Published:Updated:

மன அழுத்தம் போக்கி ஆரோக்கியம் அளிக்கும் களரி! - அசத்தல் அம்மா `பத்மஸ்ரீ' மீனாட்சி

மன அழுத்தம் போக்கி ஆரோக்கியம் அளிக்கும் களரி! - அசத்தல் அம்மா `பத்மஸ்ரீ' மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
மன அழுத்தம் போக்கி ஆரோக்கியம் அளிக்கும் களரி! - அசத்தல் அம்மா `பத்மஸ்ரீ' மீனாட்சி

வீர மங்கைஉ.சுதர்சன் காந்தி, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

மன அழுத்தம் போக்கி ஆரோக்கியம் அளிக்கும் களரி! - அசத்தல் அம்மா `பத்மஸ்ரீ' மீனாட்சி

வீர மங்கைஉ.சுதர்சன் காந்தி, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
மன அழுத்தம் போக்கி ஆரோக்கியம் அளிக்கும் களரி! - அசத்தல் அம்மா `பத்மஸ்ரீ' மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
மன அழுத்தம் போக்கி ஆரோக்கியம் அளிக்கும் களரி! - அசத்தல் அம்மா `பத்மஸ்ரீ' மீனாட்சி

``போதிதர்மர்தான் களரியின் ஆஸ்தான குரு. அவர்தான் களரி என்ற தற்காப்புக் கலையைத் தோற்றுவித்தார். கராத்தே, குங்ஃபூ எல்லாம் அதன் மாற்றப்பட்ட வடிவங்களே’’ - மாணவர்கள் கைகளால் காற்றைக் கிழித்துப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் பின்னணி இசையுடன், இனிதான உரையாடலாக அமைந்தது ‘பத்மஸ்ரீ’ மீனாட்சி அம்மாளுடனான சந்திப்பு. இவர் 75 வயது கேரளப்பெண்மணி.

``களரியில் கத்தி, சிலம்பம் ஆகிய ஆயுதங்களுடன் பயிற்சி செய்பவர்களைப் பார்க்கும்போது, என்னையும் அறியாமல் எனக்குள்ளும் ஒரு வீரம் வரும். ஆனால், 1940-களில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் களரி கற்றுக்கொள்ளக் கூடாது என்ற நிலை இருந்தது. அதனால், எங்களுக்கு யாரும் களரி கற்றுக்கொடுக்க மாட்டார்கள். இதனால், ராகவன் என்பவர் அவரது சகோதரர்கள், நண்பர்களுடன் இணைந்து, வேறு ஓர் ஊரில் இருந்து ஒரு குருவை அழைத்து வந்து கேரளாவில் உள்ள வடகராவில் ‘கடதன்னடன் களரி சங்கப் பயிற்சிப் பள்ளி'யை ஆரம்பித்தார்.

மன அழுத்தம் போக்கி ஆரோக்கியம் அளிக்கும் களரி! - அசத்தல் அம்மா `பத்மஸ்ரீ' மீனாட்சி

களரி கற்றுக்கொள்ளும் இடம் பூமி மட்டத்தில் இருந்து ஆறு அடி பள்ளத்தில் இருக்க வேண்டும். அங்கு மண் குளிர்ச்சியாக இருக்கும், கிருமிகள் எதுவும் இருக்காது என்ற அறிவியல்தான் அதற்குக் காரணம். ஆண்கள் ஆர்வத்துடன் சேர்ந்த அந்தப் பள்ளியில், நான் உள்பட ஐந்து பெண்களும் சேர்ந்தோம். அப்போது எனக்கு வயது பத்து’’ என்றவர் அடுத்தடுத்து ஆச்சர்யங்களை அடுக்குகிறார்.

``அக்காலத்தில் விடுதலைப் போராட்டத்தில் அடிபட்டுவரும் மக்களுக்கு, மூலிகை மருத்துவ உதவி செய்வார் ராகவன்.  எனக்கு அவர்மீது தனி மரியாதையும் குருபக்தியும் இருந்தது; வெளிப்படுத்தாத காதலும்கூட. ஒருமுறை கோயில் விழாவில் அவரும் இன்னொருவரும் நடத்திய களரி சண்டை நிகழ்ச்சியில், அவருக்குத் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட நிற்க, அதைப் பார்த்த நான் மயங்கி விழுந்துவிட்டேன். அப்போது என் பிரியத்தைப் புரிந்துகொண்ட அவர், ஓரிரு நாள்களிலேயே எங்கள் வீட்டுக்கு வந்து பெண் கேட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மன அழுத்தம் போக்கி ஆரோக்கியம் அளிக்கும் களரி! - அசத்தல் அம்மா `பத்மஸ்ரீ' மீனாட்சி

எங்களுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள், எட்டு பேரக்குழந்தைகள். பிரசவ காலத்தில்கூட அவர் என்னை என் அம்மா வீட்டுக்கு அனுப்பியதில்லை. கர்ப்ப காலத்தில், ‘பள்ளியில் மாணவர்கள் களரி ஆடுவதைப் பார், அந்தச் சத்தத்தைக் கேள்’ என்று என்னை பயிற்சிக் கூடத்தில் அமர்ந்திருக்கச் செய்வார். நானும் லயித்து ரசித்துக்கொண்டிருப்பேன். அதனால்தானோ என்னவோ, என் குழந்தைகள் அனைவருக்கும் களரி ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. என் பேரப்பிள்ளைகளுக்கும் களரி கற்றுக்கொடுத்திருக்கிறேன். இப்படி மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் களரியைச் சுவாசிக்கிறோம்.

மன அழுத்தம் போக்கி ஆரோக்கியம் அளிக்கும் களரி! - அசத்தல் அம்மா `பத்மஸ்ரீ' மீனாட்சி

`இந்த வயதிலும் எப்படி உங்களால் களரியில் சிறப்பாகச் செயல்பட முடிகிறது?' என்று பலர் என்னிடம் கேட்பார்கள். இதற்கு காரணம், என் கணவர் எனக்குத் தந்த பயிற்சிதான். அவருடன் களரியில் மோதும்போது கிடைத்த பலம்தான் இன்றும் தொடர்கிறது. மேலும், ‘களரி மக்களைச் சென்றடைய வேண்டும்’ என்ற அவரின் நோக்கத்தை அவருக்குப் பின் நானும் விடாது தொடர்கிறேன் என்ற திருப்தி. இறப்பதற்குச் சில நாள்களுக்கு முன், ஓர் இடத்தில் களரியாட வருவதாக அவர் வாக்குக்கொடுத்திருந்தார். ஆனால், அதற்குள் அவர் மறைந்துவிட்டார். ஆனாலும், அவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அதே தேதியில் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு களரி ஆடினேன். இதுதான் அவரும் நானும்’’ என்றபோது, அவர் குரலில் அத்தனை அழுத்தம்.

``இந்தப் பள்ளியில் ஒரு வருடத்துக்கு 50 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் களரி கற்கிறார்கள். யாரிடமும் கட்டணம் வாங்குவதில்லை. கற்கும் களரியை எங்கள் மாணவர்கள் பிறருக்குக் கடத்துவதையே எங்களுக்கான குருதட்சணையாக ஏற்றுக்கொள்கிறோம். ஸ்பெயின், தாய்லாந்து, கொரியா என உலகின் பல நாடுகளிலிருந்தும் களரி கற்க இங்கு வரும் வெளிநாட்டவர்களும் இருக்கிறார்கள்’’ என்றவர், இன்றைய பெண்களுக்குச் சில வார்த்தைகள் பகிர்ந்தார்.

மன அழுத்தம் போக்கி ஆரோக்கியம் அளிக்கும் களரி! - அசத்தல் அம்மா `பத்மஸ்ரீ' மீனாட்சி

``இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் பதினாறு கால் பாய்ச்சலில் செல்வதைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. அதேநேரம், அவர்கள் தங்கள் பாரம்பர்யத்தையும் விடாமல் எடுத்துச்சென்று அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மொபைலில் தலைகவிழ்ந்து கிடக்காமல், நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியதும் அறிந்துகொள்ள வேண்டியதும் மிக முக்கியம். உலகத்துடனான தொடர்புதான் நம்மை அடுத்தடுத்தப் படிகளுக்கு எடுத்துச் செல்லும்!”

சாதனைப் பெண்மணியின் களரிப் பட்டாளத்தில் இன்னும் ‘பத்மஸ்ரீ’ பட்டாம்பூச்சிகள் உருவாக வாழ்த்துகள்!

இதுதான் களரிப் பயிற்சி!

சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண், பெண் அனைவரும் களரிப் பயிற்சி செய்யலாம். மேப்பயித்து, கோல்தாரி, அங்கதாரி, வெறும்கை என களரியில் நான்கு நிலைகள் உள்ளன.

மேயப்பயித்து என்பது உடல் வளைந்து கொடுப்பதற்கான பயிற்சி. கோல்தாரி என்பது சின்னக் கோல், சிலம்பம், ஒட்டா (வர்மக்கலை) ஆகியவைகொண்டு பயிற்சி எடுப்பது. மூன்றாவது, அங்கதாரி. இது திரிசூலம், பட்டா கத்தி, குத்து வாள், உருமி (சுருள் வாள்), கேடயம் போன்றவற்றைக்கொண்டு தாக்குதல், தடுத்தல் பயிற்சிகள் செய்வது. நான்காவது, வெறும்கை. கைகளை ஆயுதமாகக்கொண்டு சண்டையிடும் நிலை.

களரியால் என்ன பயன்?

* உடல் வலிமை அடைவதுடன் நோய் எதிர்ப்பு திறன் கிடைக்கும்.

*   உடல் நன்றாக வளைந்துகொடுக்கும். எலும்பு சார்ந்த நோய்களைத் தவிர்க்கும்.

ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அவ்வப்போது கை, கால் உணர்ச்சியற்று மரத்துப்போகும் நிலை இருக்காது.

மன அழுத்தம் தணிந்து ஆரோக்கியம் கிட்டும்.

பயிற்சியில் கொடுக்கப்படும் முக்கூட்டு என்னும் மருந்து மூட்டுவலி, முதுகுவலி ஆகியவற்றுக்கு நல்ல நிவாரணம் தரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism