தருணங்களே வாழ்வின் பொக்கிஷங்கள்!

அந்த அழகிய தருணங்களே வாழ்வின் பொக்கிஷங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அந்த அழகிய தருணங்களே வாழ்வின் பொக்கிஷங்கள்!

ஸ்மைல் பேபி!மு.பார்த்தசாரதி

அந்த அழகிய தருணங்களே வாழ்வின் பொக்கிஷங்கள்!

ஸ்மைல் பேபி!மு.பார்த்தசாரதி

Published:Updated:
அந்த அழகிய தருணங்களே வாழ்வின் பொக்கிஷங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அந்த அழகிய தருணங்களே வாழ்வின் பொக்கிஷங்கள்!

ந்த மருத்துவமனையின் பிரசவ அறையில் சாந்தா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கிறார். அறையின் வெளியே தன் அப்பா விக்னேஷோடு நின்றுகொண்டிருக்கும் நான்கு வயது அனன்யாவால் அம்மாவின் வலியை உணர முடியவில்லை. ஆனால், இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னோடு விளையாட ஒரு குட்டித்தம்பி வந்துவிடுவான் என்பது மட்டுமே அவளுக்குத் தெரிந்திருக்கிறது. அடுத்த பத்து நிமிடங்களுக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டதும் வெளியே நிற்கும் அனைவரின் முகத்திலும் சந்தோஷம்.

தன் மகனை முதன்முறையாகக் கையில் ஏந்திய பூரிப்பில் விக்னேஷ்; குட்டித்தம்பியின் மெல்லிய கன்னத்தை வருடிக்கொடுக்கும் அக்கா அனன்யா; பிரசவ வலியை மறந்து அந்தக் காட்சியைக் கண்கொட்டாமல் பார்த்து மகிழ்ச்சியடையும் சாந்தா என அனைவரும் உற்சாகமாக இருக்கும் அந்தத் தருணத்தைத் தத்ரூபமாகப் படம்பிடிக்கிறார் சீனிவாசன். `எங்கள் வாழ்நாள் முழுவதற்குமான சந்தோஷத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது' என்று சொல்லி, சீனிவாசனை உணர்ச்சிபொங்க கட்டிப்பிடித்து நெகிழ்கிறார் விக்னேஷ்.

அந்த அழகிய தருணங்களே வாழ்வின் பொக்கிஷங்கள்!

முன்பெல்லாம் குழந்தைகளைப் படம் எடுத்தாலே வீட்டிலுள்ள பெரியவர்கள் சண்டைக்கு வருவார்கள்.  ``நானெல்லாம் சின்ன வயசுல எம்புட்டு அழகா இருப்பேன் தெரியுமா? ஆனா, எங்க பாட்டிதான் `போட்டோ புடிச்சா புள்ள உடம்புக்குச் சுகமில்லாம போயிடும்’னு போட்டோ எடுக்கவிடாம பண்ணிட்டா'' என்று பிள்ளைகளிடம் சொல்லும் அம்மாக்கள் நிறைய பேர் உண்டு. கிராமத்துப் பெரியவர்களிடம் இதுபோன்ற பல நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன. ஆனால், இப்போதுள்ள ஸ்மார்ட்போன் யுகம் அதற்கு `குட்பை’ சொல்லி யிருக்கிறது.

திருமணத்துக்குப் போட்டோ ஷூட் எடுப்பவர்கள் அப்படியே அடுத்த ஒரு வருடத்துக்கும் சேர்த்து கான்ட்ராக்ட் போட்டுக் கொள்கிறார்கள். பெண் கர்ப்பம் தரித்த மூன்றாம் மாதத்திலிருந்து வரிசையாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு போட்டோ ஷூட் என்று தொடங்கி, குழந்தைப் பிறப்பு வரையிலும் நீள்கிறது இந்த போட்டோ கான்ட்ராக்ட்.

“குழந்தைகளின் உலகம் அழகானது. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அதன் ஒவ்வொரு செயலிலும் வளர்ச்சியிலும் புதுப்புது மாற்றங்கள் நிகழும். முடிந்த அளவுக்கு முதல் ஆறு மாதத்துக்காவது குழந்தைகளைப் போட்டோ ஷூட் செய்யுங்கள். அந்த அழகிய தருணங்களை வாழ்வின் பொக்கிஷங்களாகப் பத்திரப்படுத்துங்கள்” என்கிறார் குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாக போட்டோ ஷூட் செய்யும் போட்டோகிராபர் சீனிவாசன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த அழகிய தருணங்களே வாழ்வின் பொக்கிஷங்கள்!

“நான் ஓசூரில் பிறந்து வளர்ந்தவன். இன்ஜினீயரிங் படித்திருந்ததால் போட்டோகிராபி பற்றியெல்லாம் எந்த விவரமும் தெரியாது. சென்னைக்கு வேலைக்காக வந்த பிறகு என் நண்பர்கள் எல்லோரும் கேமராவோடு சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய படங்களைப் பார்த்து கமென்ட்  சொல்லிக்கொண்டே இருப்பேன். அதை இப்படி எடுத்திருக்கலாம், இதை வேறொரு கோணத்தில் எடுத்திருக்கலாம் என்று சொல்லும்போது, `டேய்,  உனக்கு இயல்பாவே போட்டோகிராபில இன்ட்ரஸ்ட் இருக்கு. நீ ஏன் போட்டோகிராபி ட்ரை பண்ணக்கூடாது’ன்னு சொல்லி உசுப்பேத்திவிட்டார்கள். அதன்பிறகுதான் கேமராவையே கையில் எடுத்தேன். ஆரம்பத்தில் கண்ணில்படுவதையெல்லாம் கேப்ச்சர் பண்ணிட்டே இருந்தேன். அப்போதான் எனக்குக் குழந்தைகளைப் படம் எடுப்பதில் ஆர்வம் வந்தது.

அந்த அழகிய தருணங்களே வாழ்வின் பொக்கிஷங்கள்!

புராடெக்ட், வெடிங், ஃபேஷன்னு நிறைய போட்டோகிராபி பண்ணிட்டேன். ஆனா, என்னமோ தெரியல... குழந்தைகளைப் படம்பிடிக்குறதுல இருக்குற திருப்தி வேற எதுலயும் இல்ல. ஏன்னா, அவங்க மட்டும்தான் கேமராவைப் பார்த்து நடிக்கிறதில்லை. பெரியவங்களை போட்டோ எடுத்தா `மேக்கப் பண்ணிக்கிறேன், டச் அப் பண்ணிக்கிறேன்’னு சொல்லுவாங்க. அதுவே குழந்தைகளா இருந்தா... அவங்களுக்கு அழணும்னு தோணுச்சுன்னா அழுதுடுவாங்க; சிரிக்கணும்னு தோணுச்சுன்னா சிரிச்சிடுவாங்க. அதுதான் அவங்களோட இயல்பு... அதுவே சிறப்பு” என்பவர், போட்டோ எடுக்கும்போது குழந்தைகளைக் கையாள்வது பற்றியும் குறிப்பிட்டார்.

“அது ரொம்ப பெரிய சவால்தான். குழந்தைகளை போட்டோ ஷூட் செய்வதில் பெற்றோரைவிட போட்டோகிராபருக்குத்தான் அதிக அக்கறை தேவைப்படும். குழந்தை அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சில பெற்றோர் நாம் எது சொன்னாலும் செய்வார்கள். அந்த நேரத்தில் குழந்தையின் ஆரோக்கியம் கருதி நாம்தான் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.

அந்த அழகிய தருணங்களே வாழ்வின் பொக்கிஷங்கள்!

குறிப்பாக, குழந்தை பிறந்த ஐந்து மாதங்கள் வரையிலும் வீட்டில் வைத்தே போட்டோ ஷூட் பண்ணுவோம். வெளியே சென்றால் இன்ஃபெக்‌ஷன் ஆகக்கூடும். அதோடு, குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுக்க வேண்டியிருக்கும். அதுவே  ஆறாவது முதல் பத்தாவது மாதங்கள் வரையிலும் உள்ள குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லலாம். அந்த மாதங்களில் குழந்தை எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும்.

நான் ஒருமுறை கோவையில்  இரண்டு வயது பெண் குழந்தையைப் படம் எடுத்துக்கொண்டிருந்தேன். அவளுக்கு என் கேமராவின் லென்ஸை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. நான் எங்கிருந்து மறைந்து எடுத்தாலும் என் அருகே ஓடி வந்துவிடுவாள். அவளைச் சமாளிப்பதே போதும் போதும் என்றாகிவிட்டது.

அந்த அழகிய தருணங்களே வாழ்வின் பொக்கிஷங்கள்!

ஆனால், அந்தக் குழந்தையின் ஆர்வத்தை அவள் பெற்றோர் புரிந்து கொள்ளவே இல்லை. அவளை எப்படியாவது போஸ் கொடுக்க வைக்க வேண்டும் என்பதில்தான் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.  ஆனால், எனக்கு அந்தக் குழந்தையின் ஆர்வம் பிடித்திருந்தது.

அவள் மட்டுமல்ல, அவளைப் போன்ற குழந்தைகள் எப்போதும் ஆர்வத்தோடு இருப்பார்கள். புதிதாக ஒன்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தையும் தேடலையும் அவர்களிடமிருந்துதான் நான் கற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லும் சீனிவாசனின் கண்கள் தூரத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் பட்டாளத்தைக் கண்டதும் பளிச்சென்று மின்னுகின்றன.
 
ஸ்மைல் பளீஸ்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism