Published:Updated:

மனுஷி - சுகப்பிரசவத்துக்குச் சுலபமான வழி!

மனுஷி - சுகப்பிரசவத்துக்குச் சுலபமான வழி!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - சுகப்பிரசவத்துக்குச் சுலபமான வழி!

சுபா கண்ணன், ஓவியம்: ஸ்யாம்

மனுஷி - சுகப்பிரசவத்துக்குச் சுலபமான வழி!

சுபா கண்ணன், ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
மனுஷி - சுகப்பிரசவத்துக்குச் சுலபமான வழி!
பிரீமியம் ஸ்டோரி
மனுஷி - சுகப்பிரசவத்துக்குச் சுலபமான வழி!

‘தொண்டு, கடமை, தாய்மை போன்ற பண்புகள் பெண்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கின்றன. ஓர் ஆணின் அத்தனை பெருமைகளுக்கும் காரணமாக இருப்பதே பெண்ணின் பெருமை.’

- `பெண்ணின் பெருமை' நூலில் திரு.வி.க.

தன்னைச் சந்தித்துவிட்டுச் சென்ற சில மாதங்களிலேயே பவித்ரா திரும்பவும் வந்ததைக்கண்டு, காரணம் விளங்காமல் பார்த்தார் டாக்டர் கோதை.

``ஆன்ட்டி, நாள் தள்ளிப்போயிருக்கு. `பிரக்னென்சி கிட்'டில் பார்த்ததில் பாசிட்டிவா ரிசல்ட் வந்திருக்கு. உங்ககிட்ட பேசினா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னுதான் வந்தேன்.'' 

பவித்ராவின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்த கோதை, ``ரொம்ப சந்தோஷம். நான் இப்ப சொல்லப்போறதை குறுக்கே பேசாம கேட்டுக்கோ’’ என்றபடி கூறத் தொடங்கினார்.

மனுஷி - சுகப்பிரசவத்துக்குச் சுலபமான வழி!

``கருவைச் சுமப்பது முதல் பிரசவம் வரை உள்ள காலகட்டத்தை மன உறுதியாலும் நேர்மறை எண்ணங்களாலுமே சுலபமா கடக்கலாம். 60, 70-கள் வரை வீட்டுப் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகமா இருந்தது. மருத்துவமனைக்குச் செல்வது குறைவாகவே இருந்தது. வீட்டுக்கு மூத்த பெண், கைராசியான மருத்துவச்சி, தாதிப் பெண் என்று சிலர்தான் அப்போதெல்லாம் பிரசவம் பார்த்தாங்க. மக்களிடம் இதுபற்றிய மருத்துவ அறிவோ, மருத்துவ வசதிகளோ இல்லாத அந்தக் காலத்துல இயல்பான பிரசவங்கள் நிகழ்ந்தன. ஆனால், இப்போது அனைத்து வசதிகளும் இருந்தும்கூட பிரசவம் எளிதாக இல்லை’’ என்று சொல்லிக்கொண்டு வந்த கோதையைக் குறுக்கிட்டு,

``எதனால இப்படி ஏற்படுது... இதற்கு என்ன காரணம்?’’ என்று கேட்டாள் பவித்ரா.

``நீ கேட்டது யோசிக்கவேண்டிய விஷயம்தான்.    இதற்கு இன்றைய மருத்துவர்களோ, மருத்துவ வசதிகளோ காரணம் இல்லை.’’

``என்ன ஆன்ட்டி சொல்றீங்க... அப்ப யார் தான் காரணம்?’’

``நம் முன்னோர்தான். முன்பெல்லாம் கருவுற்ற பெண்களிடம் நம் முன்னோர்களுக்குக் கவனிக்கும் திறன், பொறுப்பு உணர்வு இருந்தது. அவர்கள் கர்ப்பிணியின் உடல், மனம் இரண்டையுமே வலிமையாக இருக்கும்படிச் செய்தனர். 

முதலில் அவர்கள் பிரசவத்தின்போது ஏற்படும் வலியைப் பொறுத்துக்கொள்ளும் வகையில் கருவுற்ற பெண்களை மனதளவில் தயார் செய்தனர். பிரசவ கால வலியைப் போக்கினாலே சுகப்பிரசவம் ஆகும் என்பதை அவர்கள் அனுபவத்தினால் தெரிந்துவைத்திருந்தனர். தனக்கு அடுத்த தலைமுறை பெண்களின் மனதில் வலியைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை அழுத்தமாக ஏற்படும்படி செய்தனர். பிற்காலத்தில் வரப்போகும் பிரசவ வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், `பெண்ணாகப் பிறந்தாலே எல்லாத்தையும் தாங்கித்தான் ஆகணும்', `அழ அழப் பெத்தாலும் அவதான் பெக்கணும்' போன்ற பழமொழிகளைச் சொல்லியே, பிற்காலத்தில் ஒரு பெண் சந்திக்கப்போகும் பிரசவ வலியை எதிர்கொள்ளும்விதமாக மனதைப் பக்குவப்படுத்தினர்.

அடுத்து பாட்டி, அத்தை போன்ற உறவுகளைச் சுட்டிக்காட்டி, `பல பெண்களும் வலி தாங்கித்தான் வருகிறோம். நாங்க நல்லாத்தானே இருக்கிறோம். உனக்கும் அதுபோலவே இருக்கும். பெண்ணாகப் பிறந்தால் வலி பொறுப்பது தப்பாது' என்று உறுதியான நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்வார்கள். திரும்பத் திரும்ப இப்படிச் சொல்லும்போது பெண்களுக்குப் பிரசவம் பற்றிய அச்சம் அடியோடு போய்விடும். இதுதான் சுகப்பிரசவத்துக்கு முக்கிய காரணம்’’ என்ற கோதையை குறுக்கிட்டு, பவித்ரா கேட்டாள்...

``நேர்மறை எண்ணங்களை எப்படி ஏற்படுத்தினார்கள் ஆன்ட்டி?’’

``வாழ்த்தும் முறையில்தான் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தினார்கள். ‘பிள்ளை குட்டிகளோடு சந்தோஷமாக இரு’ என்று வாயார மனமார வாழ்த்துவார்கள். பெண்கள் இதுபோன்ற ஆசி வார்த்தைகளைக் குழந்தை பருவத்தில் இருந்தே கேட்பதால், அவர்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் உறுதியாக நிலைத்து, பிரசவத்தை எதிர்கொள்ளும் மன வலிமையும் ஏற்படுகிறது.’’

``சரி ஆன்ட்டி, இத்தனை விஷயங்களுக்குப் பிறகும் குழந்தை கஷ்டமில்லாமல் பிறக்குமா என்ற கவலை ஏற்பட்டால் என்ன செய்வது?’’ என்று கேட்டாள் பவித்ரா.

``அதற்குதான் கருவுற்ற பெண்களிடம் வீட்டு வேலைகளைச் செய்தால் பிரசவம் சுலபமாக நிகழும் என்று சொல்லி, வீட்டு வேலைகளைச் செய்ய வைத்தனர். அக்காலப் பெண்களும் தன் தாய், பாட்டி ஆகியோர் சொல்லும் வீட்டு வேலைகளை உற்சாகமாகச் செய்தனர். அதனாலேயே, சுகப்பிரசவம் நடைபெறும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு இயல்பாகவே வந்துவிட்டது. மேலும், அக்காலத்தில் பிரசவம் வீட்டில் நிகழ்ந்ததாலும், பழகிய இடம் என்பதாலும், வீட்டில் இருக்கும் மூத்த பெண்கள் உடனிருக்கும் தைரியத்தாலும் கருப்பை இயல்பாக நெகிழ்ந்து பிரசவம் சுலபமாக நடைபெற்றது. இப்போதைய சூழலில் கருவுற்ற பெண்ணை மனதளவில் தயார்படுத்துவது நடைபெறுவதில்லை. ஊடகங்களில் காட்டப்படும் காட்சிகள், பிரசவ வலியில் அழும் கதாநாயகியின் முகபாவம் போன்றவற்றைத் தொடர்ந்து பார்க்கும்போது     `இதுதான் நிஜம்' என்றும், `பிரசவ வலி என்பது தாங்க முடியாததாக இருக்கும்' என்றும் நம்பத் தொடங்கிவிடுகிறது பெண்ணின் மனம். கருவுற்ற பெண்களின் மனதில் ஏற்படும் இத்தகைய சிக்கலும், இப்படியாகக் கருவுற்ற பெண்களின் மனதில் பதியச் செய்யும் தவறான தகவல்களுமே இன்றைய பெண்களின் பிரசவத்தைச் சிக்கலாக்கி விடுகின்றன’’ என்று பெண்களின் நிலையை விளக்கினார்.

``என்ன ஆன்ட்டி, பயத்தினால் பிரசவ வலி அதிகமாகுமா?’’ என்று கேட்டாள் பவித்ரா.

``ஆமாம்... பயத்தினால் கருவாய் கெட்டியாகிறது. திறந்துகொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. மற்ற தசைகளும் இறுக்கமாகி விடுவதால், அழுத்தம் அதிகமாகி வலியும் அதிகமாகி விடுகிறது. பிரசவத்தின்போது இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். கருப்பை வாய் திறக்கறதும், சிசுவின் தலை இறங்குதலும்தான் அந்த நிகழ்வுகள். புதிய இடம் பெண்ணின் மனதில் ஏற்படுத்தும் அந்நிய உணர்ச்சியானது கருப்பைவாய் திறந்துகொள்வதைத் தாமதப்படுத்தி விடுகிறது. ஆக, கருவாய் திறந்துகொள்வதிலும் உளவியல் பிரச்னைதான் காரணமாக அமைகிறது’’ என்றார் கோதை.

``ஆக, பிரசவ வலி அதிகமாவதற்கு உளவியல் ரீதியான சிக்கல்கள்தான் காரணம் என்றுதானே சொல்ல வருகிறீர்கள் ஆன்ட்டி?’’

``ஆமாம். இப்படியெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், வீட்டில் இருந்த பெரியவர்கள் கருவுற்ற பெண்ணைத் தொடர்ந்து கவனித்து வந்தனர். ஏதேனும் சிறிய மாற்றம் தெரிந்தாலும், உடனே மனதளவில் உறுதியை அதிகரிக்கச் செய்தார்கள்.’’

``அப்பாடா, இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு. என்னோட ஃப்ரெண்ட்ஸெல்லாம் பேசினதைக் கேட்டு நான் ரொம்பவே நெர்வஸா இருந்தேன். இப்ப ரிலாக்ஸாகிட்டேன். இனி. நான் சந்தோஷமா என் வயிற்றில் வளரும் குழந்தையோடு பேசப்போறேன்’’ என்று பூரிப்புடன் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பவித்ரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!